என் மலர்
காஞ்சிபுரம்
வண்டலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிளாட்பாரத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 28). இருவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு போதையில் தூங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு மணிகண்டன் வழக்கம் போல் மது போதையில் மனைவி விஜயலட்சுமியுடன் தூங்கினார்.
நள்ளிரவில் அவ்வழியே வந்த மர்ம கும்பல் சாலையோரத்தில் தூங்கிய விஜயலட்சுமியை கற்பழிக்க திட்டமிட்டனர். அவர்கள் விஜயலட்சுமியை மிரட்டி அங்கிருந்து தூக்கி கடத்தி சென்றனர்.
மணிகண்டன் போதையில் இருந்ததால் மனைவியின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.
இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள முட்புதருக்குள் விஜயலட்சுமியை மர்ம கும்பல் தூக்கி சென்றது. பின்னர் அவர்கள் மாறி, மாறி விஜயலட்சுமியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதனால் அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை.
இதற்கிடையே அதிகாலையில் எழுந்த மணிகண்டன் அருகில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அப்பகுதியில் தேடிய போது முட்புதருக்குள் விஜயலட்சுமி உயிருக்கு போராடியபடி கிடப்பது தெரிந்தது.
அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கற்பழிப்பில் ஈடுபட்டது 3 பேர் கும்பல் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
வண்டலூர் பாலாற்றின் கீழ் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா கும்பல் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. எனவே போதையில் இருந்த கும்பல் விஜயலட்சுமியை கற்பழித்து கொன்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மணிகண்டனிடமும் விசாரணை நடக்கிறது.
மணிகண்டன்- விஜயலட்சுமியின் சொந்த ஊர் கடலூர் ஆகும். இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். #VandalurWomanMolested
செங்கல்பட்டு:
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீர்வழிபாதைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. மழைநீர் கால்வாய்கள் சீரமைப்பு, நீர் ஓடைகளை அகலப்படுத் துதல், ஏரிகளை தூர்வாருதல் போன்ற பணிகளை வருவாய் துறையினரும், பொதுப் பணித் துறையினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சின்னையா உத்தரவுப்படி செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்தூர், மறை மலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம் பகுதிகளில் ஏரிகள், குளங்களுக்கு செல்லும் கால்வாய்கள், ஓடைகள் அகலப்படுத்தப் படுகின்றன.
இதையொட்டி கூடுவாஞ்சேரி அருகே உள்ள சங்கர் கணேஷ் நகர் பகுதியில் அடையாறு ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றக்கோரி நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த வீடுகளை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.
செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முத்து வடிவேலு மேற்பார்வையில் தாசில்தார் பாக்கியலட்சுமி, பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர் பிரகாஷ் நேவ்பிரபு முன்னிலையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடி வீடுகள் உள்பட மொத்தம் 19 வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 கோடி. வீடுகளை இழந்த அனைவருக்கும் நாவலூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘‘இந்த அக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதால் இந்த பகுதியில் இனி மழை காலத்தில் வெள்ளம் தேங்காது’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்போரூர்:
தாழம்பூர் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன் தினம் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர்.. இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் சோழிங்கநல்லூர் காந்திநகர் ஓடை, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜான் சாலமன் (வயது 21) என்பது தெரியவந்தது.
அதேபகுதியைச் சேர்ந்த அரவிந்த் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் ஜான் சாலமனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இறந்து போன ஜான் சாலமன் காதலித்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அரவிந்த் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனைவியை கொடுமைப்படுத்தியதாக அரவிந்தை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த அரவிந்த் தன்னுடைய மனைவி இறந்ததற்கும், தான் சிறைக்கு சென்றதற்கும் ஜான் சாலமன் தான் காரணம் என்று கருதினார்.
தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்து சம்பவத்தன்று ஜான் சாலமனை மது குடிக்க தாழம் பூர் ஏரிக்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் மது அருந்தி உள்ளனர்.
மது போதையில் இருந்த ஜான்சாலமனை அவர்கள் அருகில் இருந்த மரக்கிளையை உடைத்து சராமாரியாக அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக தாழம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்த், பத்மநாபன், 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிக்கரணை பாரதிதாசன் 1-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. வேளச்சேரியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோஸ் மேரி என்ற மகாலட்சுமி. இவர்களது மகன்கள் குணால் (19), திரிஷ் (17).
கிருஷ்ணமூர்த்தி தினமும் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதை மகாலட்சுமி கண்டித்து வந்தார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மதுகுடித்தபடியே வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவி மீது சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சண்டை போட்டதாக தெரிகிறது.
நேற்று இரவும் கிருஷ்ண மூர்த்தி-மகாலட்சுமி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கணவரை மகாலட்சுமி கடுமையாக திட்டினார். இதனால் கிருஷ்ணமூர்த்தி கடும் ஆத்திரம் அடைந்தார்.
அதன்பின் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த கிருஷ்ணமூர்த்தி சமையல் அறைக்கு சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்தார். அறையில் தூங்கி கொண்டிருந்த மனைவி மகாலட்சுமி கழுத்தில் கத்தியால் குத்தினார்.
இதில் ரத்தம் வெளியேறி மகாலட்சுமி அலறினார். சத்தம் கேட்டு எழுந்த 2-வது மகன் திரிஷ் அங்கு வந்தான். அப்போது அவன் மீதும் லேசாக கத்தி கீறியது. இந்த அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த மற்றொரு மகன் குணால் விளக்கை போட்டான்.
அப்போது தாய் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதையும், தந்தை கத்தியுடன் நிற்பதையும் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தான். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து வெளியேறினார்.
குணாலும், திரிஷ்சும் அக்கம்பக்கத்தினரை அழைத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாலட்சுமியை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே மனைவியை கத்தியால் குத்திவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிய கிருஷ்ணமூர்த்தி கத்தியுடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மகாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் கொண்டு வந்த அட்டை பெட்டிகளில் ஏராளமான அலங்கார ஆமைகள் இருந்தன.
மொத்தம் 5 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரத்து 300 ஆமைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஆமைகள் எங்கிருந்து யாருக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்று முகமது யூனுசிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து ஆங்காங்குக்கு செல்லும் விமானத்தில் அமெரிக்க டாலர் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த செந்தில் அரசு என்பவரது கைப்பையில் கட்டு கட்டாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்து செந்தில் அரசிடம் விசாரித்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்தது. அதில் வந்த இலங்கையை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவரது காலணியில் மறைத்து வைத்து 300 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். அதனை பறிமுதல் செய்தனர். தங்க கடத்தல் தொடர்பாக மீனாட்சி சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

எச்.எல்.எல். திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. அதனை பிரதமர் திறந்து வைக்க அழைப்பு விடுப்போம். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். மக்களுக்கான நலத்திட்டங்களை விரைவில் முடிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவை வரவேற்றனர். #AIIMS #JPNadda #ChennaiAirport
செங்கல்பட்டு டவுன் பகுதியில் சமூக நலத்துறை சார்பில் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி இயங்கி வருகிறது. சிறுவயதில் குற்றம் புரிந்தவர்கள், தண்டனை பெற்ற சிறுவர்கள் என 59 பேர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நெல்லை, குமரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இங்கு கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நேற்று இரவு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த 2 சிறுவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதல் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு கோர்ட்டில் இருந்து நீதிபதிகள் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுவர்களையும் சமாதானப்படுத்தினார்கள்.
பின்னர் 2 சிறுவர்களும் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
மதுராந்தகம் பைபாஸ், ஏரிக்கரை வழியாக சென்னை நோக்கி நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி சென்றது. லாரியை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த அரவிந்தர்சிங் (வயது42) ஓட்டினார். கிளீனராக அமீர்சிங் இருந்தார்.
அப்போது திடீரென லாரி பழுதானது. 2 பேரும் லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியே சென்னை நோக்கி சென்ற மற்றொரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி உதவி கேட்டனர்.
அதில் இருந்த டிரைவர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மித்ராசிங்(35) தனது லாரியை, பழுதான லாரியின் முன் பகுதியில் நிறுத்தினார். பின்னர் 2 பேரும் லாரியில் பழுது பார்த்துக் கொண்டு இருந்தனர். சிறிது நேரத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற லாரி திடீரென பழுதான லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் லாரியை பழுது பார்த்துக்கொண்டு இருந்த டிரைவர்கள் அரவிந்தர் சிங், மித்ராசிங் ஆகியோர் லாரிகளுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் கிளீனர் அமீர்சிங் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் நாகலுத்து தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் செல்வி (வயது 24). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் செல்வி பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென செல்வி இறந்தார். இறப்பதற்கு முன் தன் இரு கண்களையும் தானமாக வழக்குமாறு பெற்றோரிடம் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
எனவே தனது மகள் இறந்ததும் அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ராமலிங்கம் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். ராமலிங்கம் வீட்டிற்கு வந்த மருத்துவர்கள் செல்வியின் கண்களை தானமாக பெற்று சென்றுள்ளனர்.
தனது மறைவுக்கு பிறகும் தனது இருகண்களையும் தானமாக வழங்கிய செல்வியின் செயல் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிக்கரணை:
மேடவாக்கம் கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் மனைவி தனபாக்கியம் (65). இன்று காலை மேடவாக்கம் கூட்டுரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேடவாக்கத்தை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தனபாக்கியம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கலனியை சேர்ந்தவர் அரிகுமார். இவரது மனைவி சவுமியா (வயது 22) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சவுமியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி கணவர் அரிகுமாரிடம் கூறி வந்தார். ஆனால் அவர் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவில்லை.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சவுமியா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த சவுமியா மண்ணெய் தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை சவுமியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நேற்று மாலை படாளம் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அன்பு, கஜேந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை நிற்குமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்கள் நிற்காமல் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓட முயன்றனர். உஷாரான அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்என்றத்தூரைச் சேர்ந்த தனுஷ், செய்யூரை அடுத்த தேவராஜபுரம் காமேஷ், மதுராந்தகம் கவாங்கரையைச் சேர்ந்த புனிதன் என்பது தெரிந்தது.
பிடிப்பட்ட 3 பேரும் சித்தமூர் அண்ணாநகர் பகுதியில் 2 வீடுகளில் கொள்ளையடித்துள்ளனர். இதே போல் அணைக்கட்டு, படாளம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு டவுனில் மோட்டார் சைக்கிளை திருடி தப்பி வந்தபோது 3 பேரும் சிக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது






