என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படப்பை பெயிண்டர் கொலை"

    படப்பை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Murdercase

    ஸ்ரீபெரும்புதூர்:

    தாம்பரத்தை அடுத்த நயம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூங்கிலான் (56). இவர் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வந்தார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் மூங்கிலான் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். மஞ்சு வாஞ்சேரி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்குள்ள ரோட்டோர கடையில் டீ குடித்தார்.

    அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்ற மூங்கிலானை 3 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் அரிவாளால் மூங்கிலானை சரமாரி வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மூங்கிலான் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் டி.எஸ்.பி. ராஜேஷ்கன்னா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.கொலைக்கு ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமா? அல்லது வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. #Murdercase

    ×