என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாயின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி உள்ளது.

    அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது நாகரிகம் அல்ல என்பதுதான் எனது கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
    பவானிசாகர்:

    தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணையாகவும் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மண் அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 173 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.80 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்கு வினாடிக்கு 450 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 483 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 101.82 அடியாக இருந்தது. தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் மழை பெய்யாததால், பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வழக்கம்போல் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பாசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ள இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள், கொப்பு வாய்கால்கள் வழியாக விவசாய விளைநிலங்களில் பாய்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் உள்ள பெரியார் நகர் அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் வாய்க்கால் தண்ணீர் ரோட்டில் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் வயல்வெளிகளில் புகுந்தது. உடனடியாக உடைப்பு சரி செய்யப்படாததால் அங்குள்ள ஒரு கிணறு முழுமையாக தண்ணீரால் நிரம்பியது. கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் அதற்கு பின்னர் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது தடையானது. வாய்க்கால் கரைகள் மண்ணால் அமைக்கப்பட்டதாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமாகி வருவதாகவும், உடைப்புகளை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    சத்தியமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் அங்குள்ள கடைகளில் சோதனையிட்டனர். அப்போது அங்குள்ள ரவி, கோபி ஆகியோர் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது தினசரி மார்க்கெட்டுக்கு ராம் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதற்காக கொண்டு வந்ததையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து ரவி, கோபி, ராம் மற்றும் கோபி கடையில் வேலை செய்த சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
    கொடுமுடி பகுதியில் முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கொடுமுடி:

    கொடுமுடி பைபாஸ் ரோட்டில் கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 400 அபராதமாக விதிக்கப்பட்டது.

    இதேபோல் கொடுமுடியை அடுத்த க.ஒத்தக்கடை பகுதியில் உள்ள கரூர்- ஈரோடு பைபாஸ் ரோட்டில் கொடுமுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன், வெங்கம்பூர் பேரூராட்சி செயல் அதிகாரி மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்ததாக 10 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அளவை கண்காணிக்க நவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
    பவானிசாகர்:

    தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அணையாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் உயரம் 105 அடியாகும்.

    அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தண்ணீர் அளவீட்டு கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அணைக்கு வரும் நீர்வரத்து பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. அதன் விவரத்தை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது உயர்அதிகாரிகள் பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் நீர்வரத்து அளவிடும் கருவி அமைந்துள்ள அறையில் தற்போது நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இணையதள வசதி மூலம் நீர்வரத்து அளவிடும் கருவியில் உள்ள அளவீடுகளை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய 3 பேர் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோ (வயது23). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி ரம்யா (23). இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக இளங்கோ வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர் வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது இளங்கோவும்-ரம்யாவும் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 மாதமே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). பெயிண்டர். இவருடைய மனைவி ஜெனிசா (28) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கோவிந்தராஜுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கோவிந்தராஜ் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோவிந்தராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆப்பக்கூடல் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 11-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கரட்டுர் மேட்டை சேர்ந்தவர் மாதன். கூலி தொழிலாளி. இவருக்கு மாலதி (17), சவுந்தர்யா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மாலதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சவுந்தர்யா அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சவுந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் மாலதி பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சவுந்தர்யா தனது கையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேனாவில் எழுதி இருந்தது தெரியவந்தது.

    பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு தாலுகா போலீசார் பச்சப்பாளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி அருகே உள்ள வாண்டான் விடுதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 21) என்பதும், அவர் அந்த பகுதியில் நின்று கொண்டு மது விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஈரோட்டில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் சம்பவத்தன்று தனது நண்பரை சேலம் செல்ல பஸ் ஏற்றி விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் ஈரோடு பஸ் நிலையம் வந்தார். பின்னர் மேற்கு பக்க நுழைவு வாயில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது நண்பரை பஸ் ஏற்றச்சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் டவுன் கிரைம் போலீசார் நேற்று ஈரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கருங்கல்பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 20) மற்றும் 19 வயது வாலிபர் என்பதும், அவர்கள் ஓட்டி வந்தது முருகனின் மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவர், ஈரோடு மேட்டூர் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய மோட்டார் சைக்கிளையும் திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ் மற்றும் 19 வயது வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று கூறி ரிங்ரோடு விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் மேடு (பெருந்துறை ரோடு) முதல் நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டை வரை ரிங்ரோடு (சுற்று வட்டச்சாலை)அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. கொக்கராயன் பேட்டை முதல் லக்காபுரம் வரையும், லக்காபுரம் முதல் ஆனைக்கல்பாளையம் வரையும் பணிகள் முழுமையாக முடிந்து வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

    ஆனைக்கல்பாளையம் முதல் ரங்கம்பாளையம்வரையும், ரங்கம்பாளையம் முதல் திண்டல் மேடு வரையும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்காரணமாக பணிகள் முழுமையாக முடியவில்லை. கிராமிய சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் ஈரோடு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரிங்ரோடு வழக்குகள் தீர்வு காணப்பட்டு விரைவில் பணிகள் நிறைவடையும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்கினர். ரங்கம்பாளையம் பகுதியில் தடையாக இருந்த வீடு அகற்றப்பட்டது.

    இதுபோல் திண்டல் மேடு, பவளத்தாம்பாளையம் ஒட்டிய பகுதிகளில் ரிங்ரோடு நில அளவை செய்யப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் நேற்று, அந்த பகுதி விவசாயிகள் கூடி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் என்பவர் கூறியதாவது:-

    ரிங்ரோடு அமைக்கும் பணிக்காக, அதிகாரிகள் முறைகேடாக நிலம் கையகப்படுத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள். விவசாய நிலங்களை விவசாயம் செய்யப்படாதவை என்று தவறாக குறிப்பிட்டு உள்ளனர். மனை அங்கீகாரம் பெற்ற நிலங்களையும் அங்கீகாரம் இல்லாததாக பதிவு செய்து உள்ளனர். இதனால் நில உரிமையாளர்கள், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்காது. எனவே முழுமையான இழப்பீடு தரும்வரை நிலம் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×