என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
    படப்பை:

    சென்னை சாலி கிராமத்தை சேர்ந்தவர் குகன் (வயது 30). ஜமீன் பல்லாவரம் நடேசன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிஇருப்பில் வசித்து வருபவர் விஸ்வநாதன் (34) என்ஜினீயர்களான இருவரும் துரைப்பகத்தில் உள்ள ஐ.டி.  நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் படப்பையை அடுத்த பூந்தண்டலத்தில் உள்ள வீட்டு மனை பிரிவு களை பார்த்து விட்டு மேளத்தூர் வழியாக தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏறுமையூர் தர்காஸ் அருகே வந்த போது கல்குவாரியில் இருந்து வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.  சம்பவ இடத்தியலேயே குகன் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த விஸ்வநாதனைஅக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குசெய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான குகனுக்கு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
    போரூர் அருகே ஆட்டோவில் சென்றபோது முதியவரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    போரூர்:

    போரூரை அடுத்த மதனந்தபுரம் அன்னை வேளாங்கண்ணி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல். இவர் நேற்று முன் தினம் காலை ஷேர் ஆட்டோ ஏறி மதுரவாயலை நோக்கி சென்று கொண்டிருந்தார் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே ஆட்டோ சென்ற போது அருகில் அமர்ந்து இருந்த மர்ம நபர் தீடீரென கந்தவேலின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 1 பவுன் மோதிரத்தை பறித்து தப்பி சென்றார். 

    அதிர்ச்சி அடைந்த கந்தவேல் இது குறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட திருநின்றவூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மகேஷ் என்கிற மகேந்திரன் என்பவரை கைது செய்தனர்.
    பல்லாவரம் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த வெட்டல்லைன் பகுதியில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு உள்ளது.

    நள்ளிரவு 12 மணி அளவில் இப்பகுதியில் உள்ள முட்புதருக்குள் ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு போலீசார் விரைந்து சென்றனர்.

    அங்கு முட்புதருக்குள் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது நெற்றியில் மட்டும் ஆழமான காயங்கள் இருந்தன.

    உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொடுங்கையூரை சேர்ந்த ஆனந்தன் (45) என்பது தெரிய வந்தது.

    சம்பவ இடத்தில் ரத்தக்கரைகள் எதுவும் இல்லை. அவரை வேறு இடத்தில் வைத்து அடித்துக் கொலைசெய்துவிட்டு, உடலை இப்பகுதியில் வீசிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனந்தனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    படப்பை:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சோனு என்கிற பாலாஜி (22).

    ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அதேபகுதியை சேர்ந்த ரசிதா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் நேற்று பாலாஜி மோட்டார் சைக்கிளில் செரப்பணஞ்சேரியில் இருந்து படப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

    வெள்ளேரிதாங்கள் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலாஜி தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    மணிமங்கலம் போலீசார் சடலத்தை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவன் இறந்ததை தாங்க முடியாமல், ரசிதா இரவு முழுவதும் அழுதவாறு இருந்தார். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரசிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.

    பலத்த மழை காரணமாக 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி, பழைய சீவரம், வல்லம் சித்தேரி உள்ளிட்ட 28 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன.

    இவை தவிர 42 ஏரிகள் 80 சதவீதமும், 103 ஏரிகள் 70 சதவீதமும், 385 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவமாகக் கொண்டு அதிக பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 84, உடனடி பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 117 கண்டறியப்பட்டுள்ளன. மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்கள் 183, குறைந்த பாதிப்பு ஏற்படுத்தும் இடங்கள் 131 என மொத்தம் 515 இடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

    இந்த பகுதிகள் பாதிப்பு அடையாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
    கொல்கத்தாவில் இருந்து வந்த சென்னை விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை விமானம் வந்துகொண்டு இருந்தது. அதில் கொல்கத்தா, ராய்ப்பூரை சேர்ந்த நசிருதீன் நிஷா (43) என்பவர் கணவர் நவுசத் அன்சாரியுடன் பயணம் செய்தார்.

    நசிருதீன் நிஷா மருத்துவ சிகிச்சை பெற சென்னை வந்ததாக தெரிகிறது. நடு வானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது நசிருதீன் நிஷாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    இதுபற்றி விமான ஊழியர்கள் சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் நசிருதீன் நிஷாவை பரிசோதனை செய்தனர்.

    அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    படப்பை அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    படப்பை:

    படப்பையை அடுத்த சேர பனஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பாலாஜி என்ற சோனு (வயது 22). ஒரகடம் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சோனு பலியானார்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த அமரன்பேடு கிராமத்தை சேர்ந்தவர் டில்லிகணேஷ் (வயது 36). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார்.

    நேற்று பணி முடிந்து தொழிற்சாலையில் இருந்து தனது மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது சிபிகாட் சாலையில் சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதில் டில்லிபாபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பொன்னேரியை அடுத்த ஆரூர் வடக்குபட்டையை சேர்ந்தவர் வேலு (வயது 52). கூலி தொழிலாளி. இவர், கடந்த 20-ந் தேதி தனது மகனுடன் பொன்னேரி சென்று கொண்டிருந்தார்.

    சிங்கிலிமேடு புற்று கோவில் அருகே சென்ற போது, ஒரு மாடு குறுக்கே வந்தது. இதில், மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

    இதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து கீழே விழுந்த வேலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வேலு மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி அருகே பைக் மீது சொகுசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மதுராந்தகம்:

    கடலூர் மாவட்டம் தச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது28). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ஒருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சூனாம்பேடு அடுத்த கொளத்தூர் சோதனை சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது எதிரே பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற சொகுசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமாரும் அவரது நண்பரும் பலியானார்கள்.

    இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூரில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 13 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள பண்ருட்டி புதுஏரி, எறையூர் தேவனேரி, வல்லம் சித்தேரி, கரூர் தண்டலத்தேரி, கூரம் சித்தேரி, புக்கத்துறை ஏரி உள்பட 13 ஏரிகள் கொள்ளளவை எட்டி உள்ளது.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 324 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 23 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 36 ஏரிகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஏரிகளில் ஓரளவு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி ஏரியில் 1582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1413 கனஅடி ஆக உள்ளது. சென்னைக்கு 464 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.

    புழல் ஏரியில் 3330 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் தற்போது 708 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 520 கனஅடி ஆக உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு 75 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழாவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கனஅடி. தற்போது 121 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 70 கனஅடி ஆகும்.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது வெறும் 44 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. 81 கனஅடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது.


    ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். வரும் காலங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெற கூடாது.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி. ஆனாலும் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு சென்றபோது பைக்கில் இருந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    உத்தரமேரூரை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி விஜயலட்சுமி (58).

    இவர்களுடைய மகள் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள காந்தூர் கிராமத்தில் வசித்து வருகிறார். மகளுக்கு தீபாவளி பலகாரம் கொண்டு செல்ல விஜயலட்சுமி முடிவு செய்தார்.

    இதற்காக தனது மகன் புண்ணியகோடியுடன் மோட்டார் சைக்கிளில் மகள் வீட்டுக்கு புறப்பட்டார். பின்னால் உட்கார்ந்திருந்த அவர் பலகார பையை கையில் வைத்து இருந்தார்.

    மோட்டார் சைக்கிள் சுங்குவார்சத்திரம்- திருவள்ளூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பலகார பையின் கைப்பிடி அறுந்ததால் அதை பிடிக்க முயன்ற விஜயலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் வழியிலேயே விஜயலட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×