என் மலர்
காஞ்சிபுரம்
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு சவரத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூர்:
தமிழ்நாடு மருத்துவர் சவரத்தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி.நகர் அன்னை இந்திரா நகரில் உள்ள அச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவு காலத்தில் எங்களது தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தற்போது சிறு, குறு தொழில்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சவரத் தொழிலாளர்கள் வீட்டு வாடகை, கடை வாடகை, மின் கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கட்ட வழியில்லாமலும், உண்ண உணவு இன்றி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.
எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு எந்த மாதிரியான சட்டதிட்டங்களை கொடுத்தாலும் அதை நாங்கள் கடைபிடிக்க தயாராக உள்ளோம். எங்களது கடைக்கு வரும் அனைவரையும் நாங்கள் சமூக இடைவெளியில் வழிநடத்தி ஒவ்வொரு நபருக்கும் முடிதிருத்தம் செய்த பின்னர் அந்த பொருட்களை உரிய கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி அதன் பிறகே மற்றவருக்கு பயன்படுத்துவோம் எனவும் உறுதி அளிக்கிறோம்.
எங்களது சங்கத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து உள்ளார்கள். ஆனால் எங்களது தொழிலில் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் வெறும் 14 ஆயிரம் பேர் மட்டுமே. ஆனால் இதை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர். எனவே எங்களது தொழிலாளர்கள் அனைவரையும் கணக்கீடு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாநில பொருளாளர் சங்கர், இணை பொதுச்செயலாளர் சண்முகம், நிர்வாக குழு தலைவர் பூபதி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் முலாம்பழம் சாப்பிட்ட மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மகன் குடும்பத்தினர் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்துடன் முலாம்பழம் சாப்பிட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் செல்வமணி உள்பட 8 பேருக்கும் திடீர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே செல்வமணியின் தாயார் சொக்கம்மாள் (வயது 80) உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சொக்கம்மாள், சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம் அருகே பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.
கல்பாக்கம்:
கல்பாக்கம் அடுத்த வடபட்டினம் கிராமம் காட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏகவள்ளி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (19), அருணகிரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நந்தினி தனது முதல் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்து இருந்தார்.
இதற்கிடையே சேகருக்கும் அவரது மனைவி ஏகவள்ளிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சேகருக்கும் அவரது மனைவிக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
இதைக்கண்ட மகள் நந்தினி சேகரை கண்டித்துள்ளார். இதனால் சேகருக்கும், அவரது மகள் நந்தினிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு முற்றியதில், நந்தினி அருகில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து திடீரென தனது தந்தை சேகரின் இடது மார்பில் குத்தியுள்ளார்.
இதனால் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த விழுந்த சேகரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்திக்கொன்ற வழக்கில் மகள் நந்தினியை கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஏகவள்ளியும் கைது செய்யப்பட்டார். தாய், மகள் இருவரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
படப்பை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள எருமையூரை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 26). இவர் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட நாட்டு சாராயத்தை எருமையூர் பகுதியில் விற்பனை செய்வதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து, போலீசார் அவரை தேடி வந்த நிலையில், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் தலைமையில் சோமங்கலம் போலீசார், எருமையூர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்த பிரகாஷை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், எருமையூர் சமுதாயக்கூடம் பின்புறம் உள்ள முட்புதர் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாகவும், மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்ததையடுத்து அங்கு அவரை அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு இருந்த 180 லிட்டர் எரிசாராய ஊறல் மற்றும் ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் 20 லிட்டர் நாட்டு சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இது தொடர்பாக பழந்தண்டலம் பகுதி அம்பேத்கர் தெருவை சேர்ந்த அருண்குமார், (29) என்பவரையும் போலீசார் பிடித்தனர்.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
காஞ்சீபுரம்:
கொரோனா வைரஸ் பாதிப்பினை கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துத்துறை சார்ந்த பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது, கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இந்த மாத்திரையை தினமும் ஒன்று வீதம் 10 நாட்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்களும் தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாடுபட்டு வரும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாங்காடு அருகே டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் அவரை கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த மலையம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). டிரைவரான இவர், நேற்று முன்தினம் நண்பருடன் அங்குள்ள செங்கல் சூளைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மர்மநபர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மர்மநபர்கள் ரஞ்சித்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுபற்றி மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து போரூர் உதவி கமிஷனர் சம்பத், மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பொற்பாதம் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொலை வழக்கு தொடர்பாக மலையம்பாக்கத்தைச் சேர்ந்த விமல் (22), பிரேம்குமார்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரை திருமழிசையில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைதான விமல், போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலம் வருமாறு:-
எனது தாயுடன் ரஞ்சித்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதை பலமுறை நேரில் பார்த்த நான், ரஞ்சித்குமாரை கண்டித்தேன். எனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் நான், எனது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தேன்.
எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ள ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான், எனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டேன். அதன்படி ஊரடங்கு காரணமாக வேலை இன்றி வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை, அவரது நண்பர் ஒருவர் மூலமாக சிகரெட் பிடிக்க வரும்படி செங்கல் சூளைக்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தேன். எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கெருகம்பாக்கத்தில் உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக செத்தன.
பூந்தமல்லி:
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய சகோதரர் சேகர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு சொந்தமான 40 ஆடுகளை தினமும் மேய்ச்சல் முடிந்தவுடன் கெருகம்பாக்கம், விக்னேஸ்வரா நகரில் உள்ள ஒரு காலி இடத்தில் அடைத்து விடுவார்கள்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்தது. இதனால் காற்றின் வேகத்தில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து, அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆடுகளின் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து 40 ஆடுகளும் அதே இடத்தில் துடி துடித்து பரிதாபமாக செத்தன. நேற்று காலை ஆடுகளை பார்ப்பதற்காக வந்த கோவிந்தராஜ், ஆடுகள் மீது மின்வயர் அறுந்து கிடப்பதையும், மின்சாரம் தாக்கி ஆடுகள் அனைத்தும் பலியாகி இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயர்மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்லவேளையாக அந்த நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய ஆடுகள் இறந்து போனதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கோவிந்தராஜ், சேகர் இருவரும் வேதனை தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் கார்த்திக் பாலா (வயது 25). இவர், பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் இருசக்கர வாகனங்களுக்கான நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 20 நாட்கள்தான் ஆகிறது.
நேற்று காலை புதுமாப்பிள்ளை கார்த்திக் பாலா, அங்குள்ள ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கார்த்திக் பாலாவை மின்னல் தாக்கியதில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். திருமணமான 20 நாளில் புதுமாப்பிள்ளை இறந்த செய்தியை கேட்டதும் புதுமணப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுதொடர்பாக பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள வளர்புரத்தைச் சேர்ந்தவர் காஞ்சனா. கணவரை இழந்த இவர், தனது மகள் மகாலட்சுமி (16) மற்றும் மகனுடன் வசித்து வந்தார். மகாலட்சுமி பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை மகாலட்சுமி ஊருக்கு வெளியே உள்ள வயல் வெளிக்கு சென்றார்.
அந்தநேரத்தில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது மகாலட்சுமி மின்னல் தாக்கி துடிதுடித்து இறந்தார். இதுபற்றி திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள நேமலூர், தாத்தையார் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரன்(60). தனது வீட்டின் வெளியே இருந்த வைக்கோல் போரை பாலீத்தின் கவர் போட்டு மூடுவதற்காக வெளியே வந்தார். அப்போது மின்னல் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதற்கிடையே திண்டுக்கல் ஒன்றியம் அடியனூத்து அருகேயுள்ள கொல்ராம்பட்டியில் மின்னல் தாக்கியதில் லட்சுமி (38) என்ற பெண் பலியானார். மேலும் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.
சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்துநகர் 12-வது தெரு தெருவைச் சேர்ந்தவர் செல்வின் (49). இரும்பு வியாபாரி. இவர் நேற்று அதிகாலை, பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. பின்னர் அவர் கடை உரிமையாளர் மாதவன்(48) என்பவருடன் சேர்ந்து கடையின் ஷட்டரை தூக்க முயன்றார்.
ஏற்கனவே மழை நீர் பட்டு ஈரமாக இருந்த ஷட்டரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் ஷட்டரை தொட்ட 2 பேரும் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வின் பலியானார். மாதவன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அதேபோல கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆரோக்கியசாமி(55) வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தரையில் கிடந்த மின்வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 30 வீடுகளின் மேற்கூரைகள் சேத மடைந்தன. அதேபோல் தோட்டங்களில் மின்கம்பங் களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
மேலும், மாவட்டம் முழுவதும் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகள் மற்றும் 2 ஆயிரம் பப்பாளி மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

நங்கநல்லூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆலந்தூர்:
சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயமாக முக கவசங்களை அணிய வேண்டும். இல்லை என்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிவித்து இருந்தார்.
இதையடுத்து சென்னை தெற்கு மண்டல துணை கமிஷனர் ஆல்பி ஜான் உத்தரவின்பேரில் ஆலந்தூர் மண்டல அலுவலர் முருகன் மேற்பார்வையில் நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் மண்டல செயற்பொறியாளர் ஹர்டின் ரோசாரியா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா ஆட்டோ மூலமாக மக்களிடத்தில் முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது முக கவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து 4 துணி முக கவசத்தை வழங்கினார்கள். அப்போது கைக்குட்டையால் முகத்தை மூடி சென்றவர்களிடம் முக கவசத்தை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

கேளம்பாக்கம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த சிருசேரியில் மென்பொருள் தொழிற்பூங்கா உள்ளது. இங்கு இந்தியன் வங்கியும், அதன் அருகிலேயே ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.
நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களை அறுத்தனர். பின்னர். ஏ.டி.எம். எந்திரத்தில பணம் வைக்கும் பகுதியில் கள்ளச் சாவி போட்டு திறக்க முயன்றனர்.
இதற்குள் கொள்ளை முயற்சி குறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்துக்கு எச்சரிக்கை வந்தது. உடனடியாக அவர்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்தபோது கொள்ளையர்கள் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை திறக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் உதயம் ஜவுளிக்கடை, உதயம் சூப்பர் மார்க்கெட், ஷரிபா பாத்திரக்கடை ஆகியவை உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை உதயம் சூப்பர் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக பொதுமக்கள் மளிகை பொருட்களை வாங்குவதாகவும், அதே கடைக்குள் உள்ள பாத்திரக்கடை, துணி கடையில் வியாபாரம் நடைபெறுவதாகவும் வண்டலூர் தாசில்தாருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, வண்டலூர் தாசில்தார் செந்தில் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தார். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய பொருட்கள் அல்லாத சில்வர் பாத்திரங்கள் மற்றும் துணிகளை விற்பனை செய்த காரணத்தினால் ஒரே வளாகத்தில் இயங்கிய 3 கடைகளுக்கும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் முன்னிலையில் தாசில்தார் சீல் வைத்தார்.
மேலும் கூடுவாஞ்சேரி பகுதியில் அனுமதியின்றி இயங்கிய முடிதிருத்தும் கடைகளுக்கு எச்சரிக்கை செய்த அவர், ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் புதிய முயற்சியாக தேவையற்ற போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஸ்மார்ட் காப்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அதிகரித்தபடி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த புதிய செயலியை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த செயலி மூலம் 1323 பேர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமூண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, தேவையின்றி நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் ஆகியோரின் விவரங்களை அவர்களின் வாகனத்துடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.
இதில் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நபர் மீண்டும் வந்து வெளியில் சுற்றினால், துல்லியமாக காட்டி கொடுக்கும். பின்னர் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த 3 நாட்களில் விதிகளை மீறியதாக இந்த செயலி மூலம் 1323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.