search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு
    X

    கள்ளக்குறிச்சியில் போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி வகுப்பு

    • மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    கள்ளக்குறிச்சி:

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3-ந்தேதி வெளியிட்டது.

    அதன்படி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி, குரூப் சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.

    காலி பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க மே 3-ந்தேதியும், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 5-ந்தேதியுமாகும்.

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

    விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×