search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Vijayapaskar"

    வளரிளம் பருவத்தினர் மனநலனை பாதுகாக்கும் வகையில் கட்டணமில்லா உளவியல் ஆலோசனை சேவை வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்னர் அரசு மனநல காப்பகத்தில் தற்கொலை தடுப்பு காப்பாளர் பயிற்சியை தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டு உளவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி ஆணையை வழங்கினார்.

    பின்னர் பட்டிமன்றம், ரங்கோலி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கி பேசுகையில், ‘‘தமிழகத்தின் வருங்கால சந்ததியினர் மற்றும் வளரிளம் பருவத்தினர் மனநலனை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களில் தமிழக அரசு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கட்டணமில்லா உளவியல் ஆலோசனை சேவைகள், மற்றும் மருத்துவ சேவைகள் 104 தொலைபேசி மூலம் வழங்கப்படும்’’ என்றார்.
    தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். #ADMK #GutkhaScam #MinisterVijayabaskar
    தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இவர் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை வெளியிடவில்லை என்று புகார் கூறப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வந்தது.

    இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடா மிகப் பெரிய அளவில் நடப்பதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பணப்பட்டு வாடா தொடர்பாக அமைச்சர்கள் பெயருடன் பண விநியோக பட்டியல் கைப்பற்றப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்குவாரிகளில் தொடர்ச்சியாக பலமுறை சோதனை நடத்தப்பட்டது.

    அடுத்து குட்கா ஊழல் தொடர்பாக சிக்கிய ரகசிய டைரியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்று இருந்தது. இதனால் அவரது வீட்டில் இன்று மீண்டும் சி.பி.ஐ. சோதனை நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    முன்பு பணப்பட்டுவாடா புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இப்போது ஊழல் புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் வீட்டில் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மாறி மாறி சோதனை நடத்தி இருப்பது இதுவே முதல் முறையாகும். புகார்கள் வெளியானதுமே அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அமைச்சர் பதவி விலக மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MinisterVijayabaskar
    தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் ரூ.8 கோடியில் அபிவிருத்தி பணிகள் செய்யப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.#minister #vijayabaskar #health
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க, போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த 3 மாதங்களில் ஆயிரம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சர்வதேச அளவில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதுடன், மாதம் ரூ.500 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் மற்ற மருத்துவமனைகளுக்கு முன்உதாரணமாக மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் மருத்துவமனை உள்ளது. அங்கு டாக்டர்கள், நோயாளிகள் நண்பர்களாக செயல்படுகின்றனர்.

    அதுபோல் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையையும் மாற்ற தோப்பூரில் உள்ள மருத்துவமனையின் டாக்டர் காந்திமதிநாதன் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமத்தினருடன் இணைந்து உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் ரூ.6 கோடி செலவில் புதிய வெளிநோயாளிகள் பிரிவு கட்டப்படவுள்ளது. இது தவிர, ரூ.2 கோடியில் பல்வேறு பணிகளும் என ரூ.8 கோடியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற உள்ளது.

    சென்னை மாநகராட்சியில் காசநோயை ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மருந்து வினியோகம் செய்பவர்களின் பங்கு முக்கியம்.

    டாக்டர்கள் அனுமதி இன்றி காசநோய்க்கு மருந்துகள் கேட்போர் குறித்து அரசுக்கு மருந்து கடைக்காரர்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீதர், டாக்டர் குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர். #minister #vijayabaskar #health
    ×