என் மலர்
காஞ்சிபுரம்
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக முனையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிங்கப்பூருக்கு 12 பெட்டிகளில் சுத்தமான 600 காட்டன் படுக்கை விரிப்புகள் (பெட் சீட்) ஏற்றுமதி செய்யப்படுவதாக எழுதி இருந்தது.
இந்த பெட்டிகள் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த பார்சல் பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்தனர்.
அப்போது பெட் சீட்டுகளுக்கு மத்தியில் மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்து மரக்கட்டைகளை பரிசோதனை செய்ததில் அவை செம்மரக்கட்டைகள் என தெரியவந்தது.
செம்மரக்கட்டைகள் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட சிறப்புமிக்க மர வகை என்பதால் அவற்றை பாதுகாக்கப்பட்டதாகவும், ஏற்றுமதி செய்ய தடை விதித்தும் அரசு அறிவித்து உள்ளது.
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள 495 கிலோ எடைகொண்ட செம்மரக்கட்டைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதை ஏற்றுமதி செய்த நிறுவன உரிமையாளரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளில் செம்மரக்கட்டைகளில் வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுவதால் இவற்றை கடத்த முயற்சி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் அருகே அண்ணன்-தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த செட்டியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 30), சதீஷ்குமார் (28). சகோதரர்கள். இவர்களில் வினோத்குமாருக்கு சுகன்யா (23) என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ்குமாருக்கு கலைவாணி (25) என்ற மனைவியும், 6 மாத குழந்தையும் உள்ளனர்.
கலைவாணி அவரது தாய் வீட்டில் உள்ளார். வினோத்குமார் காஞ்சீபுரம் மண்டித்தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்தார். அவரது தம்பி சதீஷ்குமார் அதே பகுதியில் வாகன பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 1½ ஆண்டுகளாக சகோதரர்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்கள் யாரையும் வீட்டில் சேர்க்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
வினோத்குமாரின் மனைவி வீட்டில் ஒரு அறையில் குழந்தையை கவனித்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமாரும், சதீஷ்குமாரும் அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டனர். நீண்ட நேரமாகியும் உள்ளே சென்றவர்கள் வராததால் சுகன்யா இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இருவரும் அந்த அறையில் இருந்த 2 மின் விசிறிகளில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

படப்பை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாகாண்யம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய், (வயது 25). அதே மாகாண்யம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தேவா (26).
நண்பர்களான இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆப்பூர் கொளத்தூரில் உள்ள தங்கள் நண்பருடைய மகனின் பிறந்த நாள் விழாவுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே வரும்போது முன்னால் சென்ற லாரி மீது இடிக்காமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த தேவா படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த தேவாவை மீட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தோட்டம் பாலாற்று படுக்கையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக மாகரல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் யுவன் போலீசாருடன் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த தூசி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 47), ரமேஷ் (41), பிரகாஷ் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மனாஸ் (25) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 660 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 10 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது மனாஸ், ஹாரூன் ரசித் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

உத்திரமேரூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி லட்சுமி (வயது 46). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது மானாமதி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக மானாமதி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்- மொபட் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளம் பகுதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி (வயது 25), இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணான மைதிலி (45) என்பவரை அழைத்து கொண்டு மொபட்டில் கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அய்யங்கார்குளம்-மோரணம் சாலை பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மைதிலி சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மங்கையர்கரசி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வண்டலூர்:
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மறைமலைநகர் தொழிற்பேட்டை, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, திருக்கச்சூர், பேரமனூர், சட்டமங்கலம், சிங்கப்பெருமாள்கோவில். காட்டூர், கடம்பூர், களிவந்தபட்டு, நின்னக்கரை, காவனூர், காரணைப்புதுச்சேரி, நெல்லிக்குப்பம் ரோடு, கூடலூர், செங்குன்றம், மல்ரோஜாபுரம், கோவிந்தாபுரம், தைலாவரம், பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, நந்திவரம், மகாலட்சுமி நகர், கோவிந்தராஜபுரம், கூடுவாஞ்சேரி டவுன், மாடம்பாக்கம், ஆதனூர், ஊரப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் ஆரணியை சேர்ந்த மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட பாறை சரிவில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். அந்த விபத்தில் சிக்கிய மற்ற 9 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
அதில் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சுரேஷ் (30) செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அந்த கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் ஏலக்காய் மங்கலம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி வேலு (47) ஆகியோரை சாலவாக்கம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கல்குவாரி உரிமையாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் ஒன்றியம் மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறை சரிவு ஏற்பட்டு ஒருவர் இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்து போனார்.
பாறை சரிந்து இறங்கிய இடத்தில் நேற்று காலை 6 மணிக்கு மீட்பு பணி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மீண்டும் பாறை சரிவு ஏற்பட்டு இருந்ததால் மீட்பு பணி தொடங்குவது நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
விபத்து தொடர்பாக கல் குவாரி உரிமையாளர்கள் தேவராஜன், சரவணன், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோர் மீது சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் நேற்று காலை அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி திருமுக்கூடல்-மதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை மாத்திரை, பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 3 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்ட பார்சல்களில் 27 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். பார்சலில் உள்ள முகவரியை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உத்திரமேரூர் அருகே மதூர் கிராமத்தில் கல்குவாரியில் பாறை இடிந்து இறங்கிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார். 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் சென்னையை சேர்ந்த தேவராஜன், சரவணகுமார், ஆறுமுகசாமி, சேகர் ஆகியோருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 9 மணி அளவில் 200 அடி பள்ளத்தில் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கல்குவாரியின் மேற்பகுதி பாறை இடிந்து பள்ளத்துக்குள் இறங்கியது. இதில் கற்குவியலுக்குள் சிக்கி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள நத்தாநல்லூர் பகுதியில் தங்கியிருந்தார். பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளும் கற்குவியலுக்கிடையே சிக்கி கொண்டன.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறைக்கும் மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு போன்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன. டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள், போலீசார் அனைவரும் சேர்ந்து கற்குவியலில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களில் படுகாயம் அடைந்த 2 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த காவல்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
விபத்தில் பலியான மணிகண்டனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.