search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்
    X

    கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்கான 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்

    • வருகிற 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது
    • தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் வழங்கும் திட்டத்துக்கான முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதற்கட்ட பதிவு முகாமில் விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள் வருகிற 3, 4-ந்தேதிகளில் தங்கள் நியாய விலைக்கடை முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

    2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம், வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. 2-ம் கட்ட முகாமில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியாமல் போனவர்கள், வருகிற 15-ந்தேதி, 16-ந்தேதிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இரு கட்ட முகாம்கள் அரசு விடுமுறை நாட்களிலும் நடைபெறும்.

    அதன்படி முதற்கட்ட முகாமிற்கான நாட்களில் இன்று (29-ந்தேதி), நாளை (30-ந்தேதி) ஆகிய நாட்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை ஆகிய வட்டங்களில் அனைத்து நியாய விலை கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 126 நியாய விலை கடைகள் இயங்கும்.

    இதேபோல் 2-ம் கட்ட முகாம் நடைபெறும் நாட்களில் வருகிற 5-ந்தேதி (சனி), 6-ந்தேதி (ஞாயிறு), 12-ந்தேதி (சனி), 13-ந்தேதி (ஞாயிறு), 15-ந்தேதி (சுதந்திர தினம்), 16-ந்தேதி (உள்ளூர் விடுமுறை) திருவட்டார், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் வட்டங்களில் அனைத்து நியாய விலைக்கடைகள் மற்றும் கல்குளம் வட்டத்தில் 49 நியாய விலை கடைகள் செயல்படும். முகாம் நடைபெறும் நாட்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×