என் மலர்
ஈரோடு
ஈரோடு:
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வெப்ப சலனம் காரணமாக கடந்த 3 நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது.
நேற்று 3-வது நாளாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. மதியம் வரை வெயில் அடித்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 24 மி.மீட்டர் மழை பெய்தது.
மாலை 3.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 4.30 மணி வரை 1 மணி நேரம் கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல கொடுமுடி, மொடக்குறிச்சி பகுதிகளிலும் மிதமாக மழை பெய்தது. ஈரோடு, சென்னிமலை, வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடுமுடி -14.8
வரட்டுப்பள்ளம் அணை -6.8
ஈரோடு -5.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகளவு நடந்து வந்தது. குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பேசியபடி தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து இந்த வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன.
வெண்டிபாளையம் சூரம்பட்டி போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம கும்பல் செல்போன் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு டவுன் போலீசார் வெண்டிப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சுற்றித்திரிந்த 6 சிறுவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் 6 பேரும் ஈரோட்டில் பல்வேறு பகுதியில் செல்போன் திருட்டு செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
6 சிறுவர்களும் குறிப்பிட்ட பகுதிகளை நோட்டமிட்டு தனியாக வருபவர்களிடம் செல்போன்களை அபேஸ் செய்து தப்பி விடுகின்றனர்.அவர்களிடமிருந்து சில செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவர்கள் 6 பேரையும் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
பெருந்துறை:
அசாம் மாநிலம் லக்கம் பூரை சேர்ந்தவர் மனோஜ் கோனே (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கம்பெனி சார்பில் கொடுக்கப்பட்டிருந்த அறையில் தங்கி இருந்தார். அந்த அறையில் கீழிருந்து மேலாக 3 அடுக்கு கொண்ட பெட் (படுக்கை) உள்ளது.
கடந்த 22-ந் தேதி இரவு 10.30 மணிக்கு வேலை முடிந்து பெட்டின் மேல் வரிசை படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக பெட்டில் இருந்து தவறி கிழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது.
உடனடியாக அவரை 108 ஆம்புலன்ச மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோஜ் கோனே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு சோலார் அருகே பூந்துறை ரோட்டில் 60 வயது பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அந்த பெண் பெயர் லட்சுமி என்றும் பல ஆண்டாக குடும்பத்தை பிரிந்து அந்த பகுதியில் பிச்சை எடுத்த பிழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
ரோட்டில் லட்சுமி சம்பவத்தன்று நடந்து வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி படுகாயத்துடன் கிடந்தார். பிறகு 108 ஆம்புலன்சு மூலம் அந்த பெண்ணை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேரத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 25-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பெண்ணின் உறவினர்கள் யார்? என்று தெரியவில்லை. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதே போல் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளத்தில் இருந்து தாமரைகரை செல்லும் ரோட்டில் பலத்த காற்றால் பெரிய மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ரோட்டில் கிடந்த அவர்கள் அப்புறப்படுத்தினர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
அந்தியூர் அருகே உள்ள பட்லூர் பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). பி.இ. பட்டதாரி. ஈரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (23). பட்டதாரி.
இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காதல் ஜோடி ஆனந்தன், கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் மேட்டூர் முனியப்பன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பிறகு அங்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
இதே போல மேலும் 2 காதல் ஜோடிகள் இன்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
ஒரே நாளில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதற்கு ஈரோடு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பற்றி ஈரோட்டில் ‘வாட்ஸ் அப்’பில் வைரலாக பரவும் சிலரது குமுறல்கள் வருமாறு:-
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமாம். ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை, ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.
தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் பார்த்த டாக்டர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள்.
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.
ஆனால் மறந்து வீட்டில் விட்டுவிட்டு வரும் ஹெல்மெட்டுக்காக இரு சக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுமாம். இது என்ன நியாயம்?...
பஸ்சில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே லைசென்சு தரப்படுகிறது. ஆனால் சராசரியாக 110 பேர் வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல் செய்தால் ஈரோட்டுக்கு மட்டும் புதிதாக 250 பஸ் விட வேண்டும்.
ரெயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர்தான் பயணிக்க வேண்டும். சட்டப்படி ரெயில் சென்றால் முதல் பெட்டி திருப்பூரிலும் கடைசிப் பெட்டி ஈரோட்டிலும்தான் நிற்கும்.
ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குமா? ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரி பஸ் ஒருநாள்கூட ஓடாது.
அரசு கேபிள் கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டால் படம் தெரியுமா மக்களுக்கு? பாயிண்ட் டூ பாயிண்ட், எல். எஸ்.எஸ்.,எக்ஸ்பிரஸ் என பஸ் கட்டண கொள்ளையை தடுக்கலாமே? தியேட்டரில் 30 ரூபாய் டிக்கெட் 90 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் மேலும் 20 ரூபாய். சைபர் கிரைம்ல கேஸ் போடலாமா?
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா?
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டுவிட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா?
ஹெல்மெட் என்பது அவசியம்தான் இல்லையென்று மறுக்க முடியாது. அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும். 20-30 கி.மீ. வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதா?
சமீபத்தில் ஹெல்மெட் அணியாத ஒருவரை ஒரு காவலர் விரட்டி அந்த இரு சக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த சட்டம் அமலுக்கு வந்தபின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் 30-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்?
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஹெல்மெட் அணிவதால். சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல், தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது.
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே. அதைவிட்டுவிட்டு அபராதம், பறிமுதல் என்பது சரியா? ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
இவ்வாறு அந்த ‘வாட்ஸ் அப்’ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வந்தது. மீண்டும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கி விட்டதோ என்ற அளவுக்கு வெயில் கொளுத்தியது.
இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். ஆனால் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது.
இந்நிலையில் ஈரோடு மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் வகையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் லேசான மழை பெய்தது. கவுந்தப்பாடியில் அதிகபட்சமான 8 மி.மீ மழை பெய்ந்தது.
நேற்றும் 2-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வாக பகுதியில் மழை நீர் புகுந்தது.
இதே போன்று தாளவாடி, சென்னிமலை, அம்மாபேட்டை போன்ற பகுதியிலும் மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மதியம் 3 மணிக்கு மேல் கருமேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த மழை பெய்ந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-
வரட்டுப்பள்ளம்-11.8, அம்மாபேட்டை-6.4, ஈரோடு -6, தாளவாடி -4.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து பேசினார்.
சுதந்திரம் பெறுவதற்காக நமது நமது நாட்டில் எத்தனையோ தியாகிகள் உள்ளனர். அவர்களில் நாடு சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர் தான் லட்சுமண அய்யர்.
மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் ஆவார். அவரது சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.
கலாசாரம் பண்பாட்டை நாம் பேணி காக்க வேண்டும். விவேகானந்தர் சகோதரர்-சகோதரிகள் என ஏன் அழைத்தார்? அது நம் கலாசாரம் ஆகும்.
அதுபோல அரிசன், சேவா சங்கத்துக்கு அயல்நாட்டுக்காரர்கள் ஏன் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும்?
நமக்கு நாமே சேவை செய்ய வேண்டும். அந்த நோக்கில்தான் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன் சேவா சங்கம் கோபி என்ற இந்த கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தியாகி லட்சுமணன் உழைத்து அதை வளர்த்துள்ளார்.
நன்றாக படித்து நமது கலாசாரத்தை காக்க வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறேன்.
கடவுளை வழிபடுவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கடவுளை வழிபட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். வன்முறையும் குறையும்.
எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம் நாட்டில் நிலவும் 100 சதவீத ஊழலை ஒழிக்க முடியும். தற்போது நமது நாட்டில் எளிமையான வாழ்க்கை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இரவு தூங்கும் முன் கூட கடவுளை அனைவரும் வழிபட வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.
இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.
முன்னதாக கவர்னர் பேசும்போது தமிழில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சை ஆரம்பித்தார். #TNGovernor #BanwarilalPurohit
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.-
தி.மு.க.வின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இயக்கத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் திறமை படைத்த நீங்கள் (ஸ்டாலின்) சாதனைப் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். ஒவ்வொரு பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னரே அந்தப் பணியை செய்து கொண்டிருக்கின்ற பெருமை புதிய தி.மு.க தலைவருக்கு உண்டு.
துணை முதல்வராக ஆவதற்கு மூன்று ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை ஆற்றிக் கொண்டிருந்தவர். செயல் தலைவராவதற்கு 10 ஆண்டுகள் முன்னால் இருந்தே அந்தப் பணியை செய்து கொண்டிருந்தவர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே தி.மு.கவை வழி நடத்துகின்ற பொறுப்பை ஏற்று தலைவருக்கான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தவர்தான் ஸ்டாலின். இப்படித்தான் அவருக்கு பதவிகள் வந்திருக்கின்றன. மிக மிக பொறுமையாக இருந்துதான் இப்போது தலைவராகியிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும் ஒரு மாநில முதல்வர் எப்படி இயங்க வேண்டுமோ அப்படித்தான் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் முதல்வர் நாற்காலியை அடுத்து அலங்கரிப்பார் மு.க.ஸ்டாலின்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருக்கின்ற மூத்த தலைவர் மரியாதைக்குரிய துரைமுருகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாதி பாளையம் மற்றும் கொளப்பலூர் ஆகிய ஊராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.54 கோடி மதிப்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
இந்த கட்டிட பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நம்பியூர், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளியிலும் படித்த மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்கு உதவவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்கள் அன்புள்ளம் கொண்டவர்களும் முன் வந்துள்ளனர்.
அவர்களுடன் அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள 57 ஆயிரம் அரசு பள்ளிகளில் தனியாரை மிஞ்சுகின்ற அளவிற்கு கடடமைப்பு வசதிகளுடன், உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டுள்ளேன். மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும். 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்துரவிச் சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம் சிறுவலூர் மனோகரன், பிரினியோ கணேஷ், கந்த வேல் முருகன், காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan
ஈரோடு:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒருநாள் சுற்றுப்பயணமாக இன்று ஈரோடு வந்தார்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்த அவரை ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், ஏ.டி.எஸ்.பி. பாலாஜி சரவணன், டவுண் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.
மேலும் அதே ரெயிலில் வந்த மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணியும் கவர்னர் பன்வாரிலாலை வரவேற்றார்.
வரவேற்பை பெற்றுக்கொண்ட கவர்னர் பிறகு நேராக காலிங்கராயன் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.
அங்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து காலை 9 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் கோபிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
கவர்னர் வருகையையொட்டி கோபிக்கு செல்லும் இரு வழியிலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபி வாய்க்கால் ரோட்டில் உள்ள டி.எஸ். ராமன் விடுதியில் உள்ள தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடக்கிறது. விழாவில் தியாகி லட்சுமணன் சிலையை கவர்னர் பன்வாரிலால் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கலெக்டர் பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
விழா முடிந்ததும் மதியம் மீண்டும் காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.
அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்கிறார்.
மாலை 4.30 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணியை மேற்கொள்கிறார். #TNGovernor #BanwarilalPurohit






