என் மலர்
கன்னியாகுமரி
- வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
- டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவரை பரிசோதனைக்காக குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஸ்கேன் சென்டர் ஒன்றில் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை குழந்தை கருவில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஒரு குழந்தை வளர்ச்சி குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் இளம்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வளர்ச்சி குறைவாக உள்ள குழந்தையை கருக்கலைப்பு செய்ய சம்மதம் தெரிவித்தனர். டாக்டர் குழுவினர் இளம்பெண்ணுக்கு வளர்ச்சி குறைவான குழந்தையை கருக்கலைப்பு மூலமாக அகற்றினர். பின்னர் பரிசோதனை செய்து பார்த்தபோது மற்ற குழந்தை நலமாக இருப்பதாக கூறினார்கள்.
இதையடுத்து அந்த இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது மற்றொரு குழந்தையும் இறந்து வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த இளம்பெண்ணை உடனடியாக மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உறவினர்கள் டாக்டரின் கவனக்குறைவால் குழந்தை இறந்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் டாக்டர் தரப்பினரும் புகார் கூறியிருந்தனர். இருதரப்பு புகார் மீதும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
- திருவனந்தபுரம் மஞ்சப்ப டையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது
நாகர்கோவில், ஆக.3-
சுசீந்திரம் அருகே ஆசிராமம் பகுதியில் சங்கிலி பூதத்தான், இசக்கியம்மன், மாடன்தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (3-ந்தேதி) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
கடந்த 28-ந்தேதி திருக்கால் நாட்டுடன் கொடை விழா தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை தீபாராதனை, நையாண்டி மேளம் ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு குடியழைப்பு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கி றது.
நாளை (4-ந்தேதி) காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6 மணிக்கு கலச பூஜை, 6.30 மணிக்கு அஷ்டாபிஷேகம் தொடர்ந்து களபம் சார்த்துதல் நடக்கிறது. 9 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், தொடர்ந்து வில்லிசை நடக்கிறது. 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு, 11 மணிக்கு சாஸ்தா சுவாமிக்கு தீபாராதனை, தொடர்ந்து கோவில் குளத்தில் இருந்து கும்ப நீர் எடுத்து கோவில் வந்தடைதல் ஆகியவை நடக்கிறது. மதியம் மகா தீபாராதனை, அன்னதானம், உஜ்ஜியினி மாகாளியம்மனுக்கு பொங்கல் வழிபாடு, அலங்கார தீபாராதனை, மேளம், கரகாட்டம், வில்லிசை, இரவு அலங்கார தீபாராதனை, ஊட்டு படைத்தல், மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை மங்கல இசை, மதியம் 1 மணிக்கு மஞ்சள் பாலுக்கு அக்னி மூட்டுதல் அம்மன் மஞ்சள் பால் குளியல், பூப்படைப்பு தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. கோமரத்தார்கள் மஞ்சள் நீராட ஊர் சுற்றி வலம் வருதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
5-ந்தேதி முழுவதும் திருவனந்தபுரம் மஞ்சப்படையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 11-ந்தேி 8-ம் கொடை விழாவை முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, தீபாரா தனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
ஆடி மாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.
- ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் ரூ.6 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது வடசேரி பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. அந்த இருக்கைகள் அனைத்தும் அகற்றப்பட்டு புதிய இருக்கைகள் அமைக் கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களை சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் பிளாட்பாரங்கள் சீர மைக்கும் பணி நடை பெற்றது.
பிளாட்பாரத்தில் உள்ள தரைகள் அகற்றப்பட்டு புதிய தரைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் புத்தம் புதுபொலிவுடன் காட்சியளிக்கிறது. தற்பொ ழுது பஸ் நிலையத்தின் நடுவில் உள்ள பிளாட்பா ரத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது. இந்த பிளாட்பாரத்தின் தரைகள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றப்பட்டது. இந்த பிளாட்பாரத்தில் தான் பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு ஏசி ஓய்வறை ஒன்று இருந்தது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியே ஓய்வறை இருந்தது.
இந்த ஓய்வறையில் கடந்த சில நாட்களாகவே குளிர்சாதன வசதி செயல்படாமல் இருந்தது. ஒரு சில பயணிகள் மட்டுமே இந்த ஓய்வு அறையை பயன்படுத்தி வந்தனர். இதனால் போதிய பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. பஸ் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையடுத்து ஓய்வறையை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து நேற்று இரவு ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பிளாட்பாரத்தில் இருந்த பயணிகளின் ஓய்வு அறை அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பிளாட்பாரத்தில் உள்ள தரைகளை அகற்றும் பணி இன்று காலை நடந்தது. இந்த பணிகளை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவ டைந்ததும் கன்னியாகுமரிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பிளாட்பா ரத்தின் வேலையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நாகர்கோவில் பஸ் நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே அந்த ஓய்வ றையை மாற்றும்போது இட வசதி அதிகமாக கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தற்போது ஓய்வுஅறை அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பயணிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் பயணி களுக்கு வசதியாக ஓய்வு அறை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றனர்.
- போதிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை
- 60 நாள் தடைக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்று திரும்பியது
கன்னியாகுமரி
குமரி மேற்கு கடற்கரை யில் விதிக்கப்பட்ட 60 நாள் மீன் பிடி தடைக்காலம் ஜூலை 31-ந் தேதி நள்ளிர வுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து குளச்சல் கடல் பகுதியில் இருந்து கடந்த 1-ந் தேதி விசைப்படகுகள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றன.
ஆழ்கடல் பகுதியில் தான் கணவாய், இறால், புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். இந்த மீன்கள் உணவுக்காக வெளியூர் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர கிளி மீன்கள், செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்களை பற்பசை தயாரிப்பு ஆலை மற்றும் மீன் எண்ணை ஆலைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.
ஆழ்கடல் பகுதிக்கு சென்ற படகுகளில் 3 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. இந்த படகுகளில் கிளி மீன்கள் ஓரளவு கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக்கூடத்தில் குவித்து விற்பனை செய்தனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கிளி மீன்கள் தலா ரூ.2 ஆயிரத்துக்கு விலை போனது. இது முந்தைய காலம் ரூ.4 ஆயிரத்து 500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது. மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
மேற்கு கடற்கரையில் 60 நாள் தடையை முன்னிட்டு மீன் ஆலைகள் இயங்கவில்லை. தற்போது தடை நீங்கி உள்ளதை அடுத்து இந்த ஆலைகள் மீண்டும் இயங்க தொடங்கிய பின் தான் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை
- 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் போக்குவரத்து விதிமுறை களை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஆட்டோக்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வருபவர்களுக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவர்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலையில் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல் லச்சாமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அதிக மாணவிகள் இருந்தது தெரியவந்தது.
மாணவிகள் ஒவ்வொரு வரும் மடியில் இருந்தவாறு பயணம் செய்தனர். ஒரே ஆட்டோவில் 9 கல்லூரி மாணவிகள் இருந்தனர். 3 பேர் பயணம் செய்ய வேண்டிய ஆட்டோவில் 9 பேர் பயணம் செய்ததையடுத்து ஆட்டோ டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஏற்கனவே இவருக்கு அதிக மாணவிகளை ஏற்றி வந்ததாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது முறையாக ஆட்டோ டிரைவர் சிக்கியதால் அவருக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் நாகர்கோ வில் நகர் முழுவதும் ஹெல்மெட் சோதனை யிலும் போலீசார் ஈடுபட்ட னர். மணிமேடை, வடசேரி, கோட்டார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை களில் ஹெல்ெமட் அணி யாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
பெண்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். இன்று சுமார் 50-க்கும் மேற்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் நோ பார்க்கிங் கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
- நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
- கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்
நாகர்கோவில் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் சார்பாக கட்டிட பொருட்களின் கண்காட்சி நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் நாளை (4-ந்தேதி) தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை 3 நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கட்டிட பொருட்களின் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன் திறந்து வைக்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அகில இந்திய முன்னாள் தலைவர் என்ஜினீயர் வேதானந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் நிறுவன தலைவர் என்ஜினீயர் ஜஸ்டின்பால் கவுரவ விருந்தினராக கலந்துகொள்கிறார். கட்டிட பொருட்களின் கண்காட்சியின் நிறைவு நாளான 6-ந்தேதி நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த கண்காட்சியில் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கண்டுகளிக்க மற்றும் அதன் உபயோகத்தை தெரிந்து கொள்வதற்கு வசதியாக அமைந்துள்ளது. கட்டிட பொருட்களின் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் தலைவர் என்ஜினீயர் காசிநாதன், பில்ட் எக்ஸ்போ தலைவர் என்ஜினீயர் கோவிந்தன், பில்ட் எக்ஸ்போ துணை தலைவர் என்ஜினீயர் சரவணா சுப்பையா, பில்ட் எக்ஸ்போ செயலாளர் என்ஜினீயர் தாமஸ் பிரேம்குமார், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா கன்னியாகுமரி சென்டர் செயலாளர் என்ஜினீயர் சந்திரசேகர், பில்ட் எக்ஸ்போ துணை செயலாளர் என்ஜினீயர் ராஜேஷ் குமார், பில்ட் எக்ஸ்போ பொருளாளர் ஆல்பர்ட் நெல்சன் மற்றும் முன்னாள் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகிறார்கள்.
- மாலைமலர் செய்தி எதிரொலி
- கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டில் குழித்துறையில் இருந்து பாலவிளை, ஈத்தவிளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகில் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. பாலவிளை ஈத்தவிளை பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் இந்த சாலை வழியாக தான் அலுவலங்களுக்கும் பள்ளிக்கும் செல்வார்கள்.
இந்த சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. வாக னங்களோ பொது மக்களோ செல்ல முடியாமல் மிகவும் அவதிபட்டனர். மேலும் இந்த சாலை வழியாக செல்லும் சில வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் பல முறை கோரிக்கை வைத்தும் இந்த சாலை சீரமைக்க படாமல் கிடந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஒருவர் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் இல்லை என்றால் தான் தீ குளிக்க போவதாக மண்எண்ணை பாட்டிலுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
மேலும் பொது மக்கள் சேர்ந்து இந்த சாலை சீரமைக்கப்படா விட்டால் போராட்டம் நடத்த போவதாக அறி வித்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற குழித்துறை நகராட்சி நிர்வாகம் கடந்த 2 மாதத்திற்கு முன் சாலை சீரமைக்கும் பணியை தொடங்கியது. அந்த வழியாக வாகனங்களோ பொது மக்களோ செல்ல முடியாத வாறு சாலையின் முன் பகுதியை அடைத்துள்ளனர். 2 மாதங்களாக மாற்று பாதைவழியாக செல்வதால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பெரும் சிர மத்துக்கு ஆளாகி வந்தனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம் கடந்த 2 வாரங்களுக்கு முன் பாலவிளை, ஈத்தவிளை சாலையில் இண்டர்லாக் பதிப்பித்து அப்டியே கிடப்பில் போடப்பட்டது. மேலும் வாகனங்களோ பொதுமக்களோ செல்லாத வாறு சாலையின் முன் பகுதியில் பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து மாலைமலரில் விரிவாக செய்தி பிரசுர மானது. இதைதொடர்ந்து சாலை பணி தொடங்கப்பட்டு இன்று முதல் வாகனங்கள் செல்வதற்கு சாலை திறக்கப்பட்டது. பொது மக்களும் வாகன ஓட்டிகளும் நிம்மதி யடைந்தனர்.
- சாலை மிகவும் பழுதடைந்துள்ள இடத்தை மட்டும் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடை பெற்றது
- பழுதடைந்துள்ள இடத்தில் ஆங்காங்கே ஜல்லி மட்டும் போட்டு சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு நகராட்சிக் குட்பட்ட பல சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றால், முந்தைய சீரமைப் புக்கு பிறகு 3 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் 2020-ம் ஆண்டு இங்கு சாலை செப்பனிடப் பட்டுள்ளதாக கணக்கில் உள்ளது.
இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்துள்ள இடத்தை மட்டும் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடை பெற்றது. குன்னிச்சாம் விளை-பண்ணிக்கம்விளை சாலையில் பழுதடைந்துள்ள இடத்தில் ஆங்காங்கே ஜல்லி மட்டும் போட்டு சென்றுள்ளனர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் கொல்லங் கோடு நகராட் சிக்கு உட்பட்ட சாலைகள் செப்பனிடுதலில் பல முறைகேடுகள் நடந்தி ருப்பதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடன டியாக நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
நாகர்கோவில்:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் குமரிமாவட்டம் வழியாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துக்கள் நடந்து வருவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 10 சக்கர வாகனங்களில் 28 டன் எடையில் மட்டுமே கனிவளங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனிம வளங்களை கொண்டு செல்ல 2 வழித்தடங்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புத்தேரி வழியாக கனிம வளங்களை கொண்டு செல்வதுடன் மீண்டும் அதே வழியாக வாகனங்கள் திரும்பி வருவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் சாலைகள் சேதம் அடைவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
இந்நிலையில் இன்று காலை புத்தேரி பகுதி பொதுமக்கள் சார்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் டவுன் டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் நடத்த பாரதிய ஜனதா மீனவர் அணி பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்த பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புத்தேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே உள்ள எருத்தாவூர் பகுதியை சேர்ந்தவர் வின்ஸ் (வயது 50), தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் மனைவி மற்றும் மகன் பிரிந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் வின்ஸ் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவர் கதவை சாத்தி விட்டு தூங்கி உள்ளார்.
காலையில் அவரது வீட்டுக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வின்ஸ் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்ப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வின்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வின்ஸ் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல், ஆக.3-
திருவட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 64). இவர் நெய்யூர் சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
தற்போது பரம்பை பகுதியில் ரெயில்வே மேம்பாலம் பணி நடந்து வருவதால், வில்சன் பரம்பை பஸ் நிறுத்தத்தில் இறங்கி தண்டவாளத்தை கடந்து வேலைக்குச் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் அவர், தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த வில்சன் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், இரணியல் போலீஸ் நிலையம் மற்றும் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த ரெயில்வே போலீசார், வில்சன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
கன்னியாகுமரி :
திருவட்டார் அருகே உள்ள வட்டவிளை தேமாணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 35), இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார்.இவரதுமனவைி சுபி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்த சுனில்குமார், சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நினைத்துள்ளார். இதற்காக பலரிடம் பணம் கேட்டு வந்தார் ஆனால் பணம் கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் சுனில்குமார் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று அவரை சாப்பிட வருமாறு மனைவி சுபி அழைத்துள்ளார். அப்போது, எலி மருந்து (விஷம்) சாப்பிட்டேன் என்று கூறிய சுனில்குமார் மயங்கி விழுந்தார். உடனே சுபி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை ஆற்றூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சுனில்குமார், நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுனில்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சுபி, திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குபதிவு செய்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.






