என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோழிங்கநல்லூரில் பெண் தற்கொலை"

    சோழிங்கநல்லூரில் கணவரின் கள்ளக்காதலால் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கம் துளுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சகாயராஜ்.

    இவரது மனைவி சித்ரா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிறது.

    இந்த நிலையில் சகாய ராஜுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது சித்ராவுக்கு தெரிய வந்தது.

    இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் சித்ரா மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் நேற்று தனியாக இருந்த சித்ரா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ராவை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×