என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கோவிலம்பாக்கம் அருகே பைக் விபத்தில் என்ஜினீயர் பலி

    கோவிலம்பாக்கம் அருகே பைக் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.

    வேளச்சேரி:

    கீழ்கட்டளை, அம்பாள் நகர், 9-வது தெரு சேர்ந்தவர் சுரேஷ் (28). இவர் பெருங்குடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு வேலை முடித்து துரைப்பாக்கம் குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    கோவிலம்பாக்கம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த சுரேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    Next Story
    ×