தியாகதுருகம் அருகே பூச்சி மருந்து குடித்து இளம் பெண் சாவு

மகாலட்சுமி பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
தியாகதுருகம் அருகே பூச்சி மருந்து குடித்து இளம் பெண் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி, இவரது மகள் மகாலட்சுமி (21) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் வயிற்று வலி வருவதாகவும் அவ்வாறு வயிற்றை வலிக்கும் போது தனியார் மருந்தகத்தில் மருந்தை வாங்கி சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பி னார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி யுள்ளார். அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது தந்தை மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com