என் மலர்
கள்ளக்குறிச்சி
- கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
- இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை துறை சில தினங்களுக்கு முன்பு வருகிற 28-ந் தேதி அன்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நில அளவியர் ஆகியோர் நேற்று அம்சாகுளத்தில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கூகையூர் ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்து மஞ்சள் நிறத்தில் அம்பு குறியீடு போடப்பட்டது.
பின்னர் கடை உரிமை யாளர்களிடம் வருகின்ற 28-ந் தேதிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தங்களு டைய செலவிலே எடுக்கு மாறு தெரிவித்தனர். மீறும் பட்சத்தில் 28-ந் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை எடுக்கும்போது அதற்கான ஏற்படும் பொருள்கள் சேதாரத்தை, தேசிய நெடுஞ்சாலை துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளாது என கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.
- ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
- 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஜெயக்குமார் கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராமத்தை சே ர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் நடராஜன்(49) விவசாயி. சம்பவத்தன்று நடராஜனின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த குமார் மனைவி கருப்பாயி, அவரது நிலத்தில் வேலை ப்பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெய க்குமார்(45) கருப்பாயிடம் இது என்னுடைய இடம், இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த நடராஜன், ஜெயக்குமாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் அசிங்கமாக திட்டி, கொடுவாளால் நடராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தார்.
- தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
- திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்தார். படிப்பு வராததால் பள்ளியை விட்டு நின்று போன சிறுமி வீடடு வேலைகளை செய்து வந்தார். இவரது தாய் சிறுமி குழந்தையாக இருந்தபோதே பாம்பு கடித்து இறந்து போனார். இவரது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தாத்தா, பாட்டி சிறுமியை பராமறித்து வளர்த்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பிலிருந்து பாதியிலேயே நின்றதால், சிறுமியின் தாத்தா, பாட்டி திருக்கோவிலூரில் உள்ள தனியார் நர்சிங் மையத்தில் சேர்ந்து படிக்க வைத்தனர். 6 மாதத்திற்கு பிறகு சிறுமி அங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்நிலையில் சிறுமியின் உறவினர் மணிகண்டன் (வயது 23), ஏ.சி.மெக்கானிக் பணி செய்கிறார். இவர் சித்தலூர் பகுதியில் உள்ள பெரியசாமி கோவிலுக்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது, சிறுமியின் கழுத்தில் மணிகண்டன் திடீரென தாலி கட்டி, கட்டாயப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு மற்றும், விளைநிலப் பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பித்து தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து நடந்தவைகளை கூறினார். மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் வந்தது.
- மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா அத்திப்பாக்கம் கிராமத்தில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிக்கு தகவல் வந்தது. அக்கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி அதி்திப்பாக்கம் கிராமத்தில் திருநாவலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டனர். அவர்களை மடிக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த அஞ்சாமணி (வயது 48), சரிதா (25), தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மதுபாட்டில் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கு வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
- காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட தில் பிளஸ்-2 மாண வர்களுக்கான துணைத் தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெறுகிறது. கள்ளக் குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வினாத்தாள் கட்டுக்காப்பு அலுவலகத்திலிருந்து 3 மையங்களுக்கும், திருக்கோ விலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும், உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 2 மையங்களுக்கும் வினாத் தாள்கள் அனுப்பி வைக்கப் பட்டன. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடிகிறது.
இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயின்று ஒரு சில பாடப்பிரிவுகளில் தோல்வியடைந்த மாண வர்கள் தேர்வெழுது கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான அதிகாரி கள் தேர்வு மையங்களுக்கு நேரடியா சென்று கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்ட னர். தேர்வெழுதும் மாண வர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
- மர்மநபர்கள், இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர்.
- திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் ரவிக்குமார் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் 5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இந்த நிழற்குடை முழுக்க முழுக்க இரும்பு மற்றும் எவர் சில்வர் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டது. இங்கு பயணிகள் அமர்வதற்கான சேர்கள் இரும்பு மற்றும் எவர்சில்வரால் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மடப்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வந்தது. இதனை தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திய சில மர்மநபர்கள், பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்கள், எவர்சில்வர் பைப்புகளை ஆக்ஷா பிளேடு, சுத்தியல் கொண்டு உடைத்து அறுத்து திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை வழக்கம் போல அங்கு வந்த பொதுமக்கள் பயணியர் நிழற்குடையில் சேர்கள் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மடப்பட்டு ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஊராட்சி தலைவர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பயணியர் நிழற்குடையில் இருந்த மர்ம நபர்கள் திருடிச் சென்ற சேர் மற்றும் எவர் சில்வர் பைப்புகளின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும், மடப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடைகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். குடியிருப்பு கள் அதிகம் உள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த வேண்டுமென கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸ் துறை சார்பில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தாலே, குற்றச் சம்பவங்களில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்யமுடியுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்குமா என பொது மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
- கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
- ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தியாக துருகம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள குடியி ருப்புகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். விவசாயிகள், தங்களது பயிருக்கு முறை யாக தண்ணீர் பாய்ச்ச முடி யாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மின்தடை குறித்து மின்வாரியத்தில் பேசி நடவடிக்கை எடுப்ப தாக போலீசார், உறுதி யளித்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
- விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலுாரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அந்த அளவுக்கு மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூடமாக இது விளங்குகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகின்றது. அதன்படி விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பகண்டைகூட்டுரோடு அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மனமுடைந்த வினிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் வினிதா(22). பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டு வேலையை செய்ய வேண்டியது தானே என்று அவரது பெற்றோர் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது தாய் தேவகி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
- உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே ஒடப்பன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது40). இவர் கள்ளத்தனமாகவும் அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தனிப்பிரிவு காவலர்தலைமை காவலர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் உளுந்தூர்பேட்டை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.






