என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டால்கள்"

    • 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
    • பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற்று வருகிறது இவ்வாண்டு நடைபெறும் 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.

    நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சி சேர்மன் பொன், ஆசைதம்பி தலை மை தாங்கினார். துணை தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். பக்க காட்சி காண்டிராக்டர் பால்ராஜ், திருவட்டார் பஞ். யூனியன் தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி. தி.மு.க மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மேல்புறம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வர்த்தக அணி நகர தலைவர் ஷாஜி லால், உண்ணாமலைக்கடை பஞ். தலைவர் பமலா, என்ஜினியர் பேரின்பம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, ஜூலியட் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஆட்லின் கெனில், ரீகன், விஜு, ரத்தின மணி, விஜயலட்சுமி, அருள்ராஜ், மினி குமாரி, ஜலீலா ராணி, ரவி, சர்தார் ஷா, ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, றோஸ்லெட், வக்கில் ஷாஜி குமார் மற்றும் நகர வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆணையாளர் ராமதில கம் நன்றி கூறினார்

    பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது பக்க காட்சியை இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி வரும் 21-ந் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது பொருட்காட்சி முக்கிய தினமான ஆடி அமாவாசை வரும் 16-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது இன்று முதல் கபடி போட்டி ஆரம்பமாகிறது.

    ராமநாதபுரத்தில் கருவாடு, விருதுநகரில் காராசேவு போன்ற உள்ளூர் பொருட்களை மதுரை ரெயில்வே நிலையங்களில் விற்க ஸ்டால்கள் தயார் நிலையில் உள்ளன.
    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் ‘ஒரு நிலையம்: ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் உள்ளூர் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  மதுரை, நெல்லை ரெயில் நிலையங்களில் முறையே சுங்குடி சேலை, பனை பொருட்கள்   விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது என்று அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சியில் மக்ரூன், ராமேசுவரத்தில் கடல் பாசி, கோவில்பட்டியில் கடலை மிட்டாய், விருதுநகர்- சாத்தூரில் காராச்சேவு, தென்காசி- செங்கோட்டையில் மூங்கில் பொருட்கள், ராமநாதபுரத்தில் கருவாடு, திருச்செந்தூரில் பனை பொருட்கள், காரைக்குடியில் ஆத்தங்குடி டைல்ஸ், பழனியில் பஞ்சாமிர்தம், பரமக்குடியில் மிளகாய் வத்தல், ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள், சங்கரன்கோவிலில் மாம்பழம் உள்ளிட்ட விவசாய பொருட்கள், சிவகாசியில் டைரிகள், நோட்டு புத்தகங்கள், மானாமதுரையில் மண்பாண்ட பொருட்கள், புதுக்கோட்டையில் பலாப்பழம், சிவகங்கையில் செட்டிநாடு கொட்டான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, கொடைக்கா னல் ரோட்டில் பன்னீர் திராட்சை, திருமங்கலத்தில் கைலிகள், ஒட்டன்சத்திரத்தில் வெண்ணை, அம்பாசமு த்திரத்தில் பத்தமடை கோரைபாய், மணப்பாறையில் முறுக்கு, புனலூரில் மிளகு, கொட்டாரகராவில் முந்திரி ஆகியவற்றை விற்பதற்கான ஸ்டால்கள் அமைக்க விருப்ப மனு கோரப்பட்டு உள்ளது. 

    இதற்கான மனுவை www.sr.indianrailways.gov.in  இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 5-ந் தேதி மாலை 3 மணி வரை மதுரை கோட்ட அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.  srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கும் அனுப்பலாம்.

    ரெயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை  விற்க 15 நாட்களுக்கு எந்த கட்டணமும் இல்லை.   பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள் மற்றும் அரசு அனுமதியுடன் பொருட்கள் தயாரிக்கும் அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9003862967 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தித் தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
    ×