என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமல்லபுரம் வெளிநாட்டு பயணிகள்"

    மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி இல்லாத சுற்றுலா பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும் அந்தந்த நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. #Embassiesalert #Mamallapuram

    மாமல்லபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள உலக பாரம்பரிய புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, புலிக்குகை, குடவரை கோவில்களை பார்க்க பல நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள்.

    இவர்களில் சிலர் காவல் துறை அனுமதி இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு இன்றி 5கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடம்பாடி கிராமத்துக்கு சைக்கிளில் சென்று கிராம கலாச்சார பணிகளை பார்வையிடுகிறார்கள்.

    புலிக்குகைக்கும் செல்கிறார்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பான இடங்கள் அல்ல. போலீசார் இதனை எச்சரித்தும் சுற்றுலா ஆர்வத்தில் ஓட்டல் வழிகாட்டிகளின் உதவியுடன் இவர்கள் செல்கிறார்கள். இது போன்று தன்னிச்சையாக செயல்பட்ட வெளிநாட்டு பெண் பயணிகள் பலர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர். விலை உயர்ந்த லேப்டாப், கேமரா, ஐபேடு உட்பட தங்கள் பாஸ்போர்ட்டையும் பறிகொடுத்துள்ளனர்.


    .

    தற்போது திருவண்ணாமலையில் ரஷியப் பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

    இதையடுத்து தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் தினமும் எந்த பகுதில் இருக்கிறோம் என்பதை அந்தந்த நாட்டு சுற்றுலா ஆப்பில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தூதரக அனுமதி இல்லாமலோ பகுதி காவல்நிலைய அனுமதி இல்லாமலோ தன்னிச்சையாக தமிழக அரசு அனுமதி இல்லாத சுற்றுலா பகுதிகளுக்கு செல்லக்கூடாது எனவும் அந்தந்த நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மாமல்லபுரம் போலீசாரும் பாதுகாப்பு இன்றி செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எச்சரித்து வருகிறார்கள். #Embassiesalert #Mamallapuram

    ×