என் மலர்
செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கரட்டுர் மேட்டை சேர்ந்தவர் மாதன். கூலி தொழிலாளி. இவருக்கு மாலதி (17), சவுந்தர்யா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
மாலதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சவுந்தர்யா அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சவுந்தர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அக்காள் மாலதி பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சவுந்தர்யா தனது கையில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேனாவில் எழுதி இருந்தது தெரியவந்தது.
பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.






