என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு
    • லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை சாலை பகுதிகளில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு தண்ணீர் கொண்டு செல்வ தற்காக ராட்சத பைப் லைன்கள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது பைப் லைன் கள் உடைந்து தண்ணீர் வீணாவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே சாலை களின் நடுவில் உள்ள பைப் லைனை மாற்றிவிட்டு இரும்பு பைப்லைன் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலை யில் புத்தளம் சந்திப்பு பகுதி யில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட்டு குடிநீர் திட்ட தற்கான பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளி யேறியது. லேசான அளவு தண்ணீர் வெளியேறியதால் பெரிதாக இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

    அந்த வழியாகத்தான் கனரக வாகனங்களும் சென்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென பைப் லைனில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புத்தளம் சந்திப்பு பகுதியில் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்த பைப் லைனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

    சம்பந்தப்பட்ட ஊழி யரை தொடர்பு கொண்டு அந்த பைப் லைனில் தண்ணீரை நிறுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது. பைப்லைனில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ராட்சத பள்ளமும் ஏற்பட்டது. சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது.

    இதனால் அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கூட்டுக் குடிநீர் பைப்லை னில் மிகப்பெரிய உடைப்பு ஏற் பட்டதையடுத்து தண்ணீர் விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது.

    குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதை சீரமைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக ராட்சத பைப்பு களை வெளியிடங்களில் இருந்து கொண்டு செல்ல வரவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    ஜே.சி.பி. எந்திரம் மூலமாக உடைப்பு ஏற்பட்ட பகுதியை தோண்டி சேத மடைந்த பைப் லைனை மாற்றிவிட்டு புதிதாக பைப்லைன்அமைக்க குடி நீர் வடிகால் வாரிய அதிகா ரிகள் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இன்று மாலை அல்லது நாளைக்குள் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதி காரிகள் தெரி வித்தனர். கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைனை சரி செய்த பிறகு அந்த பகுதியில் சாலை சீரமைப்பு பணியை மேற் கொள்ளவும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குளிர்சாதன பெட்டிகள் அதிகரிப்பு
    • 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    நாகர்கோவில் :

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் சாதாரண மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப புதிய ரெயில்கள் இயக்குவதை மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் ஏதேனும் புதிய ரெயில்கள் இயக்கப்பட்டாலும் அவை முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்களுக்கு பதிலாக சாதாரண எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது உயர்வகுப்பு மக்கள் மட்டும் பயணம் செய்யும் படியாக அதிக கட்டணத்துடன் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சிலிப்பர் பெட்டிகளை அகற்றி விட்டு குளிர்சாதன பெட்டிகளை அதிக அளவில் இணைத்து வருகின்றனர்.

    சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2006-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் வாராந்திர ரெயிலில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் பெட்டிகளில் 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படுகிறது. அதற்கு வசதியாக பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் சென்னையிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது 5 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் என ஆறு பெட்டிகளை எடுத்து விட்டு 6 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.

    இவ்வாறு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் நிலைக்கு மறைமுகமாக தள்ளப்படுகிறார்கள்.

    தற்போது 2 அடுக்கு படுக்கை பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் ரூ.425 ஆகும். மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் 1110 ரூபாய் ஆகும். இரண்டு பெட்டிகளுக்கும் இடையே உள்ள கட்டண வேறுபாடு 685 ரூபாய் ஆகும்.

    2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் 64 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    முன்பதிவில்லாத பெட்டி குறைக்கப்பட்டுள்ளதால், அதில்பயணிக்கும் சுமார் 200 முதல் 500 பயணிகள் பயணம் செய்ய முடியாது. அல்லது அவர்கள் தற்போது உள்ள 3 பெட்டிகளில் இட நெருக்கடிக்கு இடையே வட நாட்டு பயணிகள் போன்று கழிவறையில் உள்ளே இருந்து பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது
    • கடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி டென்னிசன் ரோடு பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருடப்பட்டது. இது குறித்து வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கார்திருட்டு தொடர்பாக களியக்காவிளையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தவுடன் திருடப்பட்ட காரையும் மீட்டனர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டனி டம் போலீசார் விசாரணை நடத்திய போது கார் திருட்டு வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மணிகண்டன் கொடுத்த தகவலின் அடிப்படையில் களியக்காவிளையை சேர்ந்த ஜெயன் (வயது59) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசார் ஜெயனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    திருவனந்தபுரம் கருமானூர் பகுதியை சேர்ந்தவர் சுஜின்(33). இவரது சொகுசு காரை நித்திரவிளை பணமுகம் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் அனில்மோன் இடத்தில் நிறுத்தியிருந்தார். கடந்த 30-ந்தேதி காரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதுகுறித்து நித்திரவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் காப்புக்காடு பகுதியில் திருடப்பட்ட கார் நின்றதை பார்த்த பொதுமக்கள் அந்த வந்தவர்களை பிடிக்கமுயன்றனர். அப்போது காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

    ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பாறசாலை இஞ்சிவிளை பகுதியை 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த கடத்தல் வழக்கில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அஜித் 21 சரத் 20 மேலும் ஒரு 16 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை உபக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணுமாமூடு, களியல், அருமனை பிரிவு களுக்குட்பட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் வினியோக செயற் பொறியாளர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கண்ணுமாமூடு பிவுக்குட்பட்ட அம்பலக்கா விளை, கொட்டற கோணம், மாங்கோடு, ஐந்துளி, மற்றும் காஞ்சியோடு ஆகிய பகுதிகளிலும், களியல் பிரிவுக்குட்பட்ட பிலாங்காலை, பீலிகோடு மற்றும் ஆலஞ்சோலை ஆகிய பகுதிகளிகளிலும், அருமனை பிரிவுக்குட்பட்ட குஞ்சாலுவிளை, காவூர்கோணம், பாம்புவளச்சான், மற்றும் காரோடு ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள்
    • ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புன்னைநகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள மங்களம் காம்ப்ளக்ஸ் மாடியில் செயல்பட்டு வந்த மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் விற்பனை நிலையம் நாளை முதல் கீழ் தளத்தில் செயல்பட உள்ளது.இதன் திறப்பு விழா நாளை (3-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வர வேற்கிறார்கள். இதுதொடர்பாக அதன் உரிமையாளர் பிரவீன் ஜோ கூறியதாவது:-

    மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இல்லங்களில் மற்றும் உள்ளங்களில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் ஒரு கார்டு. ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது.

    திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம் தொடர்ந்து பொதுமக்கள் நல்ல ஆதரவை அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று ஆய்வு
    • பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

    நாகர்கோவில் :

    அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்ப டுத்தப்பட உள்ளது. இதே போல் குழித்துறை ரெயில் நிலையத்தையும் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி டெல்லியில் இருந்து காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

    இதை யடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சி நடத்தப்படும் இடம் மற்றும் மேடை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டார். எந்த அளவில் மேடை அமைக்க வேண்டும் என்ற விவரங்களை தெரிவித்தார். மேலும் ரெயில் நிலையத்தின் வசதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் குழித் துறை ரெயில் நிலையம் சென்றும் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின்போது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு தன்வர் பிரகுல் குப்தே, ரெயில்வே மேலாளர் முத்துவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ரெயில்வே துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    • செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்
    • கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம்

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 57). இவர் செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார். ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இவர் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

    கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது, விநாயகர் கோவில் அருகில் ஒரு பவுன் தங்க கொலுசு கிடந்ததை கண்டு எடுத்தார். உடனே அவர் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டி னர். கோவில் வளாகத்தில் கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • கட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது
    • பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானஉள்நாட் டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டுசெல் கிறார்கள்.

    இந்தகோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி அஸ்திவாரத்தோடு நின்று போய் விட்டது. ராஜகோபுரம் கட்டுமான பணி நின்று போய் பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

    எனவே இந்த கோவிலுக்குமிகப் பிரம்மாண்டமானவகையில் ராஜகோபுரம் கட்டவேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகள் பல கட்டமாக எடுக்கப்பட்டு கடைசியில் தோல்வியில் முடிந்ததுஉள்ளது.

    கடைசியாக கடந்தசிலஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் வடக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாசல் மற்றும் கோவிலின் கிழக்குப் பக்கம் கடற்கரையையொட்டி அமைந்துள்ள கிழக்கு வாசல் ஆகிய இடங்களில் இரட்டை ராஜகோபுரம் கட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த இரட்டைராஜகோபுரம் கட்டும் பணியும் முதல்கட்ட ஆய்வோடு கிடப்பில் போடப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க.அரசு பொறுப் பேற்ற பிறகு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற் கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இது சம்பந்தமாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம்கட்டநடவடிக் கை மேற்கொள்ளும்படி அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் பயனாக குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறிவுரையின் பேரில் நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஸ்தபதி செந்தில், குமரிமாவட்ட திருக்கோவில்களின் மராமத்து பிரிவு பொறியாளர் ராஜ்குமார், அறநிலையத்துறை சர்வேயர் அய்யப்பன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் ஆகியோர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவது தொடர்பாக ஏற்கனவே கட்டப்பட்டு பாதியில் நின்று போன ராஜகோபுரத்தின் அஸ்திவார பகுதியை நிலஅளவீடு செய்து முதல் கட்டபூர்வாங்க பணியை தொடங்கினர்.

    இந்த புதிய ராஜகோபுரம் 9 நிலையுடன் 120 அடி உயரத்தில் அமைய உள்ளது.

    • எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
    • பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன அப்போது அம்மனுக்கு பல்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 150 பவுன் எடையுள்ள4 தங்ககாசு மாலை பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனை பகவதிஅம்மனுக்கு பவுர்ணமி தோறும் அணிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத பவுர்ணமியான நேற்று இரவு பகவதி அம்மனுக்கு தங்க காசு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன் பிறகுபலவண்ண மலர்களால்பகவதிஅம்மனு க்கு புஷ்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம்,நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், மற்றும் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் குடும்பத்தினரும் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி வடக்கு ரதவீதியில் மூன்று முகம் கொண்ட முத்தாரம்மன் கோவில் அமைந்துஉள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மாலையில் சாயராட்சை தீபாராதனை நடந்தது.பின்னர் இரவு7-மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை நடத்தினார்கள்.

    அதன் பிறகு இரவு 8மணிக்கு விநாயகர், முத்தாரம்மன் மற்றும் அதன் பரிவார தெய்வங்களான ஸ்ரீ உச்சினி மாகாளிஅம்மன், சுடலை மாடசாமி, பலவேசக்கார சாமி, முண்டன் சாமி, பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.
    • உச்சக்கால பூஜையின்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தினமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

    இந்நிலையில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் மண்டைக்காட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு காலை முதலே மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர்.அவர்கள் கடலில் புனித நீராடி,பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.இதனால் கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய பகுதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.உச்சக்கால பூஜையின்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டனர்.

    • நாகர்கோவிலில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • மதுரையில் வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    மதுரையில் அ.தி.மு.க. சார்பில் எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம் வரவேற்று பேசினார்.

    மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ணதாஸ், இளைஞர் அணி இணை செயலாளர் சிவ செல்வராஜன், மேற்கு மாவட்ட அவை தலைவர் சிவ குற்றாலம், வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் சலாம், நிர்வாகிகள் மேரி கமலா பாய், பார்வதி அல்போன்சா, ஆர்.ஜே.கே.திலக், சில்வெஸ்டர், ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின்விசு, கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், கோபால் சுப்ரமணியம், சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, , அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, இளை ஞர் பாசறை செயலாளர் பரமசிவம், அமைப்பு செயலாளர் பச்சைமால், மேற்கு மாவட்ட செய லாளர் ஜான் தங்கம் ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.

    முடிவில் 11-வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், முன்னாள் நகர செயலாளர் கள் சந்திரன், சந்துரு மற்றும் வெங்கடேஷ் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாணவர் அணி முன்னாள் மாவட்டச் செயலாளர் ரவீந்திரவர்சன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், ஆனக்குழி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்ட தற்கு வாழ்த்து தெரிவிப்பது,

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டில் குமரி மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் குடும்பத்தோடு பங்கு பெறுவதுடன் வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தர பாடுபட வேண்டும்,

    அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க வேண்டும்.

    அ.தி.மு.க.வின் திட்ட ங்கள் மற்றும் சாதனை களை தெருமுனை பிரசா ரங்கள், திண்ணை பிரச்சா ரங்கள் மூலம் துண்டு பிரசு ரங்களாக வெளியிட்டு மக்க ளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    தக்காளி விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அரிசி பற்றாக்குறை, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப்பதிவில் முறைகேடு ஆகியவற்றுக்கு காரணமான தி.மு.க. அரசை கண்டிப்பது.

    ஊழல் குற்றங்கள் செய்த வர்கள் யாராக இருந்தா லும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் ஊழல் செய்து மக்களை ஏமாற்றியவர் இலாகா இல்லாத நிலையில் ஜெயிலில் இருக்கும்போதும் அமைச்சர் பதவியை கொடுத்து போற்றி புகழ்கின்ற தமிழக முதல்-அமைச்சரை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×