search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer died"

    ரெட்டேரி மேம்பாலம் அருகே இன்று காலை கார் தீப்பிடித்து எரிந்ததில் என்ஜினீயர் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாதவரம்:

    சென்னை வடபழனி குமரன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, சாப்ட்வேர் என்ஜினீயர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் தனது காரில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை ரெட்டேரி மேம்பாலம் அருகே கார் வந்தது. அப்போது அங்கு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்காக தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன.

    காரில் வேகமாக வந்த தட்சிணாமூர்த்தி தடுப்புகள் இருப்பதை அருகில் வந்த போதுதான் கவனித்தார். இதனால் காரை திருப்பிய போது தடுப்பு மீது மோதி தாறுமாறாக ஓடி பிளாட் பாரத்தில் ஏறி நின்றது.

    மோதிய வேகத்தில் கார் என்ஜினில் தீப்பிடித்து பரவியது. இதனால் தட்சிணாமூர்த்தி வெளியே வர முடியவில்லை. கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தட்சிணாமூர்த்தியை மீட்க முயற்சித்தனர். ஆனால் கார் கதவுகளை திறக்க முடியவில்லை. அதற்குள் தீ கார் முழுவதும் பரவி தட்சிணாமூர்த்தி கருகி அலறினார். இது குறித்து செம்பியம் தீயணைப்பு நிலையத்துக்குக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். கார் கதவை திறந்து பார்த்த போது தட்சிணாமூர்த்தி கருகி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தட்சிணாமூர்த்தி பலியான தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
    கயத்தாறு அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயமடைந்த நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    கயத்தார்:

    பாளை கே.டி.சிநகரை சேர்ந்தவர் பால சரவணன் (வயது22). என்ஜினீயரான இவர் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் வசித்து வந்தார். இவரது நண்பருக்கு நேற்று சிவகாசியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக பால சரவணன் தனது நண்பர் சென்னையை சேர்ந்த சரத் (22) என்பவருடன் சிவகாசிக்கு வந்தார்.

    திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்கள் இன்று காலை நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடிக்கு வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் பாலசரவணன், சரத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    சிறிது நேரத்தில் பால சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சரத் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் ஆதமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த சரத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான பாலசரவணன் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×