என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    ஆதம்பாக்கத்தில் அக்காள்-தம்பிக்கு அரிவாள் வெட்டு

    ஆதம்பாக்கத்தில் அக்காள்-தம்பிக்கு அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் புஷ்பவல்லி. இவருக்கு, பவுல்ராஜ்,தனுஷ் என்ற மகன்களும், செவ்வந்தி என்ற மகளும் உள்ளனர். நேற்று புஷ்பவல்லி,பவுல்ராஜ் ஆகியோர் வீட்டில் இல்லை.

    இந்த நிலையில், 11 பேர் கொண்ட கும்பல் அவர்களது வீட்டுக்கு வந்தது. அவர்கள் “பவுல்ராஜ் எங்கே?” என்று கேட்டனர்.

    அப்போது, கும்பலில் இருந்த ஒரு பெண் மிளகாய் பொடியை வீசினார். இதனால், செவ்வந்தி, தனுஷ் ஆகியோர் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் செவ்வந்தி, தனுஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டி தப்பி சென்று விட்டனர்.

    இதில் செவ்வந்தியின் காது வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. தனுசின் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

    தனுஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செவ்வந்தி காதில் 7 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அந்த பகுதியில் கஞ்சா விற்றவர்கள் குறித்து போலீசில் பவுல்ராஜ் புகார் செய்ததால் அவரை தேடி வந்த கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    ஆதம்பாக்கம் போலீசார் இது தொடர்பாக 6 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×