search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன்
    X
    செல்போன்

    காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்களை பிடிக்க புதிய செயலி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் புதிய முயற்சியாக தேவையற்ற போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஸ்மார்ட் காப்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்கள் அதிகரித்தபடி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த புதிய செயலியை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இந்த செயலி மூலம் 1323 பேர் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமூண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் புதிய முயற்சியாக தேவையற்ற போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஸ்மார்ட் காப்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொண்டு, தேவையின்றி நடந்து செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் ஆகியோரின் விவரங்களை அவர்களின் வாகனத்துடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

    இதில் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நபர் மீண்டும் வந்து வெளியில் சுற்றினால், துல்லியமாக காட்டி கொடுக்கும். பின்னர் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

    கடந்த 3 நாட்களில் விதிகளை மீறியதாக இந்த செயலி மூலம் 1323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×