என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள பள்ளியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் உள்ள 51 ஆயிரம் வீடுகளில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 816 பேர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் முதலில் வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை நடத்தப்படும்.
இதன் பின்னர் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும். மேலும் கொரோனா நோய் தொற்று அறிகுறி இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்படும். அறிகுறி இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை தினசரி 100 பேர் வீதம் 6,700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 206 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் குணம் அடைந்து விட்டனர்.
மாவட்டத்தில் குன்றத்தூரில் மட்டும் 330 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 62 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், இயங்கி வரும் பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதன்மூலம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய வட்டங்களில் உள்ள 846 கிராமங்களை சேர்ந்த சுமார் 3.4 லட்சம் மக்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பணிகளை சிரமமின்றி பெற்று பயனடைவார்கள்.
சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை முறையாக சேமித்து வைக்கும் கிடங்குகளின் கொள்ளளவை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக புதிதாக கூடுதல் கிடங்குகள் கட்டப்படும் என்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் தலா 5 ஆயிரம் டன் கொள்ளளவுடன் மொத்தம் 60 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட 12 சேமிப்பு கிடங்குகள், கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா ஆயிரம் டன் கொள்ளளவுடன் மொத்தம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், புதுக்கோட்டை மாவட்டம் எழுநூற்றிமங்களத்தில் 1,500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, கூட்டுறவுத் துறை சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகக் கட்டிடம் என மொத்தம் ரூ.74.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 சேமிப்பு கிடங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 30 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 வாரிசுதாரர்களுக்கு ஆணைகளை அவர் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளிக் கட்டிடம் மற்றும் அதன் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டிடம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள தீக்காய சிகிச்சைப் பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.24.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
2019-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதியன் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் காஞ்சீபுரம் மாவட்டம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.118.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய ஒப்புயர்வு மையக் கட்டிடம் மற்றும் தஞ்சாவூர், அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டப்படவுள்ள புதிய கண் சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவற்றுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் புராதன சின்னங்களை திறக்கலாம் என்று மத்திய கலாசாரத்துறை அறிவித்து உள்ளது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. இம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் நேற்று திறக்கப்படவில்லை.
இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள், காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. எப்போது திறக்கப்படும் என அறிவிக்காமலேயே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் புராதன சின்னங்களின் உள்பகுதி வெறிச்சோடியே காணப்பட்டது. அங்கு தொல்லியல் துறையின் பாதுகாவலர்கள் மட்டுமே துப்பாக்கி ஏந்திய நிலையில் புராதன நினைவுச்சின்ன பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொரோனா தொற்று குறைந்த பிறகு மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி புராதன சின்னங்களை திறந்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள தளத்தில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவருமே விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பயிற்சி விமானி தமிழகத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா (வயது 20) என்று தெரிய வந்தது. விமான விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பயிற்சியின் போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விமான நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர், தாம்பரம் பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய முகமது கோரியின் மகள் ஆவார்.
உயிரிழந்த விமானிகளில் அனீஸ் பாத்திமாவின் உடல் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அவருடைய சகோதரர் அனுப், ஒடிசா சென்று உள்ளார்.
கேரள மாநிலம் பாலக்கோடு வனப்பகுதியில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த கர்ப்பிணி யானை வெடி பொருள் வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு பலியானது. இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் விலங்கின ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இறந்த யானையின் நினைவாக மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலை கல்லூரியில் உலோக சிற்ப பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் பிரேம்குமார் (வயது 25) சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். வெள்ளை நிற சாக்பீசில் யானை துதிக்கையால் அன்னாசி பழத்தை எடுப்பது போல அழகுற வடிவமைத்துள்ளார். இறந்த யானையின் நினைவாக வடிக்கப்பட்ட இந்த சிற்பம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அவருடைய மகள் சொர்ணா, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜ் கண்டித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவும் இதுபோலவே செல்போனில் தொடர்ந்து பேசிய மகளை, நடராஜ் கண்டித்தார்.
இதனால் மனைவி மற்றும் மகளுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. 2 பேரிடமும் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் செல்போனையும் கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்த நடராஜ், நேற்று காலை மனைவி மற்றும் மகள் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்ய முடிவு செய்தார். ஆனால் அவ்வாறு தான் மட்டும் இறந்துவிட்டால், வயதான தனது தாயை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று கருதி, தாய்மகன் இருவரும் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர் நகர் போலீசார், தூக்கில் தொங்கிய கண்ணம்மாள் உடலை மீட்டனர். உயிருக்கு போராடிய நடராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழிலேயே அவரும் உயிரிழந்தார். இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத்தகராறில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தனது தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 22). இவர் காஞ்சிபுரம் சாலை தெருவில் உள்ள ஒரு வங்கிக்கு வந்து நகையை அடமானம் வைத்தார். நகை அடமானம் வைத்த ரூ.81 ஆயிரத்தை வாங்கி கொண்டு வெளியே வந்த அவர் மாமனார் மேகநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயந்தியும் அமர்ந்திருந்தார்.
காஞ்சிபுரம் அம்பாள் நகர் சந்திப்பு அருகே செல்லும்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மேகநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி ஐஸ்வர்யாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 81 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து ஐஸ்வர்யா, பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து கத்திமுனையில் பணத்தை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்(வயது 73). இவர், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையன், உடல் நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் வருகிற ஜூலை 5-ந்தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்ட தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை வருகிற ஜூலை 6-ந்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி தேதி கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை இருப்பின், அவர்கள் வருகிற 15-ந்தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற 15-ந்தேதியாகும். அன்று மற்றும் அதற்கு பிறகோ இருப்பின் அவர்கள் தங்களுக்குரிய கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அழத்த நுகர்வோர்களை பொருத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் தனது மின் துண்டிப்பிற்கான உரிமையை விட்டு கொடுத்ததினால் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின்கட்டணத்தை முறையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செலுத்தாமல் இருந்தால், அந்த உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை வருகிற 15-ந்தேதிக்குள் செலுத்தலாம். அவர்களுக்கு மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மே மாத உயர் மின்னழுத்த மின் கட்டணத்தை நுகர்வோர்கள் அந்த மாதத்திற்கான குறிப்பிட்ட கெடு தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 24). இவர் பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், தான் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை பதிவு செய்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லிக்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது. இதில் ராஜசேகரன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ராஜசேகரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் மக்கள் பொழுதை கழிக்க வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு அருகே உள்ள ஏரி, குளங்களுக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், பொழுது போக்கவும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிள், கார்களில் கூட்டம் கூட்டமாக வந்து கிருஷ்ணா கால்வாயில் குளித்து மகிழ்கின்றனர். சிலர் அதில் மீன் பிடிக்கின்றனர். யாரும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலேயே கும்பல் கும்பலாக குளித்து மகிழ்கின்றனர்.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. போலீசாரும், சுகாதாரத்துறையினரும் இதை கண்டு கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






