என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே போதைக்காக வார்னிஷ் குடித்த ஓட்டல் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்திரோடில் உள்ள ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர் சாமிநாதன் (வயது 45). இவர் நேற்று காலை தான் வேலை செய்த ஓட்டலுக்கு அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
போலீஸ் விசாரணையில் சாமிநாதன் போதைக்காக வார்னிஷ் குடித்ததும் அதனால் இறந்ததும் தெரியவந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஒரு சிலர் குடியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சாமிநாதனும் போதைக்காக வார்னிஸ் குடித்து இறந்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5,637 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ள நிலையில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு வேலை செய்து வந்த பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்த அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தது.
இதையடுத்து சொந்த ஊருக்கு செல்லும் வடமாநிலத்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் வைத்திருந்தால் தான் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம், வடகால், பகுதியில் தங்கி உள்ள மேகாலயா மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 32 பேருக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோமங்கலம் அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த வெங்காடு ஊராட்சி இரும்பேடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 32). இவரது மனைவி புவனேஸ்வரி (22). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு சிவரஞ்சனி (1½) என்ற மகள் உள்ளார். புவனேஸ்வரி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சத்யமூர்த்தி தாம்பரத்தில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். கொரோனாவால் கடை மூடப்பட்டுள்ளதால் தற்போது விவசாய வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சில நாட்களாக தகராறு இருந்து வந்தது. இதேபோல் மாமியாரிடமும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் புவனேஸ்வரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
கோயம்பேடு சந்தை தொடர்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.
கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.

உத்திரமேரூர் அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்தார். இதில் அந்த குழந்தை இறந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 32). இவரது கணவர் ஜெகன். வியாசர்பாடியை சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். மகாலட்சுமி கணவரை பிரிந்து குழந்தைகளோடு எல்.எண்டத்தூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக வாலிபர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.
இதன் மூலம் மகாலட்சுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் வீட்டுக்கு வந்த மகாலட்சுமியை அவரது பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
சம்பந்தபட்ட வாலிபரையும் மகாலட்சுமியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி உத்திரமேரூர் அருகே உள்ள மணித்தோட்டம் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையுடன் குதித்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மகாலட்சுமியை மீட்டனர். குழந்தை கிணற்றில் மூழ்கியது. இது குறித்து உத்திரமேரூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டனர். உத்திரமேரூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து சிகிச்சைக்காக 30 மணிநேரம் ஏர்ஆம்புலன்சில் பறந்து சென்னை வந்த வங்கி அதிகாரி, தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆலந்தூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் விஜய்யாசம்(வயது 43). இவர், தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில தினங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்தியாவுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவில் குடும்பத்துடன் உள்ள விஜய்யாசம், இந்தியாவுக்கு வர விரும்பினார்.
பின்னர் வங்கி அதிகாரிகள் முயற்சியால் சிகிச்சைக்காக அவரை இந்தியாவுக்கு ஏர்ஆம்புலன்ஸ் விமானத்தில் அழைத்து வர மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் மூலமாக ஏர்ஆம்புலன்ஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு நேற்று முன்தினம் சென்றது.
அங்கிருந்து வங்கி அதிகாரி விஜய்யாசம் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் புறப்பட்டது. அவர்களுடன் ஒரு டாக்டர், மருத்துவ உதவியாளர் ஆகியோருடன் 2 விமானிகள் ஏர்ஆம்புலன்சை இயக்கினார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து மொரிசியஸ் நாட்டுக்கு சென்றது. அங்கு தேவையான எரிபொருளை ஏற்றிக்கொண்டு மாலத்தீவு வழியாக சென்னைக்கு நேற்று மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வங்கி அதிகாரி சென்னையில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர்ஆம்புலன்ஸ், தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு 21 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 30 மணி நேரம் பறந்து 7 நாடுகள் வழியாக வந்தது. நீண்ட தூர பயணமாக ஏர்ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122 ஆனது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் பகுதியில் ஒருவரும், ஸ்ரீபெரும்புதூரில் 6 பேரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக ஸ்ரீபெரும்புதூரில் ஒருவருக்கும், மண்ணூர் பகுதியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
படப்பை அடுத்த ஆதனூர் ஊராட்சியை சேர்ந்த 53 வயது டிரைவர் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக் கப்பட்டு வருகிறது.
இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122 ஆனது. இவர்களில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து விட்டார். 101 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் கடந்த வாரம் முதல் நோயின் தொற்று வேகமாக பரவி வருகிறது.
நேற்று மட்டும் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 பேருக்கு உறுது செய்யப்பட்டது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 3-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் வெறும் 93 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுடன் உள்ள தொடர்பு காரணமாக நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
இதையடுத்து கோயம்பேடு மார்கெட்டுடன் தொடர்புடையவர்களை கணக்கெடுத்து பரிசோதித்து வருகிறார்கள்.
மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி 38 பேருக்கும், 6-ந்தேதி 9 பேருக்கும், 7-ந்தேதி 13 பேருக்கும், 8-ந்தேதி 26 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்திரமேரூர் அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த வயலூர் கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது பேத்தி சோனியா (14). இவர் நேற்று முன்தினம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்ராசு (24), செல்வராஜ் (60), மன்னன் (22), சக்திவேல் (19) ஆகியோர் சோனியாவிடம் தகராறு செய்து தரக்குறைவாக பேசியதாக கூறப்படுவது. இது குறித்து சோனியா தனது தாத்தா புவனேஸ்வரிடம் கூறி அழுதார்.
இதையடுத்து புவனேஸ்வர் தனது உறவினர்கள் சுப்பிரமணி, உமாதாஸ், விக்னேஷ் ஆகியோருடன் சென்று தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சின்ராசு உள்பட 4 பேரும் புவனேஸ்வர் மற்றும் அவருடன் வந்தவர்களை உருட்டுக்கட்டைகளால் தாக்கினர்.
இதில் புவனேஸ்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின்பேரில் பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புவனேஸ்வர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். மேலும், சின்ராசு, செல்வராஜ், மன்னன், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைதொடர்ந்து மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டு, காய்கறி வியாபாரிகள் அந்தந்த ஊருக்கு திரும்பி சென்றனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து விட்டு திரும்பியவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு நேற்று வெளியானது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன்படி காஞ்சீபுரம் தாலுகாவில் சின்ன காஞ்சீபுரம், திருக்காளிமேடு பகுதிகளை சேர்ந்த கோயம்பேடு வியாபாரிகள் 12 பேர், இவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பெண்கள், 3 ஆண்கள் என 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வாலாஜாபாத் தாலுகாவில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கும், உத்திரமேரூர் தாலுக்காவில் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்ட பெருநகர் பகுதியை சேர்ந்த ஏற்கனவே கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 7 வயது சிறுமி மற்றும் பெண் ஆகிய 2 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் ஸ்ரீபெரும்புதூர் டவுன் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த மார்க்கெட் வியாபாரிகள் 5 பேர், பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த திருமங்கலத்தில் 6 வயது சிறுவன் என 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
குன்றத்தூர் பகுதியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆண்டாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3 பேர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்ற காய்கறிகளை வாங்கி வீடு வீடாக சென்று விற்பனை செய்தனர். இவர்கள் 3 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியானது.
இது தவிர காய்கறி வாங்க கடைக்கு சென்று வந்த குன்றத்தூர், வெங்கடாபுரத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த 2 பேர், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக் கப்பட்டனர்.
குன்றத்தூர் ஒன்றியம் மேல் படப்பை பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக உள்ளார். அவருக்கு நேற்று கொரோனா உறுதியானது. காய்கறி விற்பனை செய்பவர்களான படப்பையை சேர்ந்த 3 பேரும், படப்பை அம்மணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரும், படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 66 வயது காய்கறி வியாபாரி, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த 34 வயது காய்கறி வியாபாரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய காய்கறி வியாபாரி ஆகிய 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதம் உள்ள 75 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரத்தில் நோய்த்தொற்று 36 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.