என் மலர்
கன்னியாகுமரி
- 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார்
- வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் புறம் உள்ள கடலில் இன்று (புதன்கிழமை) காலை ஆண் உடல் மிதந்து வந்துள்ளது. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கடலில் மிதந்த உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவர் சிவப்பு நிற சட்டையும், சந்தனகலர் பேண்டும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி மூழ்கி இறந்தாரா? என்பது தெரியவில்லை.
இதற்கிடையில் அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்து உடலை கடலில் வீசியிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீ சா ருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கன்னியா குமரிக்கு வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் உள்பட 3பேர் மீது வழக்கு
- 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள தச்சன்பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெயசேகர்(வயது 42). வாகனம் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா(38). இவர்களுக்கு சொந்தமான வீட்டில் கடந்த 4 ஆண்டு களுக்கு முன்பு தச்சன்பரம்பை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் வாடகைக்கு குடி யிருந்தனர்.
வாடகை சரியாக கொடுக்காததால் அவர்களை ஜெயசேகர் தம்பதியர் காலி செய்ய கூறிவிட்டனர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜெயசேகர் அவரது மனைவி ஜீவா இருவரும் தச்சன்பரம் பில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் அவரது மனைவி சங்கீதா மற்றும் பிரசாத் ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கம்பியால் ஜெயசேகரை தாக்கியதாக தெரிகிறது. இதில் ஜெயசேகருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. தடுக்கவந்த ஜீவாவையும் கையால் தாக்கிய அவர்கள், ஜெயசேகர் பாக்கெட்டில் இருந்த ரூ.2ஆயிரத்தையும் எடுத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ள னர்.
பலத்த காயமடைந்த ஜெயசேகர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். காயம் அடைந்த ஜீவா குளச்சல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து ஜெயசேகர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக் குமார், சங்கீதா உட்பட 3 பேர் மீதும் இரணியல் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தார்
- பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் :
குழித்துறை ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிணமாக கிடந்தவர் மதுரை காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.
என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வ தற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பால கிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அவர் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார்.
மாயமான அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் குழித்துறை பகுதிக்கு வந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் பாதிப்பு
- பவுர்ணமி என்பதால் நேற்று காலை முதல் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரிகடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப் பு, ராட்சத அலைகள்ஆக்ரோ ஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவரு கின்றன.குறிப்பாக அமா வாசை, பவுர்ணமி போன்ற நாட்களில்இந்த இயற்கைமாற்றங்கள்நிகழ் ந்துவருகின்றன.இந்த நிலையில் நேற்று பவுர்ணமி என்பதால் நேற்று காலை முதல் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது.இன்னொருபுறம் கடல்சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த நிலை இன்றும் 2-வது நாளாகநீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர் மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும்அர பிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாக வும்காணப்பட்டது.இதனால்கன்னியா குமரி கடல் நடுவில் அமைந் து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்றுகாலை8மணிக்கு தொடங்க வேண்டியபடகு போக்குவரத்துதொடங்கப் படவில்லை.இதனால் இன்று காலைவிவேகானந் தர் நினைவுமண்டபம்மற்றும்திருவள்ளுவர் சிலையை படகில்சென்று பார்ப்பதற்காகபூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவுவாயி லில்காத்திருந்தசுற்றுலா பயணிகள் மாற்றத்துடன் திரும்பிசென்றனர். இதற்கிடை யில் காலை11மணிக்கு கடல்சகஜநிலைக்குதிரும்பி யது.இதைத்தொடர்ந்து 3மணி நேரம் தாமதமாக கால11மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்குபடகு போக்குவரத்து தொடங்கியது.அதன் பிறகுசுற்றுலா பயணிகள்விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபடகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடிபோன்றகடற்கரை கிராமங்களில்கடல்சீற்றமா க காணப்பட்டது.
இதனால் இந்த கடற்கரைகிராமங்களி ல் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பிவீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- அணைகள் பாசனக் குளங்களில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு
- பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாக மழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. சாரல் மழை மட்டுமே பெய்திருந்த நிலையில் வெயில் வாட்டி வதைத்தது.
குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் 287.4 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 100 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 65 சதவீதம் குறைவாகும்.
தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பாசன குளங்களிலும் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கி யுள்ளது.
இதனால் கும்பபூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டரில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது 3 ஆயிரம் ஹெக்டரில் நெற் பயிர்கள் அறுவடை ஆகும் நிலையில் உள்ளன. மீதமுள்ள நெற்பயிர் கள்அறுவடைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை அந்த நெற்பயிர்கள் அறு வடையாக காலதாமதம் ஏற்ப டும். எனவே பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
பாசன குளங்களை பொருத்தமட்டில் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளது. ஆனால் அனைத்து குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது. பேச்சிப்பாறை அணை இன்று காலை 28.99 அடியாக உள்ளது. அணைக்கு 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணை யில் இருந்து 685 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணைக்கு 32 கன அடிதண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.
- விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது
நாகர்கோவில் :
போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பது மற்றும் விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடை பெற்றது.
அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்த குழுக்கள் ஏற்படுத்தி ஒவ்வொரு மாதமும் தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதை பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்திடுமாறு கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப் பட்டது.
மாவட்டத்தில் 490 பள்ளிக்கூடங்களில் இது தொடர்பான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. எஞ்சி யுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி கூடங்களில் போதை பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு குழுக்கள் மாணவர்களை கொண்டும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை கண்காணிப்பா ளராகவும் நியமித்திடுமாறும் ஒவ்வொரு மாதமும் விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்து திட்டமிடப்பட்ட அறிக்கையினை சமர்ப்பித்திடு மாறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவு றுத்தப்பட்டது. மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சென்ற மாதம் 15 விழிப்பணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரக பகுதி தொழிற்சாலைளில் மக்களிடையே போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து நடத்திடுமாறு சமூகநலத்துறை அலுவலருக்கு தெரிவிக்கப் பட்டது.
ஊராட்சி, பேரூராட்சி அள வில் பொதுமக்களிடையேயும் விளிம்புநிலை மக்களிடையேயும் தொடர்ந்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட வேண்டும் என ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்கள் மூலம் தயார் செய்யப்படும் பொருட்களின் உறை மீது போதை விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளிலும், விசை படகு களிலும் மீன்வளத்துறை, காவல்துறை மற்றும் கடலோர காவல் படையினர் திடீர் தணிக்கை மேற்கொள்ளு மாறும் அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில் 19 மொத்த விற்பனை மருந்தகங்கள் மற்றும் 41 சில்லறை விற்பனை மருத்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவரால் தணிக்கை செய்யப்பட்டதில் வடக்கு சர்ச் ரோடு முகவரியிலுள்ள ஒரு மெடிக்கல் கடையில் விதி மீறல் மருந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் மருந்துக்கள் மற்றும் ஒப்பனை சட்ட படி விதி மீறல் நோட்டீஸ் வழங்கப் பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களை சுற்றி அமைந்துள்ள கடைகளில் புகையிலை போன்ற அனுமதியில்லா பொருட்களை பறிமுதல் செய்த வகையில் 19 கடைகளுக்கு, ரூ.23,800/- சுகாதாரதுறையினரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசார் மூலம் போதை பொருட்கள் பயன்படுத்திய வகையில் 31 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மதுவிலக்கு ஆயத்தீர்வை மூலமும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவு றுத்தப்பட்டது. பொதுமக்கள் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாடு ஏதேனும் கண்டறியப்பட்டால் அது குறித்து விபரங்களை 7010363173 தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த தகவல்களின் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட கலெக்டரால், தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அளவிலான கூட்ட குழு உறுப்பினர்களான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பி ரமணியம், பத்மனாபபுரம் சார்ஆட்சியர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், உசூர் மேலாளர் சுப்பிரமணியன், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
- குமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன.
- சிறுநீகர பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமையும் மட்டிப் பழத்திற்கு உள்ளது.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது.
அந்த வகையில் தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் விளையும் மட்டி வாழைப்பழங்களில் பெரும்பாலான வகைகள் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் மட்டி, செம்மட்டி ஆகிய 2 ரகங்கள் உள்ளன. இந்த இரண்டு ரகங்களுமே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளை விக்கப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்ட மண், மட்டிப்பழத்திற்கு ஏதுவானதாக இருப்பதால் விளைச்சலும் அதிகமாக உள்ளது. மட்டிவாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியவை. மட்டி வாழையை நட்ட ஒரு ஆண்டிற்குள்ளாகவே வாழைத்தார்களை அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகள் இருக்கும். தாரில் 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும்.
இந்த மட்டி வாழைப் பழத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மட்டி வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும்சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும் இதில் புரதம் மற்றும் உப்பு சத்து இருக்கிறது. இதனால் சிறுநீகர பிரச்சினைகளை தீர்க்கும் வல்லமையும் மட்டிப் பழத்திற்கு உள்ளது.
இந்த வாழைப்பழம் செரிமானத்துக்கு ஏற்றது மட்டுமின்றி, இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. நாள்பட்ட அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதிலிருந்து விடுபட முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மட்டிப்பழத்தை, பச்சிளம் குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த பழம் மிகவும் மிருதுவாகவும், இனிப்பாகவும், மணமாகவும் இருப்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளுக்கு விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதன்முதலாக மட்டி வாழைப்பழத்தை நசுக்கி சாப்பிட கொடுக்கும் பழக்கம் குமரி மாவட்டத்தில் இன்றளவும் இருந்து வருகிறது. மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மட்டிப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குமரி மாவட்டத்திற்கும், வாழை விவசாயிகளுக்கும் அந்தஸ்து கிடைத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நேந்திரம் வாழை, நாட்டு மருந்து, கிராம்பு, ஈத்தாமொழி நெட்டை தென்னை தேங்காய், மார்த்தாண்டம் தேன் உள்ளிட்டவைகளுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு வழங்கபபட்டுள்ள நிலையில், தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால் குமரி மாவட்ட வாழை விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு புலி புகுந்து ஆடு, மாடுகளை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
விரைவு படையினர் மற்றும் டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2 இடங்களில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 50 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலும் புலி சிக்கவில்லை. கடந்த 25 நாட்களாக வனத்துறையினர் சிற்றாறு பகுதிகளில் முகாமிட்டு புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் கடந்த 2 வாரங்களாக புலி நடமாட்டம் பற்றி எந்த அறிகுறியும் இல்லை. இதையடுத்து வெளியூர்க ளில் இருந்து வந்த அதிரடி படையினர் திரும்பி சென்றனர். புலி நடமாட்டம் இல்லாததையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிற்றாறு பகுதி பொதுமக்க ளுடன் வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது கால்ந டைகளை இரவு நேரத்தில் பாதுகாப்பாக அடைத்து வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தனர்.
மேலும் அந்த பகுதி மக்க ளும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். அதாவது சிற்றாறு பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் கோதையாறு வரை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
புலி நடமாட்டம் காரணமாக மாலை நேரங்களில் மாணவ-மாணவிகள் நடந்து வீட்டுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சிற்றாறு காலனி வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கலெக்டரிடம் பேசினார்கள். தற்காலிகமாக 2 மாத காலத்திற்கு பஸ்களை மாணவ-மாணவிகள் நலன் கருதி சிற்றாறு சிலோன் காலனி வழியாக இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் வனத்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர். இன்று அல்லது நாளை முதல் சிற்றாறு சிலோன் காலனி வழியாக அரசு பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
- நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், பாபு, பிராங்க்ளின், செல்வம், லிவிங்ஸ்டன், பி.எஸ்.பி.சந்திரா, சுரேந்திரகுமார், ரமேஷ் பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
01.01.2024 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 01.01.2024-ல் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும், புதியதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்பொழுதுள்ள பட்டியலில் நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
வருகிற 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களின் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
எனவே குமரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத்திற்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் தவறாமல் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ் - ராஜேஷ்குமார் பங்கேற்பு
- மத இன மொழி பண்பாட்டு உரிமைகளை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்
கன்னியாகுமரி :
மணிப்பூர் படுகொலை களை கண்டித்தும், மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும் மாத்திரவிளை வட்டார அரசியல் பிரிவு மற்றும் சிறுபான்மை அமைப்புகள் சார்பில் கருங்கலில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருங்கல் கருமாவிளை சந்திப்பில் தொடங்கிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ததேயு பிரேம்குமார் தலைமை தாங்கினார். பேரணியை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பேரணி கருமாவிளை, நியூ ஜங்சன், போலீஸ் நிலையம், ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு வழியாக கருங்கல் தபால் நிலையம் வந்தடைந்தது.
தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தை மாத்திரவிளை மறைவட்ட முதல்வர் மரிய வின்சென்ட் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் சுவாமித்தோப்பு பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரெத்தினம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், சூசைபுரம் அல்போன்சா கல்லூரி தாளாளர் ஆன்றனி ஜோஸ், பரமானந்தபுரம் சி.எஸ்.ஐ. போதகர் ஐசக் மெரின் சிங், பாலூர் ஊராட்சி தலைவர் டாக்டர் அஜித்குமார், குமரி மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் போதகர் ஞானதாசன், பொதுச்செயலாளர் மீரான் மைதீன், மாத்திரவிளை வட்டார அரசியல் குழு தலைவர் வக்கீல் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியை கில்பர்ட் லிங்சன் ஒருங்கிணைத்தார்.
பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணிபாய், வர்த்தகர் சங்க தலைவர் கருங்கல் ஜார்ஜ் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
போராட்ட முடிவில் மத இன மொழி பண்பாட்டு உரிமைகளை பாதிக்கும் பொது சிவில் சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- பி.டி.செல்லப்பன் தலைமையில் நடந்தது
- கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி :
கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளையில் சம்பந்தப் பட்டவர்களை விரைவில் கைது செய்யகோரி தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது.
குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.டி.செல்ல ப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கமணி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சுரேஷ் பிரகாஷ், மாநில இலக்கிய அணி இணை செயலாளர் வீரவேணாடன் ராஜா, பத்மநாபபுரம் நகர செயலாளர் டேனியல், ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
அமைப்பு செயலாளர் கோலப்பன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் ஜெங்கின்ஸ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகர், குமரி மேற்கு மாவட்ட அமமுக செயலாளர் ஸ்டீபன், குமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்றோஸ், மாவட்ட துணை செயலாளர் உஷா, மாவட்ட அணி செயலாளர்கள் ரெஞ்சன், குமார், சாந்தகுமார், ராஜேஸ், சுஜாதா, நாதன், லூக்காஸ், பெனட்ராஜன்.
ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிவகுமார், பிரின்ஸ், சிவகுமார், ஆசிர் சேம்ராஜ் ராஜேஸ், ரெத்தின சாமி, பேரூர் செயலாளர்கள் ஜெஸ்டின், ஜெகன், ரமேஷ், எட்வின் அஜித் பிரிட்டோ, குலசேகரம் அ.ம.மு.க. பேரூர் செயலாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பிடி.செல்லப்பன் பேசியதாவது:-
கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் காய்கறிகளின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்து விட்டது. தக்காளி விலை ரூபாய் 200-ஐ தாண்டி விட்டது.அதனை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
- மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை.
- சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர்
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் ஆன்றனி. இவரது மகன் செபாஸ்டின் (வயது 38). சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். செபாஸ்டின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே காரியாவிளையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி உள்ளார்.
இந்த வீட்டினை செபாஸ்டின் தாயார் சாயின்மேரி (68) தினமும் காலை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செபாஸ்டின் மனைவி அனுஸ்ரீயின் தந்தை இறந்துபோனார்.
இவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள செபாஸ்டின் சிங்கப்பூரிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். பின்னர் கொச்சி சென்று மாமானாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு நேற்று காரியாவிளை வந்தார். பின்னர் இரவு மனைவி, 2 குழந்தைகளுடன் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இன்று காலை தாயார் சாயின் மேரி வழக்கம்போல் காரியவிளை வீட்டை பார்க்க வந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பின் பக்கம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் மேல் மாடி அறைகளை உடைத்து, பீரோவையும் உடைத்துள்ளனர். மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை. சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள செபாஸ்டினை தொடர்புக்கொண்டால் தான் முழு விபரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சொத்து பத்திரம் ஒன்றையும், சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






