என் மலர்
நீங்கள் தேடியது "மாநகர் பகுதி"
- 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது
- பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீரை எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணையில் தற்போது போதுமான அளவு தண்ணீர் இல்லா ததால் பொதுமக்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சி கவுன்சி லர்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாந கராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நட வடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் தண்ணீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை காரணமாக பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீரை எடுத்து வரும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
மேலும் குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வந்துள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மாநக ராட்சி மக்களுக்கு லாரிகள் மூலமாகவும் போர்வெல் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த தண்ணீர் போதுமான அளவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ரூ.239 கோடி செலவில் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அந்த திட்டத்திற்கு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு உள்ளதையடுத்து அதை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணன்கோவிலுக்கு கொண்டு வரும் தண்ணீரை பொதுமக்களுக்கு சப்ளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை சப்ளை செய்யப்படவில்லை. விரைந்து அந்த திட்டத்தை செயல்படுத்தி பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன் சிலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மேயர் மகேஷ் உடனடி நட வடிக்கையாக அதி காரிகளுடன் ஆலோசித்து புத்தன்அணை தண்ணீரை உடனடியாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.






