என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழாங்கற்கள் கடத்தல்"

    • மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
    • சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து விழுப்புரம் உதவி புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஒரு லாரி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, லாரியின் டிரைவர் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர். இதில் லாரியில் குழாங்கற்கள் இருந்ததை கண்டறிந்தனர்.தொடர்ந்து இது குறித்து புவியிலாளர் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இது போல கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×