search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant dies"

    ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தவர் ஜெகதீசன் (வயது 35). இவரது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான் குளத்தை அடுத்த சோலையார்புரம் கிராமம் ஆகும்.

    இவர் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அண்ணாசிலை அருகே சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சமையல் கியாஸ் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் பலியானார். ஊத்துக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். மேலும் தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை தேடி வருகிறார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள சாலாபுரம்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகேந்திரன் (வயது33). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தின் மீது ஏறிய போது தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த சுகேந்திரன் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயரிழந்தார்.
    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளியை சேர்ந்தவர் குமார் (வயது 30), பூ வியாபாரி. இவர் தினமும் பூ மாலை கட்டி பெங்களூரு செல்லும் பஸ்சில் கொடுத்து வந்தார்.

    நேற்று மாலை அவர் வழக்கம்போல் பூ மாலை கட்டி கொண்டு பெங்களூரு செல்லும் பஸ்சில் கொடுத்து விட்டு, பின்னர் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். பந்தார அள்ளி ஏரி அருகே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.

    அந்த பகுதியில் சாரல் மழை பெய்ததால் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த குமார் வழி தவறி கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது ஏறி சென்றார். அப்போது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குமார் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன குமாருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
    கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கோழி வியாபாரி பலியானார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    மேலூர்:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் செல்லம் (வயது 58). கோழி வியாபாரி. இவர் சிலம்புத்தேவன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோழிகளை ஏற்றிக்கொண்டு சிங்கம்புணரிக்கு இன்று காலை புறப்பட்டார்.

    காரியேந்தல்பட்டி என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது பின்னால் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட செல்லம் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.

    ஆனால் அதற்குள் செல்லம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் டிரைவர் திண்டுக்கல் ரவி வர்மாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐஸ் வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 58). ஐஸ் வியாபாரி.

    இந்நிலையில் நேற்று குணசேகரன் கந்தர்வகோட்டையில் ஐஸ் வியாபாரம் செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திருக்கானூர் பட்டி கடை தெருவில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் தூக்கி வீசப்பட்ட குணசேகரன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

    இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மரணமடைந்த வியாபாரியின் கண்கள் தானமாக பெறப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பிள்ளையார் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (33). சமோசா வியாபாரி.

    சேகர் நேற்று இரவு அவருடைய நண்பர் தனியரசு (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாலுசெட்டி சத்திரம் சென்றார். பின்னர் இருவரும் பிள்ளையார் பாளையம் திரும்பினார்கள்.

    இரவு 10 மணியளவில் இவர்களுடைய மோட்டார் சைக்கிள் சென்னை- பெங்களூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. சேகர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். தனியரசு பின்னால் உட்கார்ந்து இருந்தார். கிழம்பி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வியாபாரி சேகர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தனியரசு படுகாயத்துடன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விபத்து குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விசாரணை நடத்தி வருகிறார். வியாபாரி மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வியாபாரி சேகர் தனது கண்களை ஏற்கனவே தானம் செய்து இருந்தார். எனவே அவருடைய கண்களை தனியார் கண் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தானமாக பெற்று சென்றனர். #Tamilnews
    ×