என் மலர்
கள்ளக்குறிச்சி
- அன்பழகன் என்பவருடைய விவசாய நிலத்தில் தென்னை மரத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு விற்பனைக்காக 10 லிட்டர் கள் வைத்திருந்தது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட க.அலம்பளம் என்ற கிராமத்தில் அன்பழகன் என்பவருடைய விவசாய நிலத்தில் தென்னை மரத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு விற்பனைக்காக 10 லிட்டர் கள் வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்த விசாரித்த போது கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருமங்கலத்தை சேர்ந்த முருகன் (வயது 62) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
- அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கச்சிராயபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் கல்வராயன் மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது வெங்களுர் கிராமத்தில் தண்ணி பள்ளம் ஓடை அருகில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 20 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
- மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.
- விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.
கள்ளக்குறிச்சி:
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.
அதன்படி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி, குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க மே 3-ந்தேதியும், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 5-ந்தேதியுமாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாடூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாகுறிச்சி ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 49). டிரைவர். இவர் கடந்த 13-ந்தேதி புதுவையில் இருந்து சுமார் 450 பெட்டி தேங்காய் எண்ணெயை லாரியில் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று மாடூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு 24 பெட்டி தேங்காய் எண்ணெய் திருட்டு போனது தெரியவந்தது.
இதன் மதிப்பு ரூ.ஒரு லட்சத்து 68 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்றப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கோ.முருகன், அனைத்து வியாபரிகள் சங்கத் தலைவர் சேகர், செயலர் குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்கள்.
அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முழு அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ரோட்டரி முன்னாள் தலைவர் ஆறுமுகம், பிரகாசம் சன்மார்க்க இளைஞர் அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திர சேகரன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
- ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர்.
- தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே உள்ள புது பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர். இவர்களுக்கு 3 வயதில் லத்தீஸ்வரன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் நல்ல நிலையில் குடும்பம் நடத்திய ஜெயராமன், அதன் பின்னர் லட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதன் உச்சகட்டமாக சம்பவத்தன்று ஜெயராமனும் அவரது தாயார் பழனியம்மாளும் சேர்ந்து கொண்டு தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.
தாக்குதல்அப்போது வாக்குவாதம் முற்றி தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்பு பைப்பால் தலையில் அடித்து, இதோடு நீ செத்து போடி, நீ செத்தால் நான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி லட்சுமி மீது ஜெயராமன் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். ஜெயராமனின் தாயார் பழனியம்மாள் லட்சுமியை திட்டி தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்இஸ்பெக்டர் ராதிகா, ஏட்டு சங்கீதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமியை தாக்கியதாக அவரது கணவர் ஜெயராமன் மற்றும் மாமியார் பழனியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக கணவர் ஜெயராமனை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட பழனியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
- இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை சங்காரபுரம் தாசில்தார் சரவணன் வழங்கினார்.
- 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.
- பாலு (வயது 45) ராஜேந்திரன் (வயது 33) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள எக்கா மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சாராயவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
அதேபோல் ஒட்டம்பட்டு கிராமத்தில் 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார்
- திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார். இவர் தனது மெத்தை வீட்டில் மாடியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன. அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது
- குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பு வளாகம் உள்ளது. இங்கு மணலூர்பேட்டை போலீஸ் சரகம் செம்படை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்ற எழுத்தர் சேவியர் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.
- இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
- பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை சரிவர போடவில்லை என மாணவர்கள் தெரிவித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் சத்துணவு பொறுப்பாளரை கேட்டுள்ளனர். இது தவிர பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களின் ஒரு பிரிவினரை சமுதாய ரீதியாக அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியருக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்த கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்று முடிவில் காரசாரமான சண்டையும் பள்ளி மாணவர்கள் மத்தியி லேயே நடைபெற்றுள்ளது இது பற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகள் விசாரணையில், தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு சில ஆசிரியர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்து விரிவான விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 3 ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணிக்காக முதன்மை கல்வி அலுவலர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்கள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே சமுதாய ரீதியில் வேறுபாட்டை உருவாக்கும் வகையில் பேசிய தலைமை ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இதனை தட்டி கேட்ட ஆசிரியர்களுக்கு தண்டனை என்பது மாணவர்களை அவமதிக்கும் செயலாகும் எனவே இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மற்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தை அணுக உள்ளதாகவும் மற்ற ஆசிரியர்களுக்கான மாற்றுப் பணிக்கான உத்தரவை ரத்து செய்து வன்கொடுமை பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை வலியுறுத்தி புகார் கொடுக்க உள்ளோம்
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முதல் கட்டமாக புகார் தெரிவிப்பது எனவும், இதில் நடவடிக்கை இல்லை எனில் மாணவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர் இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முதல் கட்ட விசாரணையில் 3 ஆசிரியர்களுக்கு மாற்று பணிக்கு உத்தரவிட்டிருக்கிறோம். வன்கொடுமை பேச்சு குறித்து உரிய ஆதாரங்கள் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதி மாணவர்கள், ஆசிரிய ர்களிடையே பரபரப்பு நிலுவுகிறது.
- மோகன்ராஜ் (வயது 31). இவர் திருக்கோவிலூர் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார்.
- கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ் (வயது 31).
இவர் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் செங்கனான்கொள்ளை கிராம பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஜி .அரியூர்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் எதிரே மெயின் ரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சூர்யாவை( வயது 23 )போலீசார் கைது செய்து சோதனை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் மீது திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.






