என் மலர்

  செய்திகள்

  காரிமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பூ வியாபாரி பலி
  X

  காரிமங்கலம் அருகே பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பூ வியாபாரி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கட்டி முடிக்கப்படாத பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பந்தாரஅள்ளியை சேர்ந்தவர் குமார் (வயது 30), பூ வியாபாரி. இவர் தினமும் பூ மாலை கட்டி பெங்களூரு செல்லும் பஸ்சில் கொடுத்து வந்தார்.

  நேற்று மாலை அவர் வழக்கம்போல் பூ மாலை கட்டி கொண்டு பெங்களூரு செல்லும் பஸ்சில் கொடுத்து விட்டு, பின்னர் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். பந்தார அள்ளி ஏரி அருகே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.

  அந்த பகுதியில் சாரல் மழை பெய்ததால் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த குமார் வழி தவறி கட்டி முடிக்கப்படாத பாலத்தின் மீது ஏறி சென்றார். அப்போது பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குமார் உயிரிழந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குமார் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன குமாருக்கு திருமணமாகி லலிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
  Next Story
  ×