என் மலர்

  செய்திகள்

  உயிரிழந்த செல்வி
  X
  உயிரிழந்த செல்வி

  உடல்நலக்குறைவால் இறந்த இளம்பெண்ணின் கண்கள் தானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சீபுரம் அருகே உடல்நலக்குறைவால் இறந்த 24 வயது இளம்பெண்ணின் கண்கள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
  காஞ்சீபுரம்:

  காஞ்சீபுரம் நாகலுத்து தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் செல்வி (வயது 24). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் செல்வி பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

  இந்த நிலையில் நேற்று திடீரென செல்வி இறந்தார். இறப்பதற்கு முன் தன் இரு கண்களையும் தானமாக வழக்குமாறு பெற்றோரிடம் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

  எனவே தனது மகள் இறந்ததும் அவரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக ராமலிங்கம் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். ராமலிங்கம் வீட்டிற்கு வந்த மருத்துவர்கள் செல்வியின் கண்களை தானமாக பெற்று சென்றுள்ளனர்.

  தனது மறைவுக்கு பிறகும் தனது இருகண்களையும் தானமாக வழங்கிய செல்வியின் செயல் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
  Next Story
  ×