குழித்துறை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர்

வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தார்பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
குழித்துறை அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் என்ஜினீயர்
Published on

நாகர்கோவில் :

குழித்துறை ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிணமாக கிடந்தவர் மதுரை காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.

என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வ தற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பால கிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அவர் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார்.

மாயமான அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் குழித்துறை பகுதிக்கு வந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com