என் மலர்
செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் பகுதி (கோப்பு படம்)
கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று
கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்:
கோயம்பேடு மார்க்கெட் மூலம் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள், வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 7 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் காஞ்சிபுரத்தில் நோய்த்தொற்று 36 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
Next Story






