என் மலர்

  செய்திகள்

  கொடுமுடி அருகே 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி
  X

  கொடுமுடி அருகே 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடுமுடி அருகே பள்ளிக்கு சென்று திரும்பிய 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் கொடு முடி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் அருகே ஒரு சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

  இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஆவார்.

  துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள் அந்த நபரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த நபரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

  பின்னர் அந்த நபரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூரை சேர்ந்த சரவணன் (வயது 42) என்ற விவசாய கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.

  அவர் பாலியல் பலாத் காரம் செய்ய முயன்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் சிறுமியை சரவணன் ஏமாற்றி காலிங்கராயன் வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.

  மேலும் சரவணன் ஏற்கனவே ஊஞ்சலூர் பகுதியை சேர்ந்த 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த பகுதி பொதுமக்கள் சரவணனை பிடித்து தர்ம அடி கொடுத்து ஊரை விட்டு துரத்தியடித்தனர்.

  இதையடுத்து சரவணன் கேரளாவிற்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தில் தனது தாயார் வீட்டுக்கு சரவணன் வந்திருந்தார்.

  அப்போதுதான் மீண்டும் 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்று பொதுமக்களிடம் சிக்கியுள்ளான். கொடுமுடி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  தொடர்ச்சியாக 4 சிறுமிகளை ஏமாற்றி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதால் சரவணனை கைது செய்து உரிய தண்டணை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×