என் மலர்
கன்னியாகுமரி
- 3 நாட்கள் ஆன பிறகும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
- கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் பக்கம் உள்ள கடலில் கடந்த 2-ந்தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டி ருந்தது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த வாலிபரின் பிணத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி முழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை கொண்டு வந்து கடலில் வீசினார்களா? அல்லது அவர் வேறு எங்காவது கடலில் மூழ்கி இறந்து அவரது உடல் அலையில் இழுத்து கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி கடற்கரை யில் கரை ஒதுங்கியதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? என்பது குறித்து 3 நாட்கள் ஆன பிறகும் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீ சார் திணறி வருகிறார் கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபரின் சட்டை மற்றும் பேண்டில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால் இந்த நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
- புதிய ரயில்கள் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் குமரி மாவட்ட மக்கள்
- தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
கன்னியாகுமரி:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரூ.11 கோடியே 38 லட்சம், குழித்துறை ரெயில் நிலை யத்துக்கு ரூ.5.35 கோடியும் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் ரெயில் நிலையத்தின் முன் பகுதி மேம்படுத்தப்பட உள்ளன. பயணிகளுக்கு எந்த மாதிரியான வசதி தேவை என்பதை ஆராய்ந்து அந்த பணிகளும் செய்யப் பட உள்ளன. இந்த பணிகளுக்கான தொடக்கத்தின் அடிக்கல் நாட்டு விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நேரத்தில் குமரி மாவட்டத் திற்கு புதிய ரெயில்களுக்கான அறிவிப்பு வருமா? என்பது மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு பாராளு மன்ற தேர்தலுக்கு பிறகு கன்னியா குமரி மாவட்டத்திற்கு புதிய ெரயில்கள் எதுவும் அறிவிக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் கடைசி எல்லையான குமரி மாவட்டத்தில் இருந்து ஒரு ெரயில் இயக்கப்பட்டால் அது,தமிழகத்தின் முக்கிய அனைத்து நகரங்களையும் (திருநெல்வேலி, மதுரை, திருச்சி) இணைத்து அனைத்து மாவட்ட மக்களுக்கும் நேரடியாக பயன்படும் படியாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்க ளுக்கு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சுமார் 70 கி.மீ தூரம் தான். இருந்தாலும் 750 கி.மீ தூரம் கொண்ட சென்னை தான் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஆதலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் படியாக திருநெல்வேலி, மதுரை மார்க்கம் தான் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் இந்த மார்க்கத்தில் புதிய ெரயில்களை இயக்க தொடர்ந்து மறுத்து வரு கிறார்கள். ஆகவே தமிழகம் மார்க்கம் அதிக ெரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர்கள், சில ரெயில்களை நீட்டித்து இயக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-
தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிபாதை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆகவே சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒருசில ெரயில்களை, தமிழகத்தின் தெற்கே உள்ள கடைசி மாவட்டமான கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக தாம்பரம் - ஐதராபாத் தினசரி ெரயில் மற்றும் சென்னை சென்ட்ரல்-டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களையும் திருச்சி, மதுரை வழியாக கன்னியா குமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழி யாக தாம்பரத்துக்கு தற்போது வாரம் 3 முறை இயக்கப்படும் ரயிலை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும். இது மட்டு மல்லாமல் நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் வாராந்திர ரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து மங்களுருக்கு தினசரி இரவு நேர ெரயில் வசதி இல்லை. இந்த தடத்தில் தினசரி இரவு நேர ெரயில் இயக்க வேண்டும் என்பது 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதற்கு திருவனந்தபுரம் - மங்களூர் (16347-16348) இரவு நேர ெரயிலை நாகர்கோவில் அல்லது திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
வேளாங்கண்ணி மாதா கோவி லுக்கு செல்பவர்கள் வசதிக்காக தற்போது இயக்கப்பட்டு வரும் மதுரை-புனலூர் தினசரி ெரயிலை திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரையுமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்கும் பணியினை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், தூத்தூர் ஊராட்சி முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூசை பிரடி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண், தூத்தூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சாரா, பங்குதந்தை சூசை ஆன்றனி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?
- நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.
சிதம்பரம் நகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுகள் பீ. டபுள் .யு .டி. ரோடு வழியாக செட்டிகுளம் சிக்னலை கடந்து அங்குள்ள பெரிய வாய்க்காலில் சென்று கலக்கிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மழை நீர் வடிகால்கள் ,கழிவுகள் மற்றும் சகதிமணல்களால் அடிக்கடி நிரம்பி விடுகின்றன. இதனால் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்ல முடியாமல் உடைப்புகள் வழியாக வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.
அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழை நீர் வடிகால்கள் மேல் உள்ள ஸ்லாப்புகளை உடைத்து, அகற்றி அடைப்பை சரி செய்து முடித்த பிறகு தான் மீண்டும் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதால் ஸ்லாப்புகள் அடிக்கடி மாற்றபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி சீரமைத்தாலும் இந்த செலவை வசதிகள் கருதி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தொழில திபர்கள் பொதுமக்கள் ஆகியோரே கூடுதலாக செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
ஆண்டுக்கு 2முறை இது போன்ற செலவுகளை வியாபாரிகள் பொதுமக்கள் சந்திக்க வேண் டியதாககூறு கிறார்கள்.பாதாள சாக்கடை பணி யின் போது உண்டான மணல் சகதிகழிவுகளே மழை நீர் வடிகால்களில்தேங்கி இது போன்ற அடைப்பு களை அடிக்கடி ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஸ்லாப்புகளைஉடைத்து வியாபாரிகள் மற்றும் மாநகராட்சிக்கு செலவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழை நீர் வடிகால்களை ஆழமாக தூர்வாரி மீண்டும், மீண்டும் அடைப்புகள் ஏற்படா வண்ணம் தடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்செலவு ,சுகாதார சீர்கேடு உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி தொழிலதிபர்கள், வியாபா ரிகள் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
- இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.
இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்யாய கிரா மின் கவுசல்ய யோஜனா (கிராமப்பபுற திறன் பயிற்சி) போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் வினாக்கள், தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக 155330 எனும் தொலைபேசி எண் சேவை மையம் தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பு மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். தமிழகத் தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசி அல்லது கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு திட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி பெற முடியும்.
குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சி கள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுய உதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்கு தல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியன குறித்தும் விளக்கங்கள் பெறலாம்.
மேலும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளை ஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறு வனங்கள் மூலம் வழங்கப் படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதேபோல் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங் கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் ஆகியன குறித்தும் தகவல்கள் பெறலாம்.
எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் 155330 அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்று பயன டையலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- இந்த பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது இந்த பதவிக்கு அழகு சேர்க்கிறது
- கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது நமக்கு பெருமை
இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ''இந்திய ராணுவத்தின் உயர் பதவியான மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் புளோராவிற்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது இந்த பதவிக்கு அழகு சேர்க்கிறது. இவர் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது நமக்கு பெருமை சேர்க்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். இவர் கடந்த 5-1-1965-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உண்டு. மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.
- நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.
- கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
நாகர்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மருதன் கிணறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் தற்பொழுது சங்கரன்கோவில் நல்லரசன் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வல்லரசுவை ஈத்தாமொழி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க வல்லரசுவை அழைத்து வந்தனர். ஜெயில் வாசலில் இருந்து வல்லரசு போலீஸ் பிடியில் இருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு தப்பி ஓடிவிட்டார். வல்லரசு தப்பி ஓடியது குறித்து நாகர்கோவில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். இந்த நிலையில் வடசேரி பஸ் இளைய பகுதியில் வெளியூர் தப்பி செல்வதற்காக நின்று கொண்டிருந்த வல்லரசுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்திலும் வல்லரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய 3 மணி நேரத்தில் கைதியை பிடித்த போலீசாருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் வல்லரசு தப்பி சென்றபோது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
- செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.
நாகர்கோவில்:
இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். இவர் கடந்த 5-1-1965-ம் ஆண்டு பிறந்தார்.
இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உண்டு. மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர்.
இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதுபற்றி இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சகோதரர்கள் அந்தோணி சாமி, ஜான் பிரிட்டோ ஆகியோர் கூறியதாவது:-
இந்திய நாட்டிற்காக நாங்கள் பணியாற்றியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அதிலும் எங்களது சகோதரி இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசமாகவும், மன நிறைவாகவும் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
- பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது
கன்னியாகுமரி :
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற்று வருகிறது இவ்வாண்டு நடைபெறும் 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் தொடக்க விழா நடைபெற்றது.
நகராட்சி சேர்மன் பொன், ஆசைதம்பி தலை மை தாங்கினார். துணை தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். பக்க காட்சி காண்டிராக்டர் பால்ராஜ், திருவட்டார் பஞ். யூனியன் தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி. தி.மு.க மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மேல்புறம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வர்த்தக அணி நகர தலைவர் ஷாஜி லால், உண்ணாமலைக்கடை பஞ். தலைவர் பமலா, என்ஜினியர் பேரின்பம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, ஜூலியட் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஆட்லின் கெனில், ரீகன், விஜு, ரத்தின மணி, விஜயலட்சுமி, அருள்ராஜ், மினி குமாரி, ஜலீலா ராணி, ரவி, சர்தார் ஷா, ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, றோஸ்லெட், வக்கில் ஷாஜி குமார் மற்றும் நகர வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆணையாளர் ராமதில கம் நன்றி கூறினார்
பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது பக்க காட்சியை இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார்.
பொருட்காட்சி வரும் 21-ந் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது பொருட்காட்சி முக்கிய தினமான ஆடி அமாவாசை வரும் 16-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது இன்று முதல் கபடி போட்டி ஆரம்பமாகிறது.
- நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.
- அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம்
கன்னியாகுமரி, ஆக.3-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை மட்டும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கவுடியர் அரண்மனை சார்பில் நிச்சயிக்கப்படும் தேதியில் நடைபெறும். நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி நிறைபுத்தரிசி பூஜை வருகிற 10-ந்தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.15 மணி வரை நடக்கிறது.
அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. அதன்பின்னர் நெற்கதிர்கள் மேள தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைகளை கோவில் மேல்சாந்திகள் நடத்துகின்றனர். சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது.
பின்னர் அந்த நெற்கதிர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிரை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டி தொங்க விடுவார்கள்.
இவ்வாறு நெற்கதிர்களை கட்டி தொங்க விடுவதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். மேலும் இந்த நெற்கதிர் மணிகளை வயலில் தூவினால் அந்த போகம் சாகுபடி செழித்தோங்கும்.
- விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
- கலைமணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப்பில் கவிதாலயா விழா குழுவினர் செய்திருந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் சைமன் நகரை தலைமையிடமாக கொண்டு, அஞ்சுகிராமத்தில் கிளை நிறுவனம் அமைத்து செயல்பட்டு வருகிறது கவிதாலயா நாட்டியபள்ளி. இந்த நாட்டிய பள்ளி குமரி மாவட்டத்தின் சிறந்த நாட்டிய பள்ளிக்கான விருதினை பெற்றுள்ள நிறுவனம் என்பது குறிப்பி டத்தக்கது. இப்பள்ளியின் சலங்கை அணி விழா கோட்டார் இடலாக்குடியில் அமைந் துள்ள எம்.டி.பி. கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 13 மாணவிகள் சலங்கை அணி செய்தனர். நிகழ்ச்சியில், கலைமாமணி விஜய்வசந்த் எம்.பி., புதுச்சேரி சங்கீதா சலங்கை நாட்டியாலயா இயக்குநர் கலைமாமணி ராஜ மாணிக்கம், புதுச்சேரி கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் இயக்குநர் மற்றும் நாட்டிய ஆராய்ச்சி மேற்பார்வை யாளர் கலை மாமணி மரிய ஸ்டெல்லா, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சிவகுமார் சிவாஜி, பாரத கலைமாமணி சூசடிமா சூசன் (கத்தார்), அழகிய பாண்டிபுரம் அனுகிரஹா சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சதீஷ் குமார், மெற்றில்டா சதீஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திருச்சி கலை காவேரி கலைக் கல்லூரி இயக்குநர் மற்றும் செயலாளர் அருட் தந்தை லூயிஸ் பிரிட்டோ கலந்து கொண்டு சலங்கை பூஜை செய்யும் குழந்தைகளை ஆசிர்வதித்தார். கவிதாலயா நாட்டிய பள்ளி யில் பரதம், வாய் பாட்டு, மேற்கத்திய நட னங்கள் முறையே பயிற்று விக்கப்படு கின்றது. ஆண்டு தோறும் தேர்வுகள் நடத்தப் படுகிறது. குளோபல் ஆர்ட்ஸ் அகாடமி (யு.கே), அமெரிக்கா முத்தமிழ் யூனிவர்சிட்டி (யு.எஸ்.ஏ.) ஆகிய பல்கலைக்கழகத்தின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
பட்டயபடிப்பு முடிக்கும் தருவாயில் உள்ளவர்க ளுக்கு ஆசிரியர் பயிற்சியும் அளித்து அதற்கான தகுந்த தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப் படுகிறது. மாணவிகளுக்கு பரத நாட்டியத்தில் முறையே பயிற்சி அளித்து சலங்கை பூஜை அதனை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வைக்கப்படுகிறது. சலங்கை பூஜை விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டிய கலைமணிகள் கவிதா மற்றும் நிஷா கண்காணிப் பில் கவிதாலயா விழா குழுவினர் செய்திருந்தனர்.






