தென்தாமரைகுளம் அருகே டெம்போ மோதி கோவில் பூசாரி பலி

மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியதுசிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
தென்தாமரைகுளம் அருகே டெம்போ மோதி கோவில் பூசாரி பலி
Published on

கன்னியாகுமரி :

தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி சாலையில் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் கீழமணக்குடி அருகே உள்ள ஒரு தும்பும் மில்லில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பன்னீர் செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மூத்த மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com