search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆசிராமம் சங்கிலி பூதத்தான், இசக்கியம்மன் கோவில் கொடை விழா
    X

    ஆசிராமம் சங்கிலி பூதத்தான், இசக்கியம்மன் கோவில் கொடை விழா

    • மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
    • திருவனந்தபுரம் மஞ்சப்ப டையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது

    நாகர்கோவில், ஆக.3-

    சுசீந்திரம் அருகே ஆசிராமம் பகுதியில் சங்கிலி பூதத்தான், இசக்கியம்மன், மாடன்தம்புரான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா இன்று (3-ந்தேதி) தொடங்கி வருகிற 5-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    கடந்த 28-ந்தேதி திருக்கால் நாட்டுடன் கொடை விழா தொடங்கியது. விழாவையொட்டி இன்று காலை தீபாராதனை, நையாண்டி மேளம் ஆகியவை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு குடியழைப்பு சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கி றது.

    நாளை (4-ந்தேதி) காலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6 மணிக்கு கலச பூஜை, 6.30 மணிக்கு அஷ்டாபிஷேகம் தொடர்ந்து களபம் சார்த்துதல் நடக்கிறது. 9 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், தொடர்ந்து வில்லிசை நடக்கிறது. 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு, 11 மணிக்கு சாஸ்தா சுவாமிக்கு தீபாராதனை, தொடர்ந்து கோவில் குளத்தில் இருந்து கும்ப நீர் எடுத்து கோவில் வந்தடைதல் ஆகியவை நடக்கிறது. மதியம் மகா தீபாராதனை, அன்னதானம், உஜ்ஜியினி மாகாளியம்மனுக்கு பொங்கல் வழிபாடு, அலங்கார தீபாராதனை, மேளம், கரகாட்டம், வில்லிசை, இரவு அலங்கார தீபாராதனை, ஊட்டு படைத்தல், மகா தீபாராதனையை தொடர்ந்து அன்னப்படைப்பு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    நாளை மறுநாள் (5-ந்தேதி) காலை மங்கல இசை, மதியம் 1 மணிக்கு மஞ்சள் பாலுக்கு அக்னி மூட்டுதல் அம்மன் மஞ்சள் பால் குளியல், பூப்படைப்பு தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது. கோமரத்தார்கள் மஞ்சள் நீராட ஊர் சுற்றி வலம் வருதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    5-ந்தேதி முழுவதும் திருவனந்தபுரம் மஞ்சப்படையின் சிறப்பு சிங்காரி மேளம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 11-ந்தேி 8-ம் கொடை விழாவை முன்னிட்டு காலை அஷ்டாபிஷேகம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை, தீபாரா தனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    ஆடி மாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் இரவு 8 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    Next Story
    ×