என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நகருக்கு நேரடி விமான சேவை வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் சேவையை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்றது.

    இதையடுத்து, சென்னை- யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை இன்று தொடங்கியது. இன்று பகல் 12.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.

    முதல் நாளான இன்று சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட சிறிய ரக இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 15 பயணிகள் இருந்தனர். விமானி ரத்தன்சிங் இதை ஓட்டிச் சென்றார்.

    இன்று முதல் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இந்த விமானம் செல்கிறது. வரும் நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய பன்னாட்டுமுனை 1-ம் எண் நுழைவுவாயில் அருகே ஒரு மர்ம பை கிடந்தது. நீண்ட நேரமாக இதை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள் பையை எடுத்து சோதனை செய்தனர். அதில் துணிகள் இருந்தது. இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    கீழ்கட்டளையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    கீழ்க்கட்டளை, அம்பாள் நகரை சேர்ந்தவர் முகமது ஆரீப். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் சாவியை வாசலில் கிடக்கும் பழைய செருப்பின் கீழ் வைத்து சென்றுவிட்டார்.

    இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகையை காணவில்லை. மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    முகமது ஆரீப், வீட்டின் சாவியை மறைந்து வைத்திருப்பதை அறிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அருகே சூப்பர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஏரி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.

    அவருடன் இரவில் மது குடிக்க சென்ற அவரது நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ஆதம்பாக்கம் அருகே லிப்ட் பொருத்தியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், ஏ.ஜி.எஸ். காலனி 1-வது தெருவில் புதிதாக 4 மாடி கொண்ட கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மூவரசம்பேட்டையை சேர்ந்த நித்யானந்தம் (20) தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு லிப்டை பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது மின்சாரம் தாக்கி நித்யானந்தன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    படப்பை அருகே பணம் மற்றும் நகை பறித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
    படப்பை:

    படப்பை அடுத்த மககன்யம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. தனியார் கம்பெனி ஊழியர்.

    இவர் கடந்த மாதம் 8-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மககன்யம் கூட்டு சாலையில் வந்தபோது 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி மீனா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, அவரிடம் இருந்த செல்போன், ரூ.700 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுபோல், தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை பார்க்கும் பிரகாஷ் என்பவரை கடந்த மாதம் 28-ந்தேதி 3 பேர் கடத்திச் சென்றனர். அவரிடம் இருந்து ரு.1,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (29), அஜித் (21), மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலி, 2 செல்போன், ரூ.15,000 ரொக்கப்பணம். ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    மாமல்லபுரம் அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் அடித்துகொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த ஏரிக்கரை ஐயப்பன் கோவில் அருகே இன்று காலை 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்டவர் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்களத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பது தெரிந்தது. அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மர்மநபர்கள் அழைத்ததால் அவர் வெளியில் சென்றதாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் ஏரிக்கரை பகுதியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் குறித்துபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இலங்கையில் இருந்து சென்னைக்கு வயிற்றுக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்த பெண்களை பரிசோதனையின் போது வழிமறித்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாம்பரம்:

    இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, திரேசா என்ற 2 பெண்கள் வந்தனர்.

    அவர்களது வயிறு பெரிதாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது 2 பேரின் வயிற்றிலும் சிறிய மாத்திரை வடிவிலான தங்க கட்டிகள் இருந்தன.

    இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து தங்கத்தை வெளியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக ஆஸ்பத்திரிக்கு 2 சுங்க அதிகாரிகள் பெண்களை அழைத்துச் சென்றனர். இதில் பெண் அதிகாரி ஒருவரும் இருந்தார்.

    ஆஸ்பத்திரி அருகில் வைத்து 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வழி மறித்தது. காரில் இருந்து இறங்கியவர்கள் சுங்க அதிகாரிகளை கத்தியை காட்டி மிரட்டி, பாத்திமாவையும், திரேசாவையும் கடத்திச் சென்றனர்.

    அந்த காரை சுங்க அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். ஆனால் கடத்தல் கும்பல் 2 பெண்களுடனும் காரில் தப்பி விட்டது. அயன் சினிமா படத்தில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கடத்தல் கும்பலை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தப்பட்ட 2 பெண்களும் இன்று காலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். சுங்க அதிகாரிகளிடம் சென்று, காரில் கடத்தியவர்கள் இனிமா கொடுத்து தங்களது வயிற்றில் இருந்த தங்கத்தை வெளியில் எடுத்து விட்டதாக தெரிவித்தனர்.

    2 பெண்களிடமும் சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    யாருக்காக தங்கத்தை கடத்தினீர்கள்? என்பது பற்றி இருவரிடமும் சுங்க துறையினர் விசாரித்து வருகிறார்கள். போலீஸ் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    தாம்பரம் அருகே கல்லூரி மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நண்பர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
    காஞ்சிபுரம்:

    தாம்பரம் அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர் முகேஷ். நேற்று அவர் வேங்கடமங்கலத்தில் உள்ள  நண்பர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் முகேஷ் குண்டடி பட்டு சுருண்டு விழுந்தார்.

    துப்பாக்கி சூடு நடந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைந்த மாணவர் முகேசை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார். இவ்விகாரத்தில் தொடர்புடைய அவரது நண்பர் விஜயை போலீசார் தேடி வந்தனர். 

    இந்நிலையில் தேடப்பட்டு வந்த விஜய் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது ஏன் முகேஷை சுட்டார்? மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்ததா? அல்லது முன் விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
    சிங்கப்பெருமாள் கோவில் அருகே இருவேறு விபத்துகளில் ஏ.சி.மெக்கானிக் உள்ளிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் என்.எச்.2 பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 55). இவர் தனது நண்பர்கள் கோவிந்தசாமி, தீபன், பாபு, பிரகாஷ், மனோகரன் ஆகிய 4 பேருடன் நேற்று அதிகாலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே செட்டிப்புண்ணியம் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரமாக நின்றிருந்த தனியார் பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் அமர்ந்து இருந்த பாபு என்பவர் பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், காரில் வந்த கோவிந்தசாமி, தீபன், பிரகாஷ், மனோகர் ஆகிய 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    மேலும் அதே போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ள மகேந்திரா சிட்டி அருகே வரும்போது பின்னால் வந்த போர்வெல் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சக்திவேல் அதே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
    ஆதம்பாக்கத்தில் அக்காள்-தம்பிக்கு அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் புஷ்பவல்லி. இவருக்கு, பவுல்ராஜ்,தனுஷ் என்ற மகன்களும், செவ்வந்தி என்ற மகளும் உள்ளனர். நேற்று புஷ்பவல்லி,பவுல்ராஜ் ஆகியோர் வீட்டில் இல்லை.

    இந்த நிலையில், 11 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்தது. அவர்கள் “பவுல்ராஜ் எங்கே?” என்று கேட்டனர்.

    அப்போது, கும்பலில் இருந்த ஒரு பெண் மிளகாய் பொடியை வீசினார். இதனால், செவ்வந்தி, தனுஷ் ஆகியோர் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் செவ்வந்தி, தனுஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டி தப்பி சென்று விட்டனர்.

    இதில் செவ்வந்தியின் காது வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. தனுசின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

    தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செவ்வந்தி காதில் 7 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் கஞ்சா விற்றவர்கள் குறித்து போலீசில் பவுல்ராஜ் புகார் செய்ததால் அவரை தேடி வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    ஆதம்பாக்கம் போலீசார் இது தொடர்பாக 6 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரம் கடத்திய கார் விபத்துக்குள்ளானதில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜீலியர் சீசர் தலைமையில் இன்ஸ் பெக்டர் பிராபகரன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இன்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

    அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை மடக்கி நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை ஜீப்பில் விரட்டி சென்றனர். அப்போது முன்னால் சென்ற மினி லாரியின் மீது கார் மோதி நின்றது. காரை சோதனை செய்த போது 12 உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் ஆகும். 

    இதைத் தொடர்ந்து கார் டிரைவரான செங்குன்றம் இந்திரா நகரை சேர்ந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.  காளஹஸ்தியில் இருந்து சென்னைக்கு செம்மரக் கட்டளைகளை கட்டத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளையும், கைது செய்யப்பட்ட கார் டிரைவர் சாமுவேலையும் போலீசார் கும்மிடிப் பூண்டி வனசரகர் மாணிக்க வாசகத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ்சில் போலீசார் சோதனை நடத் தினர். அப்போது பஸ்சுக்குள் கேட்பாரற்று கிடந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இது தொடர்பாக இளம்பெண் ஒருவர் உள்பட 2 பேரிடம் காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பி பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×