கச்சிராயபாளையம் அருகே கள் விற்பனை செய்த முதியவர் கைது

அன்பழகன் என்பவருடைய விவசாய நிலத்தில் தென்னை மரத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு விற்பனைக்காக 10 லிட்டர் கள் வைத்திருந்தது தெரியவந்தது.
கச்சிராயபாளையம் அருகே  கள் விற்பனை செய்த முதியவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட க.அலம்பளம் என்ற கிராமத்தில் அன்பழகன் என்பவருடைய விவசாய நிலத்தில் தென்னை மரத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு விற்பனைக்காக 10 லிட்டர் கள் வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்த விசாரித்த போது கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருமங்கலத்தை சேர்ந்த முருகன் (வயது 62) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com