ரிஷிவந்தியத்தில் ஒன்றிய குழு கூட்டம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ரிஷிவந்தியத்தில்  ஒன்றிய குழு கூட்டம்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு வரவேற்றார். உதவி அலுவலர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்தல், கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com