search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள்
    X

    நாகர்கோவில்-குழித்துறை ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள்

    • ரெயில்வே ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று ஆய்வு
    • பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார்

    நாகர்கோவில் :

    அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெயில் நிலையத்தின் முன் பகுதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்ப டுத்தப்பட உள்ளது. இதே போல் குழித்துறை ரெயில் நிலையத்தையும் மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி வருகிற 6-ந் தேதி டெல்லியில் இருந்து காணொலி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

    இதை யடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக ரெயில்வே ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சி நடத்தப்படும் இடம் மற்றும் மேடை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டார். எந்த அளவில் மேடை அமைக்க வேண்டும் என்ற விவரங்களை தெரிவித்தார். மேலும் ரெயில் நிலையத்தின் வசதிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் குழித் துறை ரெயில் நிலையம் சென்றும் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின்போது ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு தன்வர் பிரகுல் குப்தே, ரெயில்வே மேலாளர் முத்துவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பிரதமர் மோடி காணொலி மூலமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ரெயில்வே துறை அதிகாரிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×