என் மலர்
உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே கடையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
- வனத்துறை ஊழியர்கள் பிடித்து சென்றனர்
- ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்
கன்னியாகுமரி :
தக்கலை அருகே முளகு மூடு பகுதியில் காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் முளகுமூடு ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
நேற்று மதியம் ரேஷன் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். இந்நிலை யில் திடீரென 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று ரேஷன் கடைக்குள் புகுந்தது. இதனை கண்ட ஊழியர் உள்பட பொதுமக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
இதுதொடர்பாக கவுன்சி லர் பிரேமசுதா தீய ணைப்புதுறைக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். குலசேகரம் வன அலுவலர் ராஜா மற்றும் வன துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ரேஷன் கடையில் புகுந்த பாம்பை 1 மணி நேரம் போராடி பிடித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






