என் மலர்
காஞ்சிபுரம்
மும்பையில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. தரை இறங்கும் போது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
ஓடுபாதையில் விமானம் தரையிறங்கி சிறிது தூரத்தில் நின்று விட்டது. இழுவை வாகனம் மூலம் விமானத்தை இழுத்து செல்லப்பட்டது. பின்னர் 117 பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். #ChennaiAirport
சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் துளுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சகாயராஜ்.
இவரது மனைவி சித்ரா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது.
இந்த நிலையில் சகாய ராஜுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது சித்ராவுக்கு தெரிய வந்தது.
இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் சித்ரா மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் நேற்று தனியாக இருந்த சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ராவை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பையில் நடைபெற்றது. ஸ்ரீபெரும் புதூர் சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி முன்னிலை வகித்தார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமசந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
அமைப்பு செயலாளர்கள் சோமசுந்தரம், மைதிலி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாவட்ட அவை தலைவர் கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் அத்தி வாக்கம் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, ஜீவானந்தம், அக்ரி நாகராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், முன்னாள் சேர்மன் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், செங்காடு பாபு, ஒன்றிய பொருளாளர் பண்ருட்டி அர்ஜூனன், மாவட்ட பாசறை துணை செயலாளர் மணிகண்டன், மாங்காடு நகர இளைஞர் அணி செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK
மாமல்லபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள உலக பாரம்பரிய புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, புலிக்குகை, குடவரை கோவில்களை பார்க்க பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.
இவர்களில் சிலர் காவல் துறை அனுமதி இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு இன்றி 5கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடம்பாடி கிராமத்துக்கு சைக்கிளில் சென்று கிராம கலாச்சார பணிகளை பார்வையிடுகிறார்கள்.
புலிக்குகைக்கும் செல்கிறார்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பான இடங்கள் அல்ல. போலீசார் இதனை எச்சரித்தும் சுற்றுலா ஆர்வத்தில் ஓட்டல் வழிகாட்டிகளின் உதவியுடன் இவர்கள் செல்கிறார்கள். இது போன்று தன்னிச்சையாக செயல்பட்ட வெளிநாட்டு பெண் பயணிகள் பலர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர். விலை உயர்ந்த லேப்டாப், கேமரா, ஐபேடு உட்பட தங்கள் பாஸ்போர்ட்டையும் பறிகொடுத்துள்ளனர்.

தற்போது திருவண்ணாமலையில் ரஷியப் பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் தினமும் எந்த பகுதில் இருக்கிறோம் என்பதை அந்தந்த நாட்டு சுற்றுலா ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தூதரக அனுமதி இல்லாமலோ பகுதி காவல்நிலைய அனுமதி இல்லாமலோ தன்னிச்சையாக தமிழக அரசு அனுமதி இல்லாத சுற்றுலா பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும் அந்தந்த நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மாமல்லபுரம் போலீசாரும் பாதுகாப்பு இன்றி செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எச்சரித்து வருகிறார்கள். #Embassiesalert #Mamallapuram
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த நயம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூங்கிலான் (56). இவர் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் மூங்கிலான் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மஞ்சு வாஞ்சேரி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள ரோட்டோர கடையில் டீ குடித்தார்.
அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்ற மூங்கிலானை 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அரிவாளால் மூங்கிலானை சரமாரி வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மூங்கிலான் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேஷ்கன்னா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.கொலைக்கு ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Murdercase
காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (33). சமோசா வியாபாரி.
சேகர் நேற்று இரவு அவருடைய நண்பர் தனியரசு (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாலுசெட்டி சத்திரம் சென்றார். பின்னர் இருவரும் பிள்ளையார் பாளையம் திரும்பினார்கள்.
இரவு 10 மணியளவில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் சென்னை- பெங்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. சேகர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தனியரசு பின்னால் உட்கார்ந்து இருந்தார். கிழம்பி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வியாபாரி சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனியரசு படுகாயத்துடன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விசாரணை நடத்தி வருகிறார். வியாபாரி மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
வியாபாரி சேகர் தனது கண்களை ஏற்கனவே தானம் செய்து இருந்தார். எனவே அவருடைய கண்களை தனியார் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தானமாக பெற்று சென்றனர். #Tamilnews
கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரம்யா. அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று இரவு ரம்யா கோட்டூர்புரம் பாலத்துக்கு வந்தார். திடீரென்று பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் ரம்யாவை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருட்டிவிட்டதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.
இன்று காலை கூவம் ஆற்றில் ரம்யாவை தேடும் பணி நடந்தது. அப்போது அடையாறு ஆற்றில் இருந்து ரம்யா பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த உறவினர்கள் கதறி அழுதனர். ரம்யா உடல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கல்லூரி மாணவி ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக கூறி இருக்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்த போதுதான் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
பா.ஜனதா தலைமையிலான இன்றைய மத்திய அரசில் தான் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளது. நீட் தேர்வில் பாமர மக்களின் குழந்தைகளும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து இருக்கிறது.
தி.மு.க.வில் எம்.பி.க்களே இல்லை. ‘ஜீரோ’ எம்.பி.க்களை வைத்துக் கொண்டு மத்திய பா.ஜனதா அரசை எதிர்த்து கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆளும் கட்சியும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கையில் லட்சக் கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தி.மு.க. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததா?

‘நீட்’ தேர்வு தமிழ் கேள்விகளில் நடந்த குளறுபடிகளுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம். நடந்த தவறுக்கு அவர்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சத்துணவு பெண் பணியாளர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் தீண்டாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 21-ம் நூற்றாண்டிலும் இப்படி நடந்திருப்பது வேதனை. தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். எஸ்.சி. எஸ்டி. பிரிவினருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிரான கருத்துக்களை வலிமையான பிரசாரத்தால் முடியடிப்போம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK
சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க, போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த 3 மாதங்களில் ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சர்வதேச அளவில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதுடன், மாதம் ரூ.500 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளுக்கு முன்உதாரணமாக மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் மருத்துவமனை உள்ளது. அங்கு டாக்டர்கள், நோயாளிகள் நண்பர்களாக செயல்படுகின்றனர்.
அதுபோல் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையையும் மாற்ற தோப்பூரில் உள்ள மருத்துவமனையின் டாக்டர் காந்திமதிநாதன் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமத்தினருடன் இணைந்து உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும் ரூ.6 கோடி செலவில் புதிய வெளிநோயாளிகள் பிரிவு கட்டப்படவுள்ளது. இது தவிர, ரூ.2 கோடியில் பல்வேறு பணிகளும் என ரூ.8 கோடியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சியில் காசநோயை ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மருந்து வினியோகம் செய்பவர்களின் பங்கு முக்கியம்.
டாக்டர்கள் அனுமதி இன்றி காசநோய்க்கு மருந்துகள் கேட்போர் குறித்து அரசுக்கு மருந்து கடைக்காரர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர். #minister #vijayabaskar #health
வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.
வரி உயர்வை குறைக்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
நேற்று மாலை முகமது சுல்தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் முகமது சுல்தான் இறந்து கிடந்தார்.
அவரது கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை எரித்து கொலை செய்து தப்பி இருப்பது தெரிந்தது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டின் அருகே கண்காணிப்பு காமிரா எதுவும் இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
கொலையுண்ட முகமது சுல்தான் வீட்டில் ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து உள்ளார். அவருக்கும், முகமது சுல்தானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து வேலைக்கார பெண்ணை போலீசார் பிடித்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது சுல்தானை வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் வந்து சந்தித்துள்ளார்.
பெண் தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தற்போது வேலைக்கார பெண்ணின் வருங்கால கணவர் ராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் அங்கு சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் பயணிகள் ரெயில் தினந்தோறும் செங்கல்பட்டு ரெயில் நிலையத்துக்கு காலை 8.10 மணிக்கு வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் காலதாமதமாக தொடர்ந்து வந்தது.
இதனால் அதில் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி அவர்கள் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து பாண்டிச்சேரி ரெயில் காலதாமதமாகவே வந்தது. இன்று காலை இந்த ரெயிலுக்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் சுமார் 100-க்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.
வழக்கம் போல் அந்த ரெயில் காலை 9.20 மணிக்கு தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் முன்பு தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது சில பயணிகள் மின்சார ரெயில் பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆந்திராவில் இருந்து வந்த காச்சிகுடா, காக்கிநாடா எக்ஸ்பிரஸ்ரெயில்களும், திருமால்பூர் மின்சார ரெயிலும் வரும் வழியிலேயே நிறுத்தப்பட்டது.
இதே போல் சென்னையில் இருந்து வந்த ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரெயில்களை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் மறியலால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






