என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வீட்டின் முன்பு கட்டப்பட்டு இருந்த ஆடுகள் மர்ம விலங்கு தாக்கி பலியான சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளது. வனப்பகுதியான தாளவாடி அருகே உள்ளது சூசைபுரம்.

    இந்த ஊரை சேர்ந்தவர் மாதேவன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி மங்கிலி. இவரது வீடும் தோட்டமும் அடுத்தடுத்து உள்ளது.

    மங்கிலி தனது வீட்டில் 4 மாடுகள், 5 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவற்றை வீட்டின் முன் கட்டி விட்டு படுத்து தூங்குவார். அதே போல் நேற்று இரவும் வழக்கம் போல் வீட்டின் முன் ஆடு- மாடுகளை கட்டி விட்டு மங்கிலி வீட்டில் தூங்கினார்.

    இன்று காலை எழுந்து பார்த்த மங்கிலிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கால் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தது.

    இதில் ஒரு ஆட்டின் முக்கால் வாசி உடலை மர்ம விலங்கு தின்று விட்டது. மற்ற 2 ஆடுகளின் குரல் வளையை மர்ம விலங்கு கடித்து கொன்று இருப்பது தெரிய வந்தது.

    அடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு எந்த விலங்காக இருக்கும் என தெரியவில்லை.

    ஊருக்குள்ளே ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கால் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று விசாரித்து வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் லாரி ஸ்டிரைக் காரணமாக சுமார் 5 ஆயிரம் லாரிகள் இன்று ஓடவில்லை. லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. #LorryStrike
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது, சுங்க சாவடிகள் அகற்ற வேண்டும்,தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் இன்று முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கமும ஆதரவு தெரிவித்து இருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் ஓடையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    லாரிகளில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. லாரி டிரைவர்களும், கிளீனர்களும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் பல்லாங்குழி, தாயம் விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகிறார்கள்.

    லாரி ஸ்டிரைக்கால் ஜவுளி பொருட்கள், மஞ்சள், எண்ணெய் வித்துகள், காய்கறிகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றி செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி கூறியதாவது.-

    எங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறோம்.ஈரோட்டில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பே வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய சரக்குகளின் புக்கிங் நிறுத்தப்பட்டு விட்டது.

    இது எங்கள் வாழ்வாதார பிரச்சனை ஆகும். எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். ஏற்கனவே வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கே பாதுகாப்பாக நிறுத்த அறிவுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பால், மருந்துகளை போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு மட்டும் இந்த ஸ்டிரைக்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LorryStrike
    கொடுமுடி அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே ஒரு சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஆவார்.

    துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள் அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரை சேர்ந்த சரவணன் (வயது 42) என்ற விவசாய கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.

    அவர் பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை சரவணன் ஏமாற்றி காலிங்கராயன் வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

    மேலும் சரவணன் ஏற்கனவே ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சரவணனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு துரத்தியடித்தனர்.

    இதையடுத்து சரவணன் கேரளாவிற்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தில் தனது தாயார் வீட்டுக்கு சரவணன் வந்திருந்தார்.

    அப்போதுதான் மீண்டும் 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்று பொதுமக்களிடம் சிக்கியுள்ளான். கொடுமுடி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ச்சியாக 4 சிறுமிகளை ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதால் சரவணனை கைது செய்து உரிய தண்டணை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு அருகே ஓடும் ரெயில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவுவாயில் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் பையில் கோவையில் இருந்து சேலத்துக்கு செல்லும் ரெயில் டிக்கெட் இருந்தது. இதன் மூலம் அந்த நபர் ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளது.

    எனினும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்தவர் பையில் ஒரு செல்போன் நம்பர் உள்ளது. அதை வைத்து போலீசார் இறந்த நபர் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறார்கள். #tamilnews
    கவுந்தப்பாடி அருகே பள்ளி மாணவியை ஈவ்டீசிங் செய்த சிறுவனை தட்டிகேட்ட தந்தைக்கு அந்த சிறுவன் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள பேராயூர் பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி தனது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருகிறார். அப்போது அந்த மாணவியை செல்லக்குட்டி பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறினார். இதையடுத்து மாணவியின் தந்தை அந்த சிறுவனை பள்ளிக்கு செல்லும் தனது மகளை கேலி கிண்டல் செய்து குறும்பு செய்ததை தட்டிகேட்டார்.

    அதற்கு அந்த சிறுவன் மாணவியின் தந்தையை தகாத வார்த்தையால் திட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்தானாம். இதையடுத்து மாணவியின் தந்தை கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தார். அந்த மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவரை ஈரோடு சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி வழக்கை விசாரித்து கோவை சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு சிறுவனை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த சிறுவன் அங்கு அனுப்பி வைக்கப்பட்டான். #tamilnews
    சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று ஈரோட்டில் மாற்று திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaigirlharassment
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பீனிக்ஷ் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் இன்று ஈரோடு மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்று திளனாளிகள் நல அலுவலகம் முன் திரண்டனர்.

    நலச்சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் மணிகண்டன், பொருளாளர் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 11 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்த 17 கயவர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளம் மற்றும் வீல்சேர் அமைத்து கொடுக்க வேண்டும். மாற்று திறனாளி நல அலுவலக அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களைமாற்ற வேண்டும். போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. #chennaigirlharassment
    அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து ஊழியருக்கு கோர்ட் உத்தரவிட்டும் நஷ்டஈடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை, நேதாஜிவீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். ஈரோடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவசுந்தரி.

    கடந்த 10.6.2005-ம் ஆண்டு ஜெயபிரகாஷ் தனது மோட்டார்சைக்கிளில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வில்லரசம்பட்டி அருகே வந்தபோது ஜெயபிரகாசுக்கு பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபிரகாஷ் இறந்துவிட்டார்.

    இது தொடர்பாக ஜெயபிரகாஷ் குடும்பத்தினர் ஈரோடு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு வழங்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 5 லட்சத்து 90 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் இந்த தொகை போதாது என்று அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதி ரூ.16 லட்சம் வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார்.

    ஆனால் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் ஜெயபிரகாஷ் மனைவி தேவசுந்தரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் வட்டியுடன் ரூ.20 லட்சத்து 20 ஆயிரத்து 9 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று கோர்ட்டு ஊழியர்கள் ஈரோடு பஸ் நிலையத்துக்கு வந்து ஈரோடு-கோவை செல்லும் அரசு பஸ், கோவை-ஆத்தூர் செல்லும் அரசு பஸ் என 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.
    அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை ஆகும்.

    இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் மூலம் சுமார் 2½ லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் தொடங்கும் போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 92.11 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடி 10 ஆயிரத்து 719 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேலும் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் திறந்து விடப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 10 நாட்களில் முழு கொள்ளவை எட்டிவிடும் என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகத்துடன் காவிரி ஆற்றில் வர இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் மேட்டூர் அணைக்கு தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி முதல்-அமைச்சர் பழனிசாமியே நாளை மேட்டூர் வந்து அணையை திறந்து வைக்கிறார்.

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் முதன்முதலில் சேலம் மாவட்டம் பெரும்பள்ளம், சின்னபள்ளத்தை தாண்டி ஈரோடு மாவட்ட நுழைவு பகுதியான நெரிஞ்சிப்பேட்டைக்கு வருகிறது.

    பிறகு அங்கிருந்து அம்மாபேட்டை, சிங்கம் பேட்டை, காடப்பநல்லூர், கேசரிமங்கலம் வழியாக பவானி வந்து பவானி கூடுதுறையில் பவானி ஆற்றுடன் சங்கமித்து ஈரோட்டுக்கு காவிரி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

    பிறகு ஈரோட்டில் இருந்து கொடுமுடி, கரூர், குளித்தலை, முசிறி வழியாக திருச்சிக்கு செல்கிறது.

    மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வேகத்துடன் காவிரி ஆற்றில் வர இருப்பதால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    நாளை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவரி கரையோரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்படும். ஆகவே நாளை ஆற்றில் குளிக்கும் பொதுமக்களும் கரையோரப்பகுதியில் அமர்ந்து துணிகளை சலவை செய்வோர்களும் கவனமாக இருக்க வேண்டும். காவிரி ஆற்றில் குளிக்கும் இளைஞர்கள் ஆற்றின் மையப்பகுதிக்கு வந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த ஊராட்சி மற்றும் பேரூராட்சி சார்பில் பணியாளர்கள் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணையிலிருந்த தண்ணீர் திறக்கப்படும் தேதியை முதல்வர் அறிவித்த முதல் ஈரோடு மாவட்ட காவிரி கரை பகுதியில் உள்ள புல்-பூண்டுகளையும் அந்தந்த பகுதி உள்ளாட்சி பணியாளர்கள் வெட்டி அகற்றி வருகிறார்கள்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியிலும் காவிரிகரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பையும் புதர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்கள்.



    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதையொட்டி இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதை யொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 அயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    நேற்று நீலகிரி மலை பில்லூர் அணை நிரம்பிய தால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் பவானி சாகர் அணைக்கு பாய்ந்து வருவதால் இன்று காலை அணைக்கு நேற்றை விட மூன்று மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று அதிகாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் இன்று காலை 9 மணிக்கு அணையின் நீர் மட்டம் 91 அடியை எட்டியது.

    அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை மேலும் உயர வாய்ப்பு ஏற்படுவடன் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பும் உள்ளது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக் காக 200 கனஅடி வீதம் தடப் பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு வீட்டுக்குள் புகுந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளை நோக்கி படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஈரோடு நாடார்மேடு பகுதி, முத்தம்பாளையம் ஹவுசிங்யுனிட், திண்டல் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக பாம்புகள் நடமாட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஈரோடு நாடார்மேடு பகுதியில் உள்ள ரவிக்குமார் என்பவர் வீட்டில் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

    வீட்டின் பீரோ கீழ் பகுதியில் நெளிந்து கொண்ட இருந்த பாம்பை பார்த்த ரவிக்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சாரை பாம்பை பிடித்தனர்.

    பிடிப்பட்ட சாரை பாம்பு கொடிய வி‌ஷம் தன்மை கொண்டது என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.பின்னர் பாம்பை அடர்ந்த காட்டு பகுதியில் கொண்டு விட்டனர்.

    பவானியில் பெண் ஒருவர் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    பவானி:

    டாஸ்மாக் மதுக்கடையில் போதை ஏற்றி வரும் குடிமகன்களில் சிலர் தெருக்கள் மற்றும் ரோடுகளில் மயங்கி கிடக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

    பவானியிலும் இந்த அவலம் நீடிக்கிறது. இதில் இன்னொரு அவல நிலை என்னவென்றால் ‘‘குடிமகன்’’களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என கூறும் வகையில் சில பெண்களும் ஆங்காங்கே விழுந்து கிடக்கும் அவலமும் அரங்கேறி கொண்டிருக்கிறது.

    பவானி அந்தியூர் பிரிவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    ‘‘என்ன கொடுமை சார் இது’’ என சிலர் தலையில் அடித்தப்படி சென்றனர். ‘‘கலி காலம் முத்தி போச்சு’’ என்றனர் சிலர்.

    வாகனம் ஏதும் அந்த பெண் மீது ஏறிவிடக்கூடாது என பலர் துடித்தனர். போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்தனர். அந்த பெண்ணை எழுப்ப முயன்றும் மயக்கம் தெளியாமல்அந்த பெண் ரோட்டிலேயே கிடந்தார்.

    இதனால் இரக்கப்பட்ட போலீசார் அந்த பெண் மீது வாகனம் மோதாமல் இருக்க அருகே டிவைடரை தள்ளி கொண்டு அந்த பெண் அருகே வைத்தனர். இதனால் அந்த பெண் உயிர் தப்பினார்.

    நீண்ட நேரம் கழித்து அந்த குடிமகளுக்கு மயக்கம் தெளிந்தது. எழுந்த அந்த பெண் ரோட்டிலா இவ்வளவு நேரம் விழுந்து கிடந்தோம்... என்று நினைத்தப்படி வேகமாக நடையை கட்டினார்.

    அந்த பெண் மறையும் வரை வியப்புடன் வேடிக்கை பார்த்தனர் பவானி நகர மக்கள்.
    ×