என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொல்லங்கோடு நகராட்சியில் சாலையை தற்காலிகமாக சீரமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
- சாலை மிகவும் பழுதடைந்துள்ள இடத்தை மட்டும் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடை பெற்றது
- பழுதடைந்துள்ள இடத்தில் ஆங்காங்கே ஜல்லி மட்டும் போட்டு சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
கொல்லங்கோடு நகராட்சிக் குட்பட்ட பல சாலைகள் மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றால், முந்தைய சீரமைப் புக்கு பிறகு 3 ஆண்டுகள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் 2020-ம் ஆண்டு இங்கு சாலை செப்பனிடப் பட்டுள்ளதாக கணக்கில் உள்ளது.
இந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்துள்ள இடத்தை மட்டும் தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடை பெற்றது. குன்னிச்சாம் விளை-பண்ணிக்கம்விளை சாலையில் பழுதடைந்துள்ள இடத்தில் ஆங்காங்கே ஜல்லி மட்டும் போட்டு சென்றுள்ளனர்.
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் கொல்லங் கோடு நகராட் சிக்கு உட்பட்ட சாலைகள் செப்பனிடுதலில் பல முறைகேடுகள் நடந்தி ருப்பதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடன டியாக நடவடிக்கை எடுத்து முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






