search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சாமுவேல்
    X
    கைதான சாமுவேல்

    செம்மரம் கடத்திய கார் விபத்தில் சிக்கியது- டிரைவர் கைது

    கும்மிடிப்பூண்டி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரம் கடத்திய கார் விபத்துக்குள்ளானதில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜீலியர் சீசர் தலைமையில் இன்ஸ் பெக்டர் பிராபகரன், சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இன்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

    அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சொகுசு காரை மடக்கி நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதையடுத்து போலீசார் அந்த காரை ஜீப்பில் விரட்டி சென்றனர். அப்போது முன்னால் சென்ற மினி லாரியின் மீது கார் மோதி நின்றது. காரை சோதனை செய்த போது 12 உயர்ரக செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் ஆகும். 

    இதைத் தொடர்ந்து கார் டிரைவரான செங்குன்றம் இந்திரா நகரை சேர்ந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.  காளஹஸ்தியில் இருந்து சென்னைக்கு செம்மரக் கட்டளைகளை கட்டத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். காருடன் பிடிபட்ட செம்மரக்கட்டைகளையும், கைது செய்யப்பட்ட கார் டிரைவர் சாமுவேலையும் போலீசார் கும்மிடிப் பூண்டி வனசரகர் மாணிக்க வாசகத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதேபோல் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ்சில் போலீசார் சோதனை நடத் தினர். அப்போது பஸ்சுக்குள் கேட்பாரற்று கிடந்த பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. இது தொடர்பாக இளம்பெண் ஒருவர் உள்பட 2 பேரிடம் காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பி பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×