என் மலர்
காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவேரியம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் லட்சுமியிடம், உங்கள் மகன் செலவுக்கு பணம் வாங்கி வர சொன்னார் என்று கூறி நூதன முறையில் அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து லட்சுமி ஒரகடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மீண்டும் பட்டுச்சேலை விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பட்டுச்சேலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 31-தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது.
தொழில் நிறுவனங்கள், கடைகள், குளிர்சாதன வசதி இல்லாமல் சமூக இடைவெளியுடன் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இதையடுத்து பட்டுச்சேலை விற்பனைக்கு பெயர்பெற்ற காஞ்சிபுரத்தில் மீண்டும் பட்டுச்சேலை விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற கடைகளும் திறக்கப்பட்டு காஞ்சிபுரத்தில் மெல்ல, மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் அரசு பட்டுச்சேலை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவில் வந்து செல்கிறார்கள்.
உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பட்டு சேலைகள் வாங்க ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பட்டுச்சேலைகளை வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தனியார் பட்டுச்சேலை விற்பனை கடைகள் பெரும்பாலும் திறக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து தொடங்கப்படாததால் வெளியூர் வாடிக்கையாளர்கள் வருவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர்கள் இன்னமும் கடைகளை திறக்கவில்லை என்று தெரிகிறது.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜவுளிக் கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஜவுளிக்கடைகள் இருந்தால் திறக்கக்கூடாது . ஏ.சி. இல்லாத கடைகளை மட்டும் திறக்கலாம். ஒருவேளை ஏ.சி. எந்திரங்கள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது .
காலை 10 மணி முதல் 7 மணிவரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் . விற்பனை நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 50). சைக்கிளில் சென்று சமோசா, ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். சிங்காரவேல் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு என்ற இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில் குளிக்க செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று காலை குளிக்க சென்றார். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில், அந்த இடத்தில் மின்கம்பம் சாய்ந்து கிடந்தது. இதை கவனிக்காத சிங்காரவேல் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் விடுவதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த சிங்காரவேலுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கீதா என்ற மகளும் உள்ளனர்.
இதுகுறித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சிபுரத்தில் கூலித் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம் நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சீனிவாசன் என்கிற ரஜினி (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது தங்கை குடும்பத்தினருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெரு ரோடு ஓரத்தில் உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்களுடன் சீனிவாசன் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
அவரை எதற்காக அடித்துக்கொலை செய்தார்கள், குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாங்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அதில் 10 பேருக்கும், ரகுநாதபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் போரூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இவர்களுடன் ஏற்கனவே தங்கி இருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், இவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் வேலை செய்த இடத்தில் ஆய்வு செய்து அங்கிருப்பவர்களிடமும் சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
படப்பையை அடுத்த வரதராஜபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபருக்கும், படப்பை பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இருவரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் உள்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆனது. இவர்களில் 107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட பிரச்சனையில் 3 குழந்தைகளை கொன்று துப்புரவு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவரது மனைவி கோவிந்தம்மாள் என்ற துளசி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி (12), ஷாலினி (10) என்ற 2 மகள்களும், சேதுராமன் (8) என்ற மகனும் இருந்தனர்.
ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி கோவிந்தம்மாள் இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக ஆறுமுகம், கோவிந்தம்மாள் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.
தகராறு ஏற்படும்போது கோவிந்தம்மாள் கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் ஆறுமுகம் மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல ஆறுமுகத்திற்கும் கோவிந்தம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை வேலைக்கு சென்ற கோவிந்தம்மாள் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூத்த மகள் ராஜேஸ்வரி கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தாள்.
இதை பார்த்த கோவிந்தம்மாள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆறுமுகம் மற்றும் 2 குழந்தைகளை தேடினர். ஆறுமுகம் ஊருக்கு அருகே உள்ள சுடுகாடு பக்கத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 2 குழந்தைகளை தேடும்போது அருகே இருந்த கிணற்றில் ஷாலினி, சேதுராமன் இருவரும் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம், ராஜேஸ்வரி, ஷாலினி, சேதுராமன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 மகள்கள் மற்றும் மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாலாஜாபாத் அருகே டாஸ்மாக் கடையை அரசு அனுமதியின்றி ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த ஊத்துக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனை நடைபெறுவதையும் மது பிரியர்கள் நிற்பதையும் படம்பிடிக்க ஆளில்லா குட்டி விமானம் பறந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை அறிந்து ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலர் அருணகிரி வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாலாஜாபாத் போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்து கொண்டிருந்த பாண்டூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 30), லிங்கேஸ்வரன் (28), காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சரண் (23), பாலாஜி (21), உசேன் (29) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். சமூக வலைதளங்களில் வெளியிடவும், செய்தித்தாள், மற்றும் ஊடகங்களுக்கு வழங்குவதற்காக படம் பிடித்ததாகவும் அதற்கான அரசு அனுமதி எதையும் பெறாதது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் யோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், மோட்டார் சைக்கிள், ஆளில்லா குட்டி விமானம் போன்றவற்றை கைப்பற்றினர்.

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகி இருப்பதால் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது.
அதிகாலை முதல் கடல் சீற்றமாக இருந்ததால் மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுஎடையூர்குப்பம், வெண்புருஷம், தேவனேரி, பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதிகாலை கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களும் கடல் சீற்றம் காரணமாக படகில் பத்திரமாக கரை திரும்பினர்.
கடலுக்கு செல்லாத மீனவர்கள் சிலர் கரையில் இருந்து கடலில் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்தனர். 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை சீறி எழும்பி வந்தன. மாமல்லபுரம் கடற்கரையில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரம் நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். தற்போது புயல், பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாததால் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.
ஒரு புறம் கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொரு புறம் அடிக்கடி புயல், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடரால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

படப்பை அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சோமங்கலம் அருகே புதுநல்லூர் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் (வயது 70). இவருடைய மனைவி தங்கரத்தினம் (64). ஜான் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பஜ்ஜி, போண்டா செய்யும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று டாஸ் மாக் கடைகள் திறக்கப்பட்டதால் ஜான் தனது மனைவி தங்கரத்தினத்திடம் மது குடிக்க பணம் கேட்டார்.
அதற்கு தங்கரத்தினம், சாப்பாட்டுக்கே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக் கிறோம் இந்த நிலையில் மது குடிக்க பணம் கேட்கிறீர்களே என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜான் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காட்டுப்பகுதியில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இவரது மனைவி வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் ஜான் தனது மனைவி தங்கரத்தினத்திடம் மது குடிக்க பணம் கேட்டார்.
அதற்கு தங்கரத்தினம், சாப்பாட்டுக்கே பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் இந்த நிலையில் மது குடிக்க பணம் கேட்கிறீர்களே என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜான் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. காட்டுப்பகுதியில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோமங்கலம் போலீசார், ஜான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மது வாங்க அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியது. இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி தமிழகம் முழுவதும் ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது, ஆன்-லைன் மூலம் மதுபானங்கள் விற்கலாம் என கடந்த 8-ந்தேதி உத்தரவிட்டது.
இதனால் திறக்கப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அப்போது மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப் பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் இயங்காது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. திருவள்ளூர், சென்னை மாவட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை.
சென்னையையொட்டி உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 27 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 மதுக்கடைகள் உள்ளன. இதில் காஞ்சிபுரத்தில் 10 கடைகள், வாலாஜாபாத்தில் -3, உத்திரமேரூரில்-3 என மொத்தம் 16 மதுக்கடைகள் மட்டும் திறந்திருந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 மதுக்கடைகள் உள்ளன. இதில் மதுராந்தகம் தாலுக்கா பகுதியில் மதுராந்தகம் டவுன், மாம்பாக்கம், அவுலிமேடு, வேடந்தாங்கல், அச்சரப்பாக்கம், பின்னம் பூண்டி, பெரும்பேர் கண்டிகை உள்ளிட்ட இடங்களில் 9 மதுக்கடைகளும், செய்யூர் தாலுக்காவில் சோத்துப்பாக்கம், செய்யூர் பகுதியில் 2 கடைகளும் என மொத்தம் மாவட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
குறைந்த அளவிலான மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டதால் டோக்கன்கள் வாங்க அதிகாலையிலேயே மதுக்கடைகள் முன்பு குடிமகன்கள் குவியத் தொடங்கினர்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது கடைகள் முன்பு, தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மதுப்பிரியர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டனர்.
சில இடங்களில் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் முண்டியடித்தபடி நின்றனர். சனிக்கிழமையான இன்று கருநீல நிறத்தில் டோக்கன் வழங்கப்பட்டது.
ஆதார் உள்ளிட்ட எந்த அடையாள அட்டையும் காண்பிக்க தேவை இல்லை. மதுக்கடைகள் முன்பு பைகளுடன் மதுப்பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. மதுக்கடைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறைந்த எண்ணிக்கையில் மதுக்கடைகள் திறந்து இருந்ததால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான மதுப்பிரியர்கள் வாகனங்களில் டாஸ்மாக் கடைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அனைத்து மதுக்கடைகள் முன்பும் நீண்ட வரிசை காணப்பட்டது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து குடிமகன்கள் வருவதை தடுக்கவும் மாவட்ட எல்லைகளிலும், மதுக்கடைகள் உள்ள பகுதிகளிலும் போலீசார் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.