search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரியை படத்தில் காணலாம்.
    X
    பூண்டி ஏரியை படத்தில் காணலாம்.

    காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் நிரம்பி வழியும் ஏரிகள்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது.
    காஞ்சிபுரம்:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிகிறது.

    இதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 924 ஏரிகள் உள்ளன. இதில் 555 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 133 ஏரிகள் 75 சதவீதமும், 120 ஏரிகள் 50 சதவீதமும், 101 ஏரிகள் 50 சதவீதத்துக்கு கீழும் நிரம்பி உள்ளன.

    பெரும்பாலான ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. ஏரிகளில் சுமார் 16 டி.எம்.சி. வரை தண்ணீர் இருக்கிறது.

    தென்னேரி, மணிமங்கலம், மானாம்பதி, தையூர், கொண்டங்கி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 576 ஏரிகள் உள்ளன. இதில் 153 ஏரிகள் நிரம்பி வழிகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அட்டவணை

    Next Story
    ×