என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    திருவண்ணாமலை மாவட்டம் வேன்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி அனுசுயா (வயது 50). இவர் தன்னுடைய மகன் சரண்ராஜ் (30) என்பவருடன் சென்னை பம்மலில் இருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஒரகடம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர்.

    இதில் அனுசுயா படுகாயம் அடைந்தார். அவருடைய மகன் லேசான காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுசுயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே குடிசை எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகல் பகுதியில் உள்ள தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 40). கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. குடிசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி நேற்று வடகல் பகுதிக்கு நேரில் சென்று தேவதாஸ் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிதிஉதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.

    அப்போது மாவட்ட அ.தி.மு.க துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் உடன் சென்றனர்.
    காஞ்சீபுரத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    காஞ்சீபுரம்:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

    அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தரத்துடன் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம், அலுவலர் அறை, பயிற்றுனர் அறை, அலுவலக அறை, ஆண்கள், பெண்கள் உடை மாற்றும் அறை, சமையலறை, உணவருந்தும் கூடம், தங்குமிட வசதி, கணினி அறை, நூலகம், பதிவறை, இருப்பு அறை, முதல் உதவி அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாக நிர்வாக கட்டிடம், பார்வையாளர் மாடத்துடன் கூடிய திறந்தவெளி விளையாட்டரங்கம், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து ஆடுகளங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக வளாகத்தில் சைக்கிளிங் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த ஏதுவாக ரூ.6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 333 மீட்டர் சுற்றளவு கொண்ட சைக்கிளிங் வெலோடிரம், பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியே தங்குமிட வசதி, சைக்கிள் பட்டறை, சைக்கிள் இருப்பு அறை, உடற்பயிற்சிக் கூடம், பயிற்றுனர் அறை, அலுவலக அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.4 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆறு வரிசைகள் கொண்ட 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளப்பாதை என ஒட்டுமொத்தமாக ரூ.27 கோடியே 44 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது விதிகளை மீறி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதே பகுதியில் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    சாலையோரம் நின்ற வேன் மீது மினி பஸ் மோதியதில் தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் தொழிற்சாலை மீண்டும் இயங்க தொடங்கியது. நிர்வாகத்தின் சார்பில் மினி பஸ் மூலம் ஊழியர்களை அழைத்து வந்தனர்.

    நேற்று வழக்கம் போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து மினி பஸ் மூலம் 21 ஊழியர்களை ஏற்றி கொண்டு வந்தனர். மினி பஸ்சை வினோத் ஓட்டி வந்தார். பஸ் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாந்தவேலுர் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் பகுதியை சேர்ந்த அரசு (வயது 34), அதே பகுதியை சேர்ந்த ருக்கு (34), காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியை சேர்ந்த பாலாஜி (25) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்வர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பெண் ஊழியர் அரசு, பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்தருக்கு, பாலாஜி இருவரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    கொரோனா பீதியால் உடல்நலக் குறைவால் இறந்த வாலிபரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    சென்னையில் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடலை கொண்டு வந்த ஆம்புலன்சு மீது கல்வீச்சும் நடந்தது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் உடல்நலக்குறைவால் இறந்த வாலிபரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த நஜ்மல் (வயது 25) என்பவர் திருப்போரூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக அவர் அறையிலேயே முடங்கியிருந்தார். கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    அவரை உடனடியாக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று எதுவுமில்லை. சிறுநீரக பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்த நஜ்மல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது குடும்ப த்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நஜ்மலின் உடலை செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில் உள்ள பெத்தேல் நகர் சுடுகாட்டில் புதைக்க ஆம்புலன்சில் எடுத்துச் சென்றனர்.

    சுடுகாடு அருகே ஆம்புலன்ஸ் வந்து நின்றதும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளியை புதைக்க எடுத்து வந்திருப்பதாக நினைத்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிவித்தனர். எனினும் நஜ்மல் உடலை அங்கு புதைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

    இதையடுத்து, செங்கல்பட்டு டவுனில் உள்ள முஸ்லிம்கள் உடல் அடக்கப்படும் இடத்தில் நஜ்மலின் உடல் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
    சுங்குவார்சத்திரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் அய்யப்பன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்ந்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு விட்டார்
    பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை வீட்டு வெளியேறி 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஊரில் வசித்து வந்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வழக்கம் போல அய்யப்பன் மது குடித்து விட்டு வந்தார். நாகலட்சுமி அய்யப்பன் மது குடிப்பதை கண்டித்து விட்டு அவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் வீட்டில் அய்யப்பன் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு முடிந்து, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களான காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற மையங்களில் நாளை(புதன்கிழமை) முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. அதையொட்டி, விடைத்தாள் திருத்தும் மையமான காஞ்சீபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 52 ஆயிரம் விடைத்தாள் திருத்தும் பணிகள் காஞ்சீபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற இரு மையங்களில் மே மாதம் 27-ந்தேதி முதல் தொடங்குகிறது. 545 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் 64 கூர்ந்தாய்வு அலுவலர்கள், 64 முதன்மை தேர்வு அலுவலர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை கண்காணிக்க உள்ளனர். இவர்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை, கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவிய பின்னரே மையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர். மேலும் நகராட்சி மூலம் மையங்களுக்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, காஞ்சீபுரம் தாசில்தார் பவானி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் காஞ்சீபுரம் நகர் முழுவதும் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், தீயணைப்பு துறையில் உள்ள நவீன கருவிகள் மூலம் கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் விதத்தில் கிரிமி நாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகத்தினருக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தபட்டதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட தீயணைப்பு மீட்புபணிகள் துறையினர், காஞ்சீபுரம் பெருநகராட்சியுடன் இணைந்து காஞ்சீபுரம் நகர் முழுவதும் நவீன எந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளான ராஜவீதிகள், பஸ் நிலையம், அன்னை இந்திராகாந்தி சாலை, சங்கர மடம் சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அதிவேக மற்றும் ஸ்பிரிங்களர் தெளிப்பான் என்ற நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரத்தில் தவறி விழுந்த மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சடையப்பன், இவரது மனைவி மல்லிகா (வயது 73). நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மல்லிகா கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.
    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பெற தகுந்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பிற இடங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திட பாதிப்புக்குள்ளான இடங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை காவல்துறை துணைத்தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான வார்டு 35, கோட்டாராம்பாளையம் தெருவில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களான தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் சுப்பிரமணியன், மற்றும் தமிழ்நாடு கடலோர காவல்படை காவல்துறை துணைத்தலைவர் பவானீஸ்வரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அந்த பகுதி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை பார்வையிட்டு சுகாதார பணிகளை ஆய்வு செய்து மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான தடுப்பு உபகரணங்கள் இருக்கிறதா? என கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான சுகாதாரப்பணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வையாவூரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் மளிகை பொருட்கள் பல்பொருள் அங்காடியை பார்வையிட்டு பொதுமக்கள் முக கவசத்துடன் சமூக இடைவெளி கடைபிடித்து பொருட்கள் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டனர்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் பொன்னையா, காவல்துறை சரக துணைத்தலைவர் தேன்மொழி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி என்ஜீனியர் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    சுங்குவார்சத்திரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புள்ளூர் கிராமத்தைச் சேந்தவர் அன்பு(வயது 45). லாரி டிரைவர். இவர், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் அருகே சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு அதில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் லாரி டிரைவர் அன்புவை கத்தியால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.

    இதுபற்றி சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பாபு(24), விமல்(20), சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்ற நிலா(21) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.3 ஆயிரம், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ×