என் மலர்
காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்தமடம் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் செல்வகுமார் (வயது 26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத்தில் இருந்து ஒரகடம் நோக்கி சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற லாரி ஒரகடம் அருகே வளைவில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயக மூர்த்தி படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைக்கு பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரை சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
வன்முறையற்ற போதை இல்லாத தமிழகம் அமைப்போம் என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 400 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டனர்.
நவம்பர் 25-ந்தேதி கடலூர் மாவட்டம் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து தொடங்கிய இந்த நடை பயணத்தில் 300-க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர். நேற்று மாலை தாம்பரம் வந்தடைந்த இவர்கள் ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினார்கள்.
இன்று காலை அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தாம்பரத்தில் இருந்து பேரணியாக கோட்டைக்கு சென்று, முதல்- அமைச்சரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர். இதற்காக தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஒன்று கூடினார்கள்.
காலை 10 மணியளவில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் கோட்டை நோக்கி செல்ல தயாரானார்கள். அப்போது அவர்களை தடுத்த போலீசார், “கோட்டைக்கு பேரணியாக செல்ல அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து ஊர்வலமாக செல்லக்கூடாது” என்று தெரிவித்தனர்.
இதற்கு ஜனநாயக மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை மீறி ஊர்வலம் செல்ல தயாரான அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து மறியல் செய்தார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனைவரையும் போலீஸ் வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். கைதான பெண்கள் தனியார் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மறியல் காரணமாக காலை 10 மணி முதல் 11 மணி வரை தாம்பரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கைதானவர்களை அங்கிருந்து கொண்டு சென்ற பிறகு போக்குவரத்து சீரானது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது.
காஞ்சிபுரம்:

இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 924 ஏரிகள் உள்ளன. இதில் 555 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 133 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி உள்ளன.
பெரும்பாலான ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. ஏரிகளில் சுமார் 16 டி.எம்.சி. வரை தண்ணீர் இருக்கிறது.
தென்னேரி, மணிமங்கலம், மானாம்பதி, தையூர், கொண்டங்கி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் 576 ஏரிகள் உள்ளன. இதில் 153 ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்றத்தூர் அருகே ஏரியில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மாணவர் உடல் 2 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
சோமங்கலம் அடுத்த பழந்தண்டலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்திக் (17).
இவர் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பர்களுடன் சோமங்கலம் அருகே உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றார். அப்போது ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மீன் பிடி படகில் அனைவரும் ஏறி ஏரிக்குள் சென்றனர்.
ஏரியின் நடுவே படகு ஒன்று நின்றது. படகை திருப்புவதற்கு படகில் இருந்த கார்த்திக், சஞ்சய் ஆகிய இருவரும் ஏரியில் இறங்கி உள்ளனர்.
அப்போது திடீரென நீரில் மூழ்கி உயிருக்கு போராடினார்கள். சஞ்சய் கொஞ்சம் தடுமாறி ஏரியில் சற்று மேடான பகுதியில் நின்றதால் உயிர் தப்பினார். கார்த்திக் ஆழமான பகுதியில் சிக்கியதால் நீரில் மூழ்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார், தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் 2 நாட்களாக கார்த்திக்கின் உடலை தேடிவந்தனர். இன்று காலை கார்த்திக் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதி படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் வரும் நீரையை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குடிநீரில் மழை நீர் கலந்து செம்மண் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை. இவர் திருவான்மியூர் பகுதியில் 5 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் பச்சையப்பா கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தனர். கல்லூரி பேராசிரியர் திருமலை ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன், ரேணுகா தேவி ஆகியோரிடம் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதற்காக மொத்தமாக ரூ. 15 லட்சம் ரொக்க பணமாக பெற்றுள்ளார், அதற்கு நம்பிக்கை சான்றுகளாக ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் இரண்டு காசோலை வழங்கியுள்ளார்.
கடந்த ஒரு வருடமாக வேலைவாங்கிக் கொடுக்காமல் திருமலை ஏமாற்றி வந்தார்.
மேலும் அவர் கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது. இதுபற்றி மணிகண்டன், ரேணுகாதேவி ஆகிய இருவரும் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட திருமலையை கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 153 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பண்ருட்டி புது ஏரி, மாத்தூர் ஏரி, கூரம் சித்தேரி, பனையூர் ஏரி, கரூர் ஏரி, நத்தப்பேட்டை ஏரி, வையாவூர் ஏரி, மாம்பாக்கம் ஏரி, நாவலூர் ஏரி, களியனூர் ஏரி, குண்ணவாக்கம் ஏரி, கடலைப்புத்தூர் ஏரி உள்ளிட்ட 153 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன.
142 ஏரிகள் 50 சதவீதமும், 149 ஏரிகள் 25 சதவீதமும் மற்ற ஏரிகள் இதற்கு குறைவாக நிரம்பியுள்ளன. ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. மதுராந்தகத்தில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மதுராந்தகத்தில் அதிகபட்சமாக 102 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சிபுரம் - 12.40
ஸ்ரீபெரும்புதூர் - 41
உத்திரமேரூர் - 23.50
வாலாஜாபாத் - 22
திருப்போரூர் - 14.30
செங்கல்பட்டு - 49
திருக்கழுக்குன்றம் - 28
மகாபலிபுரம் - 63
செய்யூர் - 29.60
தாம்பரம் - 29
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 98. மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீ.) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி - 92
பள்ளிப்பட்டு - 28
ஆர்.கே.பேட்டை - 11
பொன்னேரி - 75
செங்குன்றம் - 82
செம்பரம்பாக்கம் 93
ஜமீன் கொரட்டூர் - 81
பூந்தமல்லி - 66
திருவாலங்காடு - 53
திருத்தணி - 54
பூண்டி - 72
தாமரைப்பாக்கம் - 77
திருவள்ளூர் - 75
ஊத்துக்கோட்டை - 60

தாம்பரம் அருகே புதையலை மறைத்து வைத்ததாக தொழிலாளி கடத்தி கொலை செய்த வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணாநகரில் வசித்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவர் காட்டுப்பகுதியில் மது குடித்தபோது பாம்பு கடித்ததில் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை மனைவி, மகன் சொந்த ஊரான வேலூரை அடுத்த செய்யாறு கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் முருகன் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த கிராமத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகனின் மனைவி, மகனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, முருகனை புதையலை மறைத்து வைத்து இருந்ததாக கூறி 10 பேர் கும்பல் அடித்து கொன்றது தெரியவந்தது.
10 நாட்களுக்கு முன்பு முருகன் தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார். அப்போது அவரிடம் நிறைய பணம் இருந்தது. பார் ஊழியருக்கு டிப்சாக 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
மேலும் தனது நண்பர் ஒருவருக்கு மது வாங்கி கொடுத்தார். அவரிடம் முருகன் தனக்கு தங்க நகைகள் உள்ள புதையல் கிடைத்ததாகவும், அதை விற்று நிறைய பணம் வைத்து இருப்பதாகவும் கூறினார்.
இதை பாரில் மது குடித்து கொண்டிருந்த கும்பல் ஒன்று கேட்டு கொண்டிருந்தது. புதையல் பற்றி அக்கும்பல் முருகனிடம் கேட்டது. ஆனால் அவர் எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதனால் அவரை கடத்த அந்த கும்பல் முடிவு செய்தது. முருகன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி, மகனிடம் விசாரித்தபோது அவர் சொந்த ஊரான வேலூருக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வேலூருக்கு சென்று முருகனை தாம்பரத்துக்கு அழைத்து வந்தனர்.
முருகன், அவரது மனைவி, மகனிடமும் தங்க புதையலை கேட்டு மிரட்டினர். அப்போது முருகனை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று முருகனின் மனைவி, மகனை அந்த கும்பல் மிரட்டி விட்டு தப்பியது.
இதனால் பயந்துபோன அவர்கள் முருகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக கூறி உடலை எரிக்க உள்ளனர்.
இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தாம்பரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் தாம்பரத்தில் பதுங்கி இருந்த அருண் பாண்டியன், முனியாண்டி, சேகர், எழில்குமார், விக்னேஷ், கந்தன், ஜானகிராமன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இன்னும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

அனகாபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீரென உயிரிழந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்து உள்ளனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(வயது 23). இவர், படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே வேலை தேடி வந்தார். நித்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அவரை அனகாபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்த டாக்டர், நித்யாவை பரிசோதித்து விட்டு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடத்தில் நித்யா, அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி டாக்டர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர், அவரை பம்மலில் உள்ள வேறொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மீண்டும் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நித்யாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நித்யாவின் உயிர் பிரிந்து அரைமணி நேரமாகி விட்டதாக தெரிவித்தனர்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் அலட்சியத்தால்தான் தங்களது மகள் இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கள் மகளுக்கு அனகாபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் அவர் இறந்துவிட்டதாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் நித்யாவின் பெற்றோர் புகார் செய்தனர். ஆனால் சம்பவம் நடந்தது சங்கர் நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் என்பதால் சங்கர்நகர் போலீசில் புகார் செய்யும்படி கூறினர்.
அதன்படி நித்யாவின் பெற்றோர், சங்கர் நகர் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நித்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் இருந்து 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையம், வெளிநாட்டு முனையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பயணிகள் உடமைகளை ஸ்கேன் செய்யும் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அந்த சூட்கேஸை சோதனை செய்தனர். அதில் சுமார் 3 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும். அதனை விட்டுச் சென்ற கடத்தல்காரர்கள் யார்? என்று தெரியவில்லை. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து தங்கம் கடத்தி வந்த சூட்கேசை விட்டுச்சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குள் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வெளிநாட்டவர் ஒருவர் அந்த சூட்கேசை வைத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த நேரத்தில் வந்த ஜெர்மனி, துபாய், ஹாங்காங் நாட்டில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் பட்டியலை வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவிலம்பாக்கம் அருகே பைக் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி:
கீழ்கட்டளை, அம்பாள் நகர், 9-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (28). இவர் பெருங்குடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வேலை முடித்து துரைப்பாக்கம் குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கோவிலம்பாக்கம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த சுரேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.